உள்ளடக்கத்துக்குச் செல்

சேர்வராயனின் இயற்கை வளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேர்வராயன் மலைத்தொடர்

சேர்வராயனின் இயற்கை வளம் (The natural resources of Shevaroy Hills) என்பது சேர்வராயான் மலைகளில் இயற்கையாக உள்ள வளங்களைக் குறிக்கிறது. பொருளாதார அடிப்படையில், ஒரு குறிப்பிட்டப் பகுதிகளில் அமைந்து இருக்கும் நிலம், மூலப்பொருட்கள், கச்சா பொருட்கள் எனப்படுபவை ஆகும். ஒப்பிட்டளவில் மனிதத் தலையீடுகளின்றி, தன் இயல்பு நிலையில், சூழல் தொகுதிகளில் காணப்படும் பொருட்களைக் குறிக்கின்றன. இயற்கை வளங்களின் பண்புகள், அவைகளை சுற்றி அமைந்து இருக்கும், குறிப்பிட சுற்றுப்புற சூழ்நிலைகளைப் பொறுத்து, அதன் உயிரின வகைகளையும், அச்சுற்றுப்புற சூழ்நிலை பண்புகளின் வேறுபாடுகளையும் பொருத்து மாறுபடுகின்றன.

வள முகாமைத்துவம்

[தொகு]

ஒரு பெரிய இயற்கை அமைப்பின் நிலம், நீர், மண்வகைகள், செடிகள், விலங்குகள் ஆகியவைகளின் தாக்கம், எவ்வாறு நடைமுறையில், வாழ்க்கைத் தரத்தையும், எதிர்கால வாழ்க்கை தரத்தையும் பாதிக்கின்றன என்பதை முகாமைத்துவம் செய்வது ஆகும். இயற்கை வள முகாமைத்துவமானது, நிலைப்பேறான, உற்பத்தி நிலைப்பேறான முன்னேற்ற கருதுகோள்களுடன், அவ்வளங்களைக் கையாளும் முறைகளையும், அம்முறைகளுடன் தொடர்புடையச் சுற்றுச் சூழல்களையும் கையாள்வதே ஆகும். இந்த இலக்கிற்கு, இயற்கை வளங்களை பற்றி நுணுக்கமாக தெரிந்து கொள்வதும், அவற்றை பேணி காக்க உதவும் ஆதாரங்களையும் புரிந்து கொள்வதும் தேவைப் படுகின்றன.[1]

சேர்வராயன் மலைகளின் இருப்பிடம்

[தொகு]

தமிழ்நாட்டில் உள்ள சேலம் மாவட்டத்திற்கு அருகில் காணப்படும், இம்மலைத்தொடர் உள்ளது. இது கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் ஒரு பகுதி ஆகும். இது அம்மலைத்தொடர்ச்சியிலிருந்து விலகி, தனக்கென 400 ச. கி.மீ. பகுதியை ஆக்கிரமித்துள்ளது. இவை கடல் மட்டத்திலிருந்து, 4000 - 5000 அடிகள் உயரத்தில் அமைந்துள்ளது. மலைப் பழங்குடிகள் அதிகம் வாழ்கின்றனர் என்பதால் இயற்கை வளங்கள் பேணப்படுகின்றன.[2].இப்பொழுது வெகுவாக பழங்குடிகளின் ஆளுமைகள் குறைந்துள்ளன.

இயற்கைச் செல்வங்கள்

[தொகு]
கிடைமட்ட மரங்கள்
பைஞ்சுதை கிடைகள்

இருப்புப் பாதை திட்டம்

[தொகு]

சேலம் மாவட்டத்தில் இருப்புப் பாதைத் திட்டத்தை, ஆங்கிலேயர் செயற்படுத்தினர். 1859-60ஆம் ஆண்டுகளில் மட்டும் இருப்புப்பாதை அமைப்பதற்காக வாங்கப்பட்ட கிடைமட்ட மரங்களின் எண்ணிக்கை 2,45,743. அவைகளைக் காடுகளில் வெட்டிக் கொடுக்கப் பட்டது. இங்கு கிடை மரங்கள் என்பது, நன்கு வளர்ந்த ஒரு பெரிய மரத்தின் அடி மரமாகும். இந்த கிடைமரங்களின் மேல்தான் தண்டவாளம் அமைக்கப்படும். தற்போது அவை பழமையானதாலும், மீட்டர் பாதையிலிருந்து, அகல பாதையாக மாற்றப் பட்டுள்ளன. இப்பொழுது செயற்கையாக சிமெண்டு கற்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதால், மற்றொரு பேரழிவுகள் தடுக்கப் பட்டன.

தோட்டப்பயிர் ஆய்வு

[தொகு]

தேயிலை, இரப்பர், காஃபி தோட்டங்களை அமைக்க நடத்திய சோதனையிடங்களில், இயற்கை வளம் அழிக்கப்பட்டன. புகை வண்டிகள் ஓடுதலுக்கும், மக்களின் எரிபொருட்களையும் இக்காடுகள் அவ்வப்போது அழிக்கப் பட்டன. அப்போது சேலம் மாவட்ட ஆட்சியராக (Collector) பிரேசியர் (Mr. Brasier) ஆவார். இவர் காலத்து அழிவுகள், உயர்ந்த திட்டமில்லாததால் நடந்தன.

