வேகாக்கொல்லை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வேகாக் கொல்லை என்பது தமிழ்நாட்டின், கடலூர் மாவட்டத்தின் பண்ருட்டி வட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராம பஞ்சாயத்து ஆகும். வேகாக்கொல்லையானது பண்ருட்டிக்கு 14.9 கி.மீ தொலைவிலும், கடலூரில் இருந்து 24.1 கிமீ தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையிலிருந்து 173 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த ஊரானது நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்கும், கடலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.
அமைவிடம்
[தொகு]இவ்வூர் திருவதிகைக்குத் தெற்கே, 11 கி.மீ. தொலைவிலும், கெடிலம் ஆற்றின் தென்கரைக்குப் பத்து கி.மீ. தொலைவிலும் உள்ளது.
ஊர் குறித்த தொன்மம்
[தொகு]சிவபெருமான் முப்புர அரக்கர்களைப் புன்னகையால் எரித்த திருவதிகைப் பகுதியில் உள்ள மண் எரியுண்டு வெந்த மண்ணாம்; அதனால் அம் மண் சிவப்பான செம்மண்ணாக இருக்கிறது. திருவதிகைப் பகுதிதான் எரியுண்டு வெந்ததே தவிர, வேகாக் கொல்லைப் பகுதி எரியுண்ணவோ - வேகவோ இல்லையாதலின் இங்குள்ள மண் வெள்ளை மண்ணாயிருக்கிறது. இந்த கதைக்கு ஏற்ப இந்த ஊரில் மண்ணெடுத்துச் செங்கல் சூளைபோட்டால் பாதிக் கல்லே வேகும் - பாதி வேகாது. இந்த இயற்கை அமைப்பு, சிவன் முப்புரம் எரித்த புராணக் கதையோடு முடிச்சு போடப்பட்டுள்ளது. சூளைக்கு வேகாத மண் உள்ள பகுதி வேகாக்கொல்லை என்று ஆனது.[1]
இங்கே ஒரு சிவன்கோயில் உள்ளது. திருவதிகையில் முப்புர அரக்கர்களை எரித்த இறைவன் இங்கே வந்து களைப்பாறினாராம். களைப்பாறிய இடம் ‘களைப்பாறிய குழி’ என அழைக்கப்பட்டது. இது களப்பாக் குழி என இப்போது கொச்சையாக மருவி வழங்கப்படுகிறது. இங்கே எழுந்தருளியுள்ள சிவன் பெயர் களப்பானிசன், இப்பெயர், களைப்பாறிய ஈசன் என்னும் பெயரின் மரூஉ எனச் சொல்லப்படுகிறது.[1]
அருகே உள்ள கிராமங்கள்
[தொகு]- கீழக்கொல்லை (4 கிமீ)
- ஆயிப்பேட்டை (1.2 கிமீ)
- வேங்கடம்பேட்டை (1.5 கிமீ)
- கொரணப்பட்டு (2.8 கிமீ)
- கிருஷ்ணகுப்பம் (4 கிமீ)
- அரசடி குப்பம் (4 கிமீ)
- சிறுதொண்டமா தேவி (3 கிமீ)
- ஏ. புதூர் (2 கிமீ)
- சத்திரம் (2 கிமீ)
- கண்ணன்சாவடி (4 கிமீ)
- வடகுத்து
அருகே உள்ள நகரங்கள்
[தொகு]- இந்திரா நகர், நெய்வேலி (6 கிமீ)
- குறிஞ்சிப்பாடி (10.3 கிமீ)
- பண்ருட்டி (14.9 கிமீ)
- அண்ணாகிராமம் (16.9 கிமீ))
- கடலூர் (21 கிமீ)
- வடலூர் (15 கிமீ)
வேகாக்கொல்லை கிராம பகுதிகள்
[தொகு]- வேகாக்கொல்லை
- புதூர் வேகாக்கொல்லை
- காட்டு வேகாக்கொல்லை
- சத்திரம் வேகாக்கொல்லை
இந்த பஞ்சாயத்து கிட்டத்தட்ட 5,000 மக்களை கொண்டுள்ளது. நெய்வேலிலிருந்து 6 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
வழிபாட்டு இடங்கள்
[தொகு]- களப்பானீசன் கோவில்
- முருகன் கோவில்
- காளி கோவில்
- மாரியம்மன் கோவில்
- பிள்ளையார் கோவில்
- அய்யனார் கோவில்
- காளி கோவில்.
வேங்கடம்பேட்டையிலுள்ள ரங்கநாதர் கோயில் வேகாக்கொல்லையில் இருந்து 1.5 கி.மீ. உள்ளது. இங்கு உலகின் மிகப் பெரிய சிலை ரங்கநாதர் ஒரு உறங்கும் தோற்றத்தில் உள்ளார். இக் கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
பொருளாதாரம்
[தொகு]வேகாக்கொல்லை கிராமத்தில் முந்திரிக் காடுகளும், பழம் மரங்களும் நிறைந்துள்ளன. வேகாக்கொல்லை மக்களின் பிரதான தொழில் விவசாயம் ஆகும். முந்திரி, கரும்பு, நிலக்கடலை போன்ற முக்கிய பயிர்கள் பயிரிடப்படுகின்றன. முந்திரிப் பருப்பு, பிளப்பழம் மற்றும் வாழை போன்றவை பயிரிடப்படுகின்றன.
கிராம மக்களில் பலர் சுய தொழில், அரசு வேலைகள், கருவி பழுதுபார்ப்பு, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பொறியியலாளர்களாக வேலை செய்கிறார்கள்.
நாற்று தோட்டங்களும் கிராமத்தில் உள்ள பலரால் வைக்கபட்டுள்ளன இவற்றில் பெரும்பாலும் ரோஜா, கனகாம்பரம், மல்லிகை போன்ற மலர் செடிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
கல்வி
[தொகு]வேகாக்கொல்லையில் ஊராட்சி ஒன்றிய நடுநலைப் பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றியத் தொடக்க பள்ளி ஆகியவை உள்ளன
ஊரில் உள்ள வங்கிகள்
[தொகு]- கனரா வங்கி
- தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 புலவர் சுந்தர சண்முகனார் (1993). "கெடிலக் கரை நாகரிகம்". நூல். p. 331. பார்க்கப்பட்ட நாள் 11 சூன் 2020.