உள்ளடக்கத்துக்குச் செல்

தோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சவுத்கெடு தோட்ட இலையுதிர் கால வண்ணங்கள்
தாஜ் மகால் தோட்டம்

என்பது வீட்டுக் கொல்லை அல்லதுமலசலகூடம் வெளிப்புற நிலத்தைப் பண்படுத்தி, அதில் தாவர வகைகளை உணவுக்காகவோ அல்லது காட்சிப்படுத்தவோ அல்லது அழகு நுகர்விற்காகவோ வளர்ப்பது ஆகும். இதில் இயற்கை, செயற்கைத் தாவரங்களும் அடங்கும். இயற்கையில் பல தோட்ட அமைவுகள் இயல்பாக அமைதலும் உண்டு. இன்று வீட்டுத் தோட்டங்களே மிகவும் பரவலாக ஏற்பட்டுள்ளன. கீரைகள், காய்கறிகள், பழம் தரும் மரங்கள், அழகுச் செடிகள் போன்றவை இதில் அடங்கும். பொது மரபாக இவை அனைத்து வகைத் தோட்டங்களையும் குறிக்கும். இயற்கையான சூழலில் காட்டு விலங்குகளை வளர்க்கும் விலங்கு காட்சியகங்களும் உயிரியல் தோட்டங்களாகும். [1][2] மேற்கத்தியத் தோட்டங்கள் பெரும்பாலும் தாவரங்களால் நிரம்புவதால் அவை தாவரத் தோட்டங்கள் எனப்படுகின்றன. யப்பான் சென் தோட்டங்களைப் போன்ற சில கிழக்கத்திய மரபான தோட்டங்களில் தாவரங்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக அல்லது முற்றிலும் இல்லாமலும் போகலாம்.

தோட்டங்கள் பல்வேறு பாணிகளும் கட்டமைவுகளும் கொண்டமையலாம். இவை நீர்நிலைகளிலும் குளங்களிலும் ஏரிகளிலும் சரிவான பள்ளத்தாக்குகளிலும் அமையலாம். தோட்டங்களில் குளுமைக்காகவும் அழகுக்காகவும் நீரூற்றுகளும் அமைக்கப்படுகின்றன.நீரூற்றுகளைச் சுற்றியும் தோட்டங்கள் அமைக்கப்படுவதுண்டு. சில தோட்டங்கள் அழகுக்காக மட்டுமே அமைக்கப்படுகின்றன. வேறு சில தோட்டங்கள் உணவையும் தனிப்பகுதியிலோ அல்லது அழகு தரும் தாவரங்களுக்கிடையே இடைமிடைந்தோ பயிரிடலால் தருவதுண்டு. உணவு தரும் தோட்டங்கள் பண்ணைகளை விட சிறியனவாகும். இவை மிகுந்த உழைப்பைக் கோருபவை. இவற்றின் நோக்கம் பொழுதுபோக்கே தவிர வணிகப்பயன் அல்ல. பூந்தோட்டங்கள் பலவகை உயரம், வண்ணம், கட்டமைவு, நறுமணம் கொண்டவையாகவும் புலன்களுக்கு ஆர்வமும் மகிழ்ச்சியும் தருவனவாகவும் அமைகின்றன.

தோட்ட வளர்ப்பு தோட்டத்தை வளர்த்துப் பேணிக்காக்கும் செயல்பாடு அல்லது கலையாகும். இப்பணி பயில்நிலைத் தோட்டக்காரர்களாலோ அல்லது தொழில்முறைத் தோட்ட வல்லுனர்களாலோ செய்யப்படுகிறது. தோட்டம் பூங்காக்களிலும் சாலையோரங்களிலும் பிற பொதுவெளிகளிலும் அமைக்கப்படுகிறது.

நில இயற்கை அழகியல் அத்துரைவல்லுனர்களின் தொழில்முறைப் பணியாகும். இவ்வல்லுனர்கள் பொதுவிட அமைப்புகளிலும் தொழிற்குழும வாடிக்கையாளர்களுக்கும் நில இயற்கை வடிவமைப்பைச் செய்து தருகின்றனர்.


