அருந்ததியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 2: வரிசை 2:
{{Citation style}}
{{Citation style}}
{{துப்புரவு}}
{{துப்புரவு}}
'''அருந்ததியர்''' அல்லது '''சக்கிலியர்''' [[இலங்கை]]யிலும் [[தமிழ் நாடு|தமிழ்நாட்டிலும்]] வசித்து வரும் மிகவும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்கள் குழுவாவார்கள். இவர்கள் [[தலித்]]து என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் [[ஆந்திரா]]விலிருந்து [[தெலுங்கு]] மொழி பேசும் மக்களுடன் விஜயநகர ஆட்சியின் போது விஜயநகர மன்னர்களால் தமிழ் நாட்டிற்கு குடியமர்த்தப்பட்டதாக கருதப்படுகிறது.<ref>[http://www.bbc.co.uk/tamil/highlights/story/2006/03/060314_dalit.shtml  அருந்ததியரின் அவலம்]</ref>
'''அருந்ததியர்''' அல்லது '''சக்கிலியர்''' [[இலங்கை]]யிலும் [[தமிழ் நாடு|தமிழ்நாட்டிலும்]] வசித்து வரும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்கள் குழுவாவார்கள். இவர்கள் [[தலித்]]து என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் [[ஆந்திரா]]விலிருந்து [[தெலுங்கு]] மொழி பேசும் மக்களுடன் விஜயநகர ஆட்சியின் போது விஜயநகர மன்னர்களால் தமிழ் நாட்டிற்கு குடியமர்த்தப்பட்டதாக கருதப்படுகிறது.<ref>[http://www.bbc.co.uk/tamil/highlights/story/2006/03/060314_dalit.shtml  அருந்ததியரின் அவலம்]</ref>


== பெயர்க் காரணம் ==
== பெயர்க் காரணம் ==

11:09, 17 பெப்பிரவரி 2019 இல் நிலவும் திருத்தம்

அருந்ததியர் அல்லது சக்கிலியர் இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் வசித்து வரும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்கள் குழுவாவார்கள். இவர்கள் தலித்து என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் ஆந்திராவிலிருந்து தெலுங்கு மொழி பேசும் மக்களுடன் விஜயநகர ஆட்சியின் போது விஜயநகர மன்னர்களால் தமிழ் நாட்டிற்கு குடியமர்த்தப்பட்டதாக கருதப்படுகிறது.[1]

பெயர்க் காரணம்

சக்கிலியர் என்பது ஸ்சட்குழி என்ற சமற்கிருத சொல் மாறி சக்கிலி என்று அழைக்கப்படுகிறது. ஸ்சட்குழி என்ற சமற்கிருத சொல்லுக்கு “செத்த மாட்டை உண்பவன்” அல்லது “அதிக இறைச்சி உண்பவன்” என்று பொருளாகும்.[2]

விஸ்வநாத நாயக்கர் (1529–1564 ஆட்சியாண்டு) காலகட்டத்தில் பெரும் எண்ணிக்கையில் தெலுங்கர்கள் மதுரைப் பகுதியில் வந்து குடியேறினர். இவர்களுடன் அருந்ததியர்களும் வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.[3][4]

இவர்களின் முக்கியத் தொழிலான கிணற்றுப் பாசனத்தைக் கொண்டிருந்த விவசாயத்திற்குத் தேவையான பரியை மூட்டித் தருவது, போர்முனைகளுக்குத் தேவையான தோல்கருவிகளைத் தயாரிப்பது, விவசாயப் பணிகளில் ஈடுபடுவது, செருப்பு தைப்பது என பெரும்பாலும் தோல் பணியாளர்களாகவே அறியப்பட்ட இம்மக்கள், மின்சாரம்- பம்புசெட்- பிளாஸ்டிக்- ரப்பர்- என்று உருவான மாற்றங்களால் தங்களது பாரம்பரியத் தோல் தொழிலை இழந்து தாழ்வாக நிலைக்கு தள்ளப்பட்டார்கள். வரலாற்றின் ஒரு காலப்பகுதியில், இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் ஒரு மக்கள் குழுவினர் பலவந்தமாகவும், சமயக் கட்டுப்பாடுகள் மூலமாகவும் இத்தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனடிப்படையில் இந்தியா முழுவதும் அருந்ததியருக்கு (சக்கிலியர்) இணையான சாதிகளைக் காணலாம். வட இந்தியாவின் சண்டாலா, பாங்கி போன்றவை உதாரணங்களாகும்.

