உள்ளடக்கத்துக்குச் செல்

கபில வயிற்றுப் பூங்குயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கபில வயிற்றுப் பூங்குயில் (Phaenicophaeus sumatranus) என்பது குயிற் குடும்பத்தில் பூங்குயில் பேரினத்தில் உள்ள ஒரு அழகிய பறவையாகும். இவ்வினம் புரூணை, இந்தோனேசியா, மலேசியா, மியன்மார், சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற தென்கிழக்காசிய நாடுகளில் காணப்படுகின்றது.

இதன் இயற்கை வாழிடங்கள் அயன மண்டல மற்றும் துணை அயன மண்டல ஈரலிப்பான தாழ்நிலக் காடுகளும் துணை அயன மண்டல அல்லது அயன மண்டலக் கண்டற் காடுகளும் ஆகும். தென்கிழக்காசியாவில் இவ்வினத்தின் வாழிட இழப்பு இதன் இருப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

கபில வயிற்றுப் பூங்குயில் என்பது கபில மார்புப் பூங்குயில் இனத்திலும் வேறுபட்டதாகும்.

மூலம்

[தொகு]