தா நாங்
தா நாங்
Đà Nẵng | |
---|---|
Thành phố Đà Nẵng | |
transcription(s) | |
• Chữ Nôm | 城舖沱灢 |
• Quốc ngữ | thành phố Đà Nẵng |
நாடு | வியட்நாம் |
பிரதேசம் | தென் மத்திய கோஸ்ட் |
தெனொயிம் | Dananger |
அரசு | |
• Party's Secretary (Bí thư Thành ủy) | Trần Thọ |
• People's Council's President (Chủ tịch Hội đồng Nhân Dân) | Nguyễn Bá Thanh |
• People's Committee's President (Chủ tịch Ủy ban Nhân Dân) | Văn Hữu Chiến |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,285.4 km2 (496.3 sq mi) |
மக்கள்தொகை (2014) | |
• மொத்தம் | 10,07,400 |
• அடர்த்தி | 780/km2 (2,000/sq mi) |
• Ethnicities | கின்ஹ் கோ து தே |
நேர வலயம் | ஒசநே+07:00 (Indochina Time) |
• கோடை (பசேநே) | ஒசநே+7 (No DST) |
இடக் குறியீடு | 511 |
இணையதளம் | danang.gov.vn |
தா நாங் (Đà Nẵng, 城舖沱灢, ⓘ) என்பது வியட்நாமின் பிரதான துறைமுக நகரங்களில் ஒன்றாகும் (மற்றவை ஹோ சி மின் நகரம் மற்றும் கைபோங்). இதுவே வியட்நாமின் தென் மத்திய கோஸ்ட்டின் மிகப்பெரிய நகரமாகும். தா நாங் தென் கடலின் கரையோரமாகவும் ஹான் ஆற்றின் தொடக்க எல்லையிலும் அமைந்துள்ளது. மத்திய வியட்நாமின் வணிக மற்றும் கல்வியின் மத்திய நிலையமாக இது விளங்குகிறது. தா நாங் நிலையான இலகுவாக அணுகக்கூடிய வகையில் ஒரு துறைமுகத்தையும் கொண்டுள்ளது. இது தேசிய வழி 1Aயிலும் மற்றும் வடக்கு-கிழக்கு ரயில்வேயிலும் அமைந்துள்ளமையால் இதை போக்குவரத்தின் மையமாக கொண்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் உலகப் பாரம்பரியக் களம் போன்றவற்றிற்கு 100 கிலோமீற்றர் தொலைவிலும் அமைந்துள்ளது. இந்நகரம் முற்காலத்தில் டை வியாட் குடியேற்றத்தின் போது குவா கான் (Cửa Hàn) என அழைக்கப்பட்டது. பிரெஞ்சு காலனித்துவ ஆட்சியின் போது டூரன் மற்றும் டுரோன் (Tourane அல்லது Turon) என்றும் அழைக்கப்பட்டது. தா நாங்கே வியட்நாமின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார மையமாகும் (ஹோ சி மின் நகரம் மற்றும் ஹனோய்க்கு அடுத்ததாக).
1997ற்கு முன்னர் இந்நகரம் குவாங் நாம்-டா நாங் மாகாணத்தின் பகுதியாக இருந்தது. 1 சனவரியில் 1997ல் தா நாங் குவாங் நாம் மாகாணத்தில் இருந்து பிரிக்கப்பட்டு வியட்நாமின் ஐந்து சுதந்திர நகராட்சிகளில் ஒன்றாக மாறியது. தா நாங் முதல் தர நகரங்களில் ஒன்றாக பட்டியல் இடப்பட்டுள்ளது.[2] வியட்நாமின் மாகாணங்கள் மற்றும் மத்திய ஆட்சி நகரங்களை விட நகரமயமாக்கல் விகிதத்தில் தா நாங் முன்னிடத்தில் உள்ளது.[3] தா நாங்கே வியட்நாமின் ஐந்தாவது மிகப்பெரிய நகரமாகும்.[4]
காலநிலை
[தொகு]தா நாங் வெப்பமண்டல பருவமழை காலநிலையைக் கொண்டுள்ளது. இது இரு பருவங்களைக் கொண்டுள்ளது. செப்டெம்பர் தொடக்கம் மார்ச் வரை தைபூன் மற்றும் ஈர பருவமும், ஏப்ரல் தொடக்கம் ஆகஸ்து வரை வறண்ட பருவத்தையும் கொண்டுள்ளது. இங்கு வெப்பநிலை பொதுவாக அதிகமாகவே காணப்படுகிறது. இந்நகர வருடாந்த சராசரி வெப்பநிலை 25.9 °C (78.6 °F) ஆகும். சூன் தொடக்கம் ஆகஸ்ட் வரை வெப்பநிலை மிகவும் அதிகமாக காணப்படும் (averaging 33 முதல் 34 °C (91 முதல் 93 °F), மற்றும் திசம்பர் தொடக்கம் பெப்ரவரி மிகவும் குறைவாகவும் காணப்படும் (averaging 18 முதல் 19 °C (64 முதல் 66 °F)). குளிர் காலத்தில் குளிராகவும், ஈரமாகவும் மற்றும் அதிக காற்றாகவும் இருக்கும். வருடாந்த சராசரி ஈரப்பதம் 80.6% ஆகும். அக்டோபர் தொடக்கம் திசம்பர் வரை ஈரப்பதம் மிகவும் அதிகமாக காணப்படும்(84% கிட்டும்), சூன் தொடக்கம் சூலை வரை ஈரப்பதம் மிகவும் குறைவாக இருக்கும் (74–75% கிட்டும்).[5]