இவர்களின் முக்கிய தொழில் துப்புரவுப் பணியாளர்கள் என்றபடியால் கிராமப்புறங்களில் மற்ற தலித் பிரிவினராலேயே இவர்கள் ஒதுக்கப்படுகின்றனர்.[5] இவர்கள் துப்புரவுப்பணி தொழிலுக்கு மேலதிகமாக மேற்கு மற்றும் வட தமிழ்நாட்டில் ஒரு சிலர் விவசாயத் தொழிலாளிகளாகவும் ஈடுபடலாம்.[சான்று தேவை]

முகலாயர் வருகைக்கும் ஆங்கிலேயர் வருகைக்கும் பின்பு

முகலாயர் வருகையின் போது முகவை (Raamanaathapuram) மண்ணில் ஒரு பாதி அருந்ததியர்கள் இசுலாம் மதத்தை தழுவினார்கள்.[சான்று தேவை]

ஆங்கிலேயர் வருகைக்கும் பின்பு தான் கல்வி பெற்று பலர் கிறித்தவ மதத்தை தழுவினார்கள்.[சான்று தேவை]

விடுதலைக்குப் பின்

சட்டப்படி இவர்கள் பட்டியல் சமுகத்தவராக அறிவிக்கப்பட்டனர். அரசாங்க பணிகளிலும், அரசியல் பதவியிலும், மருத்துவர்களாகவும், வழக்கறிஞர்களாகவும், உயரத் தொடங்கினர்.

தொழில்கள்

ஆடு மாடு மேய்த்தல், மாட்டிறைச்சி வியாபாரம், குத்தகை முறை விவசாயம், பல்வேறு விதமான குடிசைத்தொழில்கள், சிறு வணிகர்கள் மற்றும் பறையிசைக்கலைஞர்கள் போன்ற தொழில்கள் செய்துவருகின்றனர்.

குறிப்பிடத்தக்க மக்கள் 

  • மதுரை வீரன் - ஒரு நாட்டுப்புற பாடகர்
  • ஒண்டிவீரன் - பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிரான சுதந்திரப் போராட்டவீரர்

மேற்கோள்கள்

  1. அருந்ததியரின் அவலம்
  2. நெல்லை. சு. தாமரைப் பாண்டியன் எழுதிய “நாட்டார் வழக்காறுகளில் மக்கள் இடம் பெயர்வும் வரலாறும் நூல், பக்கம்: 71.
  3. http://books.google.co.in/books?id=Xcpa_T-7oVQC&pg=PA125&dq=chakkiliyan+from+andhra&hl=en&sa=X&ei=NkHzU5WPDdOfugTq74LIBg&ved=0CBoQ6AEwAA#v=onepage&q=chakkiliyan%20from%20andhra&f=false
  4. http://books.google.co.in/books?id=H4q0DHGMcjEC&pg=PA41&dq=chakkiliyan+from+andhra&hl=en&sa=X&ei=NkHzU5WPDdOfugTq74LIBg&ved=0CCQQ6AEwAg#v=onepage&q=chakkiliyan%20from%20andhra&f=false
  5. "தமிழகத்தில் தலித்துகளின் நிலை" (in தமிழ் மொழி). பிபிசி. மார்ச் 16, 2006. பார்க்கப்பட்ட நாள் சனவரி 1, 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)CS1 maint: unrecognized language (link)

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அருந்ததியர்&oldid=2658832" இலிருந்து மீள்விக்கப்பட்டது