பீப்புப் பாடல்
"பீப்புப் பாடல்" | |
---|---|
பாட்டு by சிலம்பரசன் (பாடகர்)[1] | |
எழுதியவர் | சிலம்பரசன்[2] |
மொழி | தமிழ் |
என்ன ***க்கு இலவ்வு பண்ணுறோம் எனத் தொடங்கும் பீப்புப் பாடல் அல்லது பீப் பாடல் (Beep song) என்பது 2015இல் இணையத்தில் கசிந்து, சச்சரவை ஏற்படுத்திய, அலுவன்முறையாக வெளியிடப்படாத ஒரு தமிழ்ப் பாடல் ஆகும்.[3][4][5] சிலம்பரசன் இப்பாடலை எழுதிப் பாடியுள்ளார்.[6] தனிப்பட்ட முறையில் சிலம்பரசனால் பாடப்பட்ட இப்பாடல், நிறைவுறாத நிலையிலே திருடப்பட்டு, இயூட்டியூபில் வெளியிடப்பட்டது.[7][6] இப்பாடலுக்கு அனிருது இரவிச்சந்திரன் இசையமைத்துள்ளதாகக் கூறப்பட்டது.[8] ஆயினும், இதனை அனிருது இரவிச்சந்திரனும் சிலம்பரசனும் மறுத்துள்ளனர்.[9][1]
சச்சரவு
[தொகு]பீப்புப் பாடல் பெண்களை இழிவுபடுத்துவதாக உள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.[10] இதனையடுத்து, சிலம்பரசன், அனிருது இரவிச்சந்திரன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு சனநாயக மாதர் சங்கத்தினர் கோவைக் காவல் துறையில் முறைப்பாடு அளித்தனர்.[11] இப்பாடலில், பீப்பு ஒலி கொண்டு மறைக்கப்பட்ட சொற்களைப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.[4][5]
பீப்புப் பாடலுக்குப் பெண் ஒருவர் பதிலளிக்கும் வகையிலும் எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும் அமைந்த ஒரு பாடலும் சிவரஞ்சனியால் பாடப்பட்டு, மதராசு செண்டிரலால் வெளியிடப்பட்டது.[12]
மாற்றுக்கருத்துகள்
[தொகு]அலுவன்முறையாக வெளியிடப்படாத இப்பாடலைக் கேட்டுவிட்டு, சிலம்பரசனையும் அனிருது இரவிச்சந்திரனையும் திட்டுவதற்கு உரிமையில்லை எனத் திரைப்படத் திறனாய்வாளரான பிரசாந்து கருத்துத் தெரிவித்துள்ளார்.[13] இப்பாடலில் நல்ல கருத்துகளும் கூறப்பட்டிருப்பதாகத் தி. இராசேந்தர் தெரிவித்துள்ளார்.[14] மேலும், சிலம்பரசனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவருடைய சுவடர்கள் நால்வர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.[15]
2016 புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது, சென்னையிலுள்ள ஒரு விருந்து மண்டபத்தில் பீப்புப் பாடல் ஒலிக்கவிடப்பட, அதற்கு இளைஞர்கள் நடனமாடினர்.[16]
வழக்கு
[தொகு]சிலம்பரசன், அனிருது இரவிச்சந்திரன் ஆகிய இருவர் மீதும் கோவைக் காவல் துறையினரும் சென்னைக் காவல் துறையினரும் தனித்தனியாக வழக்குத் தொடர்ந்துள்ளனர்.[17] இப்பாடலைக் குமுக வலைத்தளங்களிலிருந்து அகற்றுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.[17] இப்பாடலைப் பதிவேற்றம் செய்தவரின் விவரத்தை வழங்குமாறும் பாடலை அகற்றுமாறும், சென்னைக் காவல் துறை இயூட்டியூபிடம் கோரியுள்ளது.[18][19] இப்பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ள கெட்ட சொற்கள் பீப்பு ஒலியால் மறைக்கப்பட்டுள்ளதால், பாடலை அகற்றவேண்டிய தேவை இல்லையென இயூட்டியூபு மறுத்துள்ளது.[20]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "பீப் பாடலுக்கும் அனிருத்துக்கும் தொடர்பில்லை: நடிகர் சிலம்பரசன் பேட்டி". தி இந்து. 20 திசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 23 திசம்பர் 2015.
- ↑ "பீப் பாடல் விவகாரம்: நடிகர் சிம்புவை கைது செய்ய தனிப்படை தீவிரம்". தினகரன். 23 திசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 23 திசம்பர் 2015.
