தொண்டைப்புரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொண்டைப்புரை
Pharynx
தலை, கழுத்தின் உட்பகுதி
Pharynx
விளக்கங்கள்
உறுப்பின் பகுதிதொண்டை
அமைப்புமூச்சுத் தொகுதி, மனித சமிபாட்டு மண்டலம்
சிரைதொண்டை வலை
நரம்புதொண்டை வலை, மெல்லுதசை நரம்பு, தாடை நரம்பு
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்pharynx
கிரேக்கம்φάρυγξ (phárynx)
MeSHD010614
TA98A05.3.01.001
TA22855
FMA46688
உடற்கூற்றியல்

தொண்டைப்புரை (pharynx) என்பது வாயறைக்கும் மூக்கறைக்கும் பின்னண்டையாகவும் இரைப்பைக்குச் செல்லும் உணவுக்குழலுக்கும் நுரையீரலுக்குச் செல்லும் குரல்வளைக்கும் மேலண்டையாகவும் அமைந்துள்ள தொண்டைப் பகுதியாகும். அது முதுகெலும்புள்ளவை முதுகெலும்பற்றவை என்ற இருபால் விலங்குகளிலும் காண்பதாயினும் அதன் அமைப்பு உயிர்வகைக்கு வகை வேறுபாடுகின்றது.

மாந்தரில் தொண்டைப்புரை செரிமான அமையத்தின் ஒரு கூறாகவும் மூச்சமையத்தின் மூச்சுக் கடப்பு மண்டலமாகவும் அமைந்துள்ளது. மூச்சுக் கடப்பு மண்டலத்தில் மூக்குத் தொளைகள், குரல்வளை, மூச்சுக்குழாய், தூம்புகள் (bronchi), நுனித்தூம்புகள் (bronchioles) ஆகியவையும் அடங்கும்.[1] மாந்தர் தொண்டைப்புரையை வழக்கமாக மூக்குத்தொண்டைப்புரை, வாய்த்தொண்டைப்புரை, குரல்வளைத் தொண்டைப்புரை என மூன்று பகுதிகளாகப் பிரிப்பர்.

தொண்டைப்புரை பேச்செழுப்பலில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Respiratory Syster. Benjamin Cummings (Pearson Education, Inc). 2006. பக். 1 இம் மூலத்தில் இருந்து 2017-10-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171013115205/http://www.kean.edu/~jfasick/docs/Spring%20Semester%20Lectures%20Chapt.%2016-28/Chapter%2022a.pdf. பார்த்த நாள்: 2020-05-09. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொண்டைப்புரை&oldid=3349232" இலிருந்து மீள்விக்கப்பட்டது