சட்ட நடவடிக்கை

[தொகு]

கி. பி. 1886-ஆம் ஆண்டு ஆங்கில அரசுக்குக் காடுகளைப் பாதுகாக்கவேண்டும் என்ற அக்கறை ஏற்பட்டது. சேலம் மாவட்டத்திலுள்ள காடுகளை யெல்லாம் அளந்தனர். சேர்வராயன் மலைகள் மீதும், அவற்றைச் சூழ்ந்துள்ள அடிவாரங்களிலும் உள்ள காடுகளும் அளக்கப்பட்டு, அவைக் காவலுக்கு (Reserved forests) உட்படுத்தப்பட்டன. அவ்வாறு அளக்கப்பட்ட சேர்வராயன் மலைக்காடுகள் 113 சதுரமைல் பரப்புள்ளவை. வன (Forest Officers)அதிகாரிகளும், காவலர் (Rangers) களும் அமர்த்தப் பட்டனர். காடு திட்டமான முறையில் பயன்படுத்த முடிவு எடுக்கப் பட்டன.

மரவள அறுவடை

[தொகு]

கி. பி. 1892-ஆம் ஆண்டிலிருந்து, திங்கள்தோறும் அதற்கென 200 டன் நிறையுள்ள மரங்கள் வெட்டி அனுப்பப் பட்டன. கி. பி. 1894-ஆம் ஆண்டு அந்த அளவானது, திங்களுக்கு 500 டன்களாக உயர்ந்தது. 1896-ல் 1200 டன்களும், 1899-இல் 2200 டன்களும் திங்கள்தோறும் வெட்டி அனுப்பப்பட்டன. 1906-இல் நிலக்கரி நிறையக் கிடைக்கத் தொடங்கியதும் மரக் கட்டையின் தேவை குறைந்தது.

  1. கட்டிடங்களுக்கான தூலங்களை வெட்டுதல்
  2. எரிபொருளுக்கான மரங்களை வெட்டுதல்
  3. கரி தயாரித்தல்
  4. மூங்கில் வெட்டுதல்
  5. சந்தன மரங்களை வளர்த்தல், வெட்டுதல்
  6. மேய்ச்சல் நில மாகப் பயன்படுத்தல்
  7. தழை உரம் சேகரித்தல்
  8. சிறுபொருட்களள் தயாரித்தல் எனப் பலவகைகளில் சில சட்டங்கள் உருவாக்கப் பட்டன. காடுகளில் தீப்பற்றி அழிவு நேராமலிருக்கப் பல வழிமுறைகளை மேற்கொண்டனர்.

தனித்துவ வளங்கள்

[தொகு]
சந்தன மரப்பூக்கள்
வெள்ளோக்கு
  • சந்தனம்:இங்குள்ள சந்தன மரங்கள் மிகவும் மணக்கும் இயல்புடையதாக இருந்தமையால், அவைகளும் பெருமளவு வெட்டப் பட்டன. கேப்டன் கிரகாம் (Captain Graham) ஏறத்தாழ அனைத்துச் சந்தன மரங்களையும் வெட்டிக்கொள்ளும் படி ஒரு குத்தகைக்காரனுக்கு அனுமதியளித்து, அதற் கீடாக 300 பகோடா (Pagodas) க்களைப் பெற்றுக் கொண்டான். பகோடா என்பது பண்டைக்காலத்தில் நம் நாட்டில் வழங்கிய ஒரு தங்க நாணயம் ஆகும். இதனால் பத்தாண்டுகளுக்குச் சேலம் மாவட்டக் காடுகளில் சந்தன வாடையே இல்லாமல் போனது.
  • வெள்ளோக்கு : வெள்ளோக்கு (Santalum album, Silver Oak) என்பது இம்மலைகளில் நிறைய வளரும்படியான மரம் ஆகும். இதனுடைய பட்டை, வெள்ளியைப் போல இருப்பதால், இப்பெயர் பெற்றது. இது பருத்து நீண்டு 100 அடிக்கு மேல் வளரும். வாழும் மக்கள் வீடு கட்டுவதற்கும், வீட்டுச் சாமான்கள் செய்வதற்கும் இதையே பயன் படுத்தினர்.
  • தழை உரம் : சேலம், ஆத்தூர்க் கோட்டங்களில் உள்ள விளை நிலங்களுக்குச் சேர்வராயன் மலைகளில் உள்ள தழைகள் உரமாகப் பயன்பட்டன. ஒரு ஏக்கர் நஞ்சை நிலத்திற்கு, இரண்டு முதல் மூன்று ஆயிரம் கிலோ கிராம் தழைகள் உரமாகப் பயன்பட்டன. ஆத்தூரின் கிச்சடி சம்பா அரிசி, உலகப் புகழ் பெற்றது. இப்பொழு இங்கு இது விழைவதே இல்லை. காடு வளம் குறைந்தமையால், இங்கு இருக்கும் வசிட்ட நதி வரண்டு விட்டது என்பது ஒரு வரலாற்று சோக நிகழ்வாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. மாசேப் பல்கலைகழகம்: பயன்பாடு அறிவியலில் இளங்கலை பட்டம்[தொடர்பிழந்த இணைப்பு] (இயற்கை வளங்களை பாதுகாக்கும் முறை)
  2. Wilson Hunter, Sir William; Sutherland Cotton, James; Sir Richard Burn, Sir William Stevenson Meyer. Great Britain India Office. The Imperial Gazetteer of India. Oxford: Clarendon Press, 1908.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Servarayan Hills
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  • தமிழக அரசு தரும் சேலம் மாவட்ட காலக் கோடுகளை, ஆங்கிலத்தில் காணலாம்.

இப்பக்கங்களையும் காணவும்

[தொகு]