- ↑ DN (20 திசம்பர் 2015). "பீப் பாடல் விவகாரத்தில் சிம்பு, அனிருத் மீதான பிடி இருகிறது; சென்னைப் போலீஸாரும் வழக்குப் பதிவு". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 23 திசம்பர் 2015.
- ↑ 4.0 4.1 ச. அருண் (13 திசம்பர் 2015). "'பீப்' பாடல்: சிம்பு, அனிருத் தங்கள் வக்கீல் மூலம் பதில்!". விகடன். பார்க்கப்பட்ட நாள் 23 திசம்பர் 2015.
- ↑ 5.0 5.1 சாருநிவேதிதா (13 திசம்பர் 2015). "சிம்பு, அநிருத் இருவரின் சமூக விரோத செயல்!". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 23 திசம்பர் 2015.
- ↑ 6.0 6.1 "ஆபாச பாடல் பிரச்சினையில் மேலும் 2 வழக்கு பதிவு முன்ஜாமீன் கேட்டு நடிகர் சிம்பு மனு ஐகோர்ட்டில் இன்று விசாரணை". தினத்தந்தி. 22 திசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 23 திசம்பர் 2015.
- ↑ "மன்னிப்பு கேட்பது மாபாதகமா?: தலையங்கம்". மாலைமலர். பார்க்கப்பட்ட நாள் 23 திசம்பர் 2015.
- ↑ ஸ்கிரீனன் (19 திசம்பர் 2015). "'பீப்' பாடல் குறித்து ரஜினியிடம் கேளுங்கள்: கங்கை அமரன் காட்டம்". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 23 திசம்பர் 2015.
- ↑ DN (14 திசம்பர் 2015). "பீப் பாடல்: அனிருத் & டி. ஆரின் முரண்பட்ட விளக்கங்கள்!". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 23 திசம்பர் 2015.
- ↑ "'பீப்' பாடல் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது: நடிகர் சங்கம் கண்டனம்!". விகடன். 21 திசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 24 திசம்பர் 2015.
- ↑ ச. ஜெ. ரவி (12 திசம்பர் 2015). "பீப் பாடல்: சிம்பு, அனிருத்துக்கு எதிராக மாதர் சங்கத்தினர் போலீசில் புகார்; ஆர்ப்பாட்டம்!". விகடன். பார்க்கப்பட்ட நாள் 24 திசம்பர் 2015.
- ↑ எம். மணிகண்டன் (25 திசம்பர் 2015). "இது பதிலடி 'பீப்'!". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 31 திசம்பர் 2015.
- ↑ Tamil Cinema Review (12 திசம்பர் 2015). "Whats wrong with Beep song?". YouTube. பார்க்கப்பட்ட நாள் 24 திசம்பர் 2015.
- ↑ "மகனுக்கு டி.ராஜேந்தர் வக்காலத்து: 'பீப்' பாடலில் நல்ல கருத்து உள்ளது". தினமலர். 22 திசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 24 திசம்பர் 2015.
- ↑ ஸ்கிரீனன் (21 திசம்பர் 2015). "'பீப்' பாடல் சர்ச்சை: சிம்பு ரசிகர்கள் 4 பேர் தற்கொலை முயற்சி". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 24 திசம்பர் 2015.
- ↑ "'பீப்' பாடலுடன் சென்னையில் புத்தாண்டு உற்சாகக் கொண்டாட்டம்!". விகடன். 1 சனவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 1 சனவரி 2016.
- ↑ 17.0 17.1 "சமூக வலைதளங்களில் இருந்து 'பீப்' பாடலை உடனடியாக அகற்ற வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு". தி இந்து. 23 திசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 24 திசம்பர் 2015.
- ↑ "பீப் பாடலை பதிவேற்றியது யார்?- யூடியூபிடம் விவரம் கோரியது சைபர் கிரைம் போலீஸ்". தி இந்து. 23 திசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 24 திசம்பர் 2015.
- ↑ "10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கேட்ட 'பீப்' பாடலை யூடியூப்பில் அகற்றுவதில் நீடிக்கும் சிக்கல்: போலீஸார் குழப்பம்". தி இந்து. 27 திசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 31 திசம்பர் 2015.
- ↑ "யூடியூப் நிர்வாகம் சிம்பு பாடலை அகற்ற மறுப்பு". வணக்கம் லண்டன். 27 திசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 31 திசம்பர் 2015.