செழியன் ஹரிநிசாந்த்
Appearance
தனிப்பட்ட தகவல்கள் | |
---|---|
பிறப்பு | 16 ஆகத்து 1996 உதகமண்டலம், தமிழ்நாடு, இந்தியா |
மட்டையாட்ட நடை | இடக்கை |
பந்துவீச்சு நடை | வலக்கை |
பங்கு | மட்டையாட்டம் |
உள்ளூர் அணித் தரவுகள் | |
ஆண்டுகள் | அணி |
2019–தற்போது வரை | தமிழ்நாடு துடுப்பாட்ட அணி |
மூலம்: Cricinfo, பெப்ரவரி 21, 2019 |
செழியன் ஹரிநிசாந்த் (Chezhian Harinishanth பிறப்பு: ஆகஸ்ட் 16 , 1996) இந்தியத் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 2018-19 ஆம் ஆண்டிற்கான சையது முஷ்டாக் அலி இருபது20 போட்டித் தொடர்களில் தமிழ்நாடு துடுப்பாட்ட அணிக்காக கலந்து கொண்டார்.[1] 2019-20ஆம் ஆண்டிற்கான விஜய் அசாரே தொடருக்காக செப்டம்பர் 24இல் பட்டியல் அ போட்டிகளில் அறிமுகமானார்.[2] 2019-20ஆம் ஆண்டிற்கான ரஞ்சி கோப்பைத் தொடருக்காக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார்.[3]
2021ஆம் ஆண்டில் நடைபெற்ற சையது முஷ்டாக் அலி தொடரில் 41எனும் மட்டையாட்ட சராசரியோடு 246 ஓட்டங்களை எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.[4] இவர் 2021 இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் இவரை ஏலத்தில் எடுக்கப்பட்டார்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Group B, Syed Mushtaq Ali Trophy at Surat, Feb 21 2019". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 21 February 2019.
- ↑ "Elite, Group C, Vijay Hazare Trophy at Jaipur, Sep 24 2019". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 24 September 2019.
- ↑ "Elite, Group B, Ranji Trophy at Indore, Dec 25-28 2019". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 December 2019.
- ↑ "match stats". ESPNcricinfo.com|url=https://stats.espncricinfo.com/ci/engine/records/averages/batting_bowling_by_team.html?id=13822&team=2184&type=tournament%7Caccess-date=15 March 2021|website=Cricinfo}}
- ↑ "IPL 2021 auction: The list of sold and unsold players". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 February 2021.