வடிவமைப்பு

[தொகு]
ஓர் அரங்கம் உள்ளிட்ட நிலத்தில் அமைக்கப்பட்ட இயற்கையான சீனத் தோட்ட வடிவமைப்பு

தோட்ட வடிவமைப்பு என்பது நிலக்கிடப்பு நிலையில் தேர்ந்தெடுத்த தாவரவகைகளை நடுவதற்கான தரையமைவுத் திட்டமிடல் செயல்முறையாகும். தோட்டங்கள் தோட்ட உரிமையாளர்களாலும் வடிவமைக்கப்படுகின்றன அல்லது தொழில்முறை வல்லுனர்களாலும் வடிவமைக்கப்படுகின்றன. தொழில்முறை தோட்ட வடிவமைப்பாளர்கள் தோட்டக்கலையிலும் வடிவமைப்பு நெறிமுறைகளிலும் பயிற்சி பெற்றவர்களாவர். அவர்கள் தாவரங்களைப் பயன்படுத்தும் வழிவகை பற்றிய அறிவு சான்றவராவர். சில தொழில்முறைத் தோட்ட வடிவமைப்பாளர்கள் நிலக்கிடப்பு வடிவமைப்பாளர்களும் ஆவர். இவர்கள் இதற்கான தனி பட்டம் பெற்று அரசின் உரிமமும் பெற்று வைத்திருப்பர்.

தோட்ட வடிவமைப்புக் கூறுபாடுகளில் நிலத் தரையமைவு, நடைவழிகள், சுவர்கள், அமர்வு இடங்கள், நீரூற்று போன்ற நீர் ஏற்பாடுகள், தாவரங்களின் இட இருப்பமைவு ஆகியன அடங்கும். இவை பொது தோட்டக்கலை தேவைகளுக்கு ஏற்பவும் பருவ மாற்றத் தோற்றங்களுக்கு ஏற்பவும் வாழ்நாள், வாழிடம், உருவளவு, வளர்ச்சி வீதம், பிற தாவரங்கள் உடனான கூட்டியைவு, நில அமைவு உடனான ஒருங்கியைவு ஆகியவற்றைக் கருதியும் வடிவமைக்கப்படல் வேண்டும். தொடர் பேணுதலுக்குக் கிடைக்கும் நீதிவளமும் பேணிக் காக்க கிடைக்கும் நேர அளவும் தாவரத் தேர்வு, அவற்றின் வளர்ச்சி வீதம், பரவல் அளவு, ஓராண்டு அல்லது ஈராண்டு போன்ற தன்விதைப்புக் கால அளவு, பூப்புக் காலம் போன்ற பிற பன்மைகளைத் தெரிவுசெய்ய உதவும். தோட்ட வடிவமைப்பை முறையான வடிவமைப்பு, இயற்கை வடிவமைப்பு என இருவகையாக ஓரளவு பிரிக்கலாம்.[3]

மிக இன்றியமையாத தோட்ட வடிவமைப்புக் கூறுபாடு அதன் பயன்பாடும் பாணியும் தோட்டப் பொதுவெளிக் கட்டமைப்புகள் உடனான ஒருங்கிணைவும் ஆகும்மிவை எல்லாமே கிடைக்கும் பாதீட்டைப் பொறுத்தே அமையும்.

பலவகைத் தோட்டங்கள்

[தொகு]

பொதுவாக வீட்டு தோட்டத்தில் சமைப்பதற்கான காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. கீரை வகைகள், பச்சைமிளகாய், கத்தரி, வெண்டை போன்றவை வீட்டு தோட்டத்தில் பயிரிடப்படும் முக்கியமான காய்கறிகள்.

கீரை வகைகள், பச்சைமிளகாய், கத்தரி, வெண்டை, வெள்ளரி, அவரை போன்றவை மரக்கறி தோட்டத்தில் பயிரிடப்படும் முக்கியமான காய்கறிகள்.

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Garden history : philosophy and design, 2000 BC–2000 AD, Tom Turner. New York: Spon Press, 2005. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-31748-7
  2. The earth knows my name : food, culture, and sustainability in the gardens of ethnic Americans, Patricia Klindienst. Boston: Beacon Press, 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8070-8562-6
  3. Chen, Gang (2010). Planting design illustrated (2nd ed.). Outskirts Press, Inc. p. 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4327-4197-6.

வெளி இணைப்புகள்

[தொகு]
  • பொதுவகத்தில் Garden பற்றிய ஊடகங்கள்
  • பொதுவகத்தில் Gardens பற்றிய ஊடகங்கள்
  • பொதுவகத்தில் Gardens by type பற்றிய ஊடகங்கள்
  • பொதுவகத்தில் File:CIA memorial garden with stone.jpg பற்றிய ஊடகங்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோட்டம்&oldid=3482025" இலிருந்து மீள்விக்கப்பட்டது