சராசரியாக தா நாங் 2,505 mm (98.6 அங்) மழைவீழ்ச்சியைப் பெறுகிறது. அக்டோபர் தொடக்கம் நவம்பர் வரை அதிக மழைவீழ்ச்சி கிடைக்கிறது (ranging from 550 முதல் 1,000 mm (22 முதல் 39 அங்)), மற்றும் சனவரி தொடக்கம் ஏப்ரல் வரை குறைந்த மழை வீழ்ச்சியையும் பெறுகிறது (ranging from 23 முதல் 40 mm (0.91 முதல் 1.57 அங்)).[6]
தட்பவெப்ப நிலைத் தகவல், தா நாங் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 32 (90) |
35 (95) |
37 (99) |
41 (106) |
39 (102) |
38 (100) |
38 (100) |
38 (100) |
37 (99) |
36 (97) |
35 (95) |
32 (90) |
41 (106) |
உயர் சராசரி °C (°F) | 24.8 (76.6) |
26.1 (79) |
28.7 (83.7) |
31.0 (87.8) |
33.4 (92.1) |
33.9 (93) |
34.3 (93.7) |
33.9 (93) |
31.5 (88.7) |
29.6 (85.3) |
27.0 (80.6) |
24.9 (76.8) |
29.93 (85.87) |
தினசரி சராசரி °C (°F) | 21.7 (71.1) |
23.0 (73.4) |
25.1 (77.2) |
27.2 (81) |
29.2 (84.6) |
29.7 (85.5) |
29.8 (85.6) |
29.7 (85.5) |
27.8 (82) |
26.4 (79.5) |
24.3 (75.7) |
22.1 (71.8) |
26.33 (79.4) |
தாழ் சராசரி °C (°F) | 18.5 (65.3) |
19.8 (67.6) |
21.5 (70.7) |
23.3 (73.9) |
24.9 (76.8) |
25.5 (77.9) |
25.3 (77.5) |
25.5 (77.9) |
24.1 (75.4) |
23.2 (73.8) |
21.6 (70.9) |
19.3 (66.7) |
22.71 (72.88) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 8 (46) |
7 (45) |
11 (52) |
7 (45) |
18 (64) |
20 (68) |
17 (63) |
21 (70) |
21 (70) |
12 (54) |
7 (45) |
11 (52) |
7 (45) |
பொழிவு mm (inches) | 96.2 (3.787) |
33.0 (1.299) |
22.4 (0.882) |
26.9 (1.059) |
62.6 (2.465) |
87.1 (3.429) |
85.6 (3.37) |
103.0 (4.055) |
349.7 (13.768) |
612.8 (24.126) |
366.2 (14.417) |
199.0 (7.835) |
2,044.5 (80.492) |
% ஈரப்பதம் | 83 | 83 | 83 | 82 | 78 | 75 | 74 | 76 | 81 | 84 | 84 | 84 | 80.6 |
சராசரி பொழிவு நாட்கள் | 13.7 | 6.9 | 4.8 | 5.6 | 8.9 | 8.0 | 8.6 | 11.4 | 15.4 | 21.2 | 20.9 | 18.6 | 144 |
சூரியஒளி நேரம் | 136.4 | 144.1 | 105.4 | 207.0 | 257.3 | 237.0 | 257.3 | 207.7 | 174.0 | 145.7 | 120.0 | 116.6 | 2,108.5 |
Source #1: World Meteorological Organisation (UN)[7] | |||||||||||||
Source #2: Weatherbase (record highs, lows, and humidity) [5] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Statistical Handbook of Vietnam 2014, General Statistics Office Of Vietnam
- ↑ "Quyết định số 145/2003/QĐ/TTg ngày 15/7/2003". Archived from the original on 2011-07-22. பார்க்கப்பட்ட நாள் 2015-11-04.
- ↑ "Đà Nẵng - Trung tâm vùng kinh tế trọng điểm miền Trung"
- ↑ Bureau of East Asian and Pacific Affairs (27 May 2010). "Background Note: Vietnam". U.S. Department of State. பார்க்கப்பட்ட நாள் 2010-06-21.
- ↑ 5.0 5.1 "Weatherbase: Historical Weather for Da Nang". Weatherbase. பார்க்கப்பட்ட நாள் 11 August 2012.
- ↑ Danang People's Committee website
- ↑ "World Weather Information Service - Đà Nẵng".