உள்ளடக்கத்துக்குச் செல்

பிரானூர்

ஆள்கூறுகள்: 8°58′N 77°17′E / 8.97°N 77.28°E / 8.97; 77.28
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரானூர்
பிரானூர்
அமைவிடம்: பிரானூர், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 8°58′N 77°17′E / 8.97°N 77.28°E / 8.97; 77.28
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தென்காசி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஏ. கே. கமல் கிஷோர், இ. ஆ. ப
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

பிரானூர் (ஆங்கிலம் : en:Piranoor), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டத்தில் இருக்கும்[3] ஒரு ஊர் ஆகும். இது தென்காசி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது.[4]

இவ்வூரின் சிறப்புகள்

[தொகு]

செங்கோட்டை பார்டர்

[தொகு]

1956ம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படும் வரை இது சென்னைமாநிலத்தின் தமிழகஎல்லையாக (சுங்கவரி சோதனைச்சாவடி) இருந்ததால் இவ்வூருக்கு பார்டர் எனும் பெயர் வழக்கு சொல் வந்தது.

தீப்பாச்சி அம்மன் கோயில்

[தொகு]

இவ்வூரில் சிறப்பு வாய்ந்த தீப்பாச்சி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை மாதத்தில் கோயில்கொடை எனப்படும் திருவிழா சிறப்பாக நடைபெறும்.

மாலை சிற்றுண்டிச்சாலை

[தொகு]

இவ்வூர் இரு மாநில எல்லை பகுதியாக இருந்ததால் போக்குவரத்து வாகனஓட்டிகள் வாகனங்களை நிறுத்தி மாலை உணவகங்களில் பரோட்டா சாப்பிட்டு ஓய்வெடுத்து செல்வது வழக்கம்.

சுற்றுலா தலங்கள்

[தொகு]

குற்றால அருவிகள்

மர அறுவைஆலை

[தொகு]

இவ்வூரில் உள்ள பல மர அறுவைஆலைகள், வெளிநாட்டிலிருந்து பெரிய மரத்தடிகளை இறக்குமதி செய்து தேவைப்படும் அளவுகளில் அறுப்பு செய்யும் தொழில் நடத்துவதால் சுற்று வட்டார மக்களுக்கு வேலைவாய்பை அளிக்கின்றது.

ஆதாரங்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-08-08. பார்க்கப்பட்ட நாள் 2012-01-21.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-08-08. பார்க்கப்பட்ட நாள் 2012-01-21.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரானூர்&oldid=3563581" இலிருந்து மீள்விக்கப்பட்டது