வேகாக்கொல்லை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 35: வரிசை 35:


== வழிபாட்டு இடங்கள் ==
== வழிபாட்டு இடங்கள் ==
வேகாக்கொல்லை உள்ள


* களப்பானிசன் கோவில்
* களப்பானிசன் கோவில்

03:17, 10 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்

வேகாக் கொல்லை என்பது தமிழ்நாட்டின், கடலூர் மாவட்டத்தின் பண்ருட்டி வட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராம பஞ்சாயத்து ஆகும். வேகாக்கொல்லையானது பண்ருட்டிக்கு 14.9 கி.மீ தொலைவிலும், கடலூரில் இருந்து 24.1 கிமீ தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையிலிருந்து 173 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த ஊரானது நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்கும், கடலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.

அருகே உள்ள கிராமங்கள்

  • கீழக்கொல்லை(4 கிமீ)
  • ஆயிப்பேட்டை (1.2 கிமீ)
  • வேங்கடம்பேட்டை(1.5 கிமீ)
  • கொரணப்பட்டு(2.8 கிமீ)
  • கிருஷ்ணகுப்பம்(4 கிமீ)
  • அரசடி குப்பம்(4 கிமீ)
  • சிறுதொண்டமா தேவி (3 கிமீ)
  • ஏ. புதூர்(2 கிமீ)
  • சத்திரம்(2 கிமீ)
  • கண்ணன்சாவடி(4 கிமீ)
  • வடகுத்து

அருகே உள்ள நகரங்கள்

  • இந்திரா நகர்,நெய்வேலி(6 கிமீ)
  • குறிஞ்சிப்பாடி(10.3 கிமீ)
  • பண்ருட்டி(14.9 கிமீ)
  • அண்ணாகிராமம்(16.9 கிமீ))
  • கடலூர்(21 கிமீ)
  • வடலூர்(15 கிமீ)

வேகாக்கொல்லை கிராம பகுதிகள்

  1. வேகாக்கொல்லை
  2. புதூர் வேகாக்கொல்லை
  3. காட்டு வேகாக்கொல்லை
  4. சத்திரம் வேகாக்கொல்லை

இந்த பஞ்சாயத்து கிட்டத்தட்ட 5,000 மக்களை கொண்டுள்ளது. நெய்வேலிலிருந்து 6 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

வழிபாட்டு இடங்கள்

  • களப்பானிசன் கோவில்
  • முருகன் கோவில்
  • காளி கோவில்
  • மாரிஅம்மன் கோவில்
  • பிள்ளயார் கோவில்
  • அய்யனார் கோவில்
  • காளி கோவில்.

வேங்கடம்பேட்டையிலுள்ள ரங்கநாதர் கோயில் வேகாக்கொல்லையில் இருந்து 1.5 கி.மீ. உள்ளது. இங்கு உலகின் மிகப் பெரிய சிலை ரங்கநாதர் ஒரு உறங்கும் தோற்றத்தில் உள்ளார். இக் கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

பொருளாதாரம்

வேகாக்கொல்லை கிராமத்தில் முந்திரிக் காடுகளும், பழம் மரங்களும் நிறைந்துள்ளன. வேகாக்கொல்லை மக்களின் பிரதான தொழில் விவசாயம் ஆகும். முந்திரி, கரும்பு, நிலக்கடலை போன்ற முக்கிய பயிர்கள் பயிரிடப்படுகின்றன. முந்திரிப் பருப்பு, பிளப்பழம் மற்றும் வாழை போன்றவை பயிரிடப்படுகின்றன.

கிராம மக்களில் பலர் சுய தொழில், அரசு வேலைகள், கருவி பழுதுபார்ப்பு, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பொறியியலாளர்களாக வேலை செய்கிறார்கள்.

நாற்று தோட்டங்களும் கிராமத்தில் உள்ள பலரால் வைக்கபட்டுள்ளன இவற்றில் பெரும்பாலும் ரோஜா, கனகாம்பரம், மல்லிகை போன்ற மலர் செடிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

கல்வி

வேகாக்கொல்லையில் ஊராட்சி ஒன்றிய நடுநலைப் பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றியத் தொடக்க பள்ளி ஆகியவை உள்ளன

ஊரில் உள்ள வங்கிகள்


மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேகாக்கொல்லை&oldid=2997270" இலிருந்து மீள்விக்கப்பட்டது