ஜெகசீவன்ராம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 63: வரிசை 63:


==சொந்த வாழ்க்கை==
==சொந்த வாழ்க்கை==
ஆகஸ்டு, 1933-இல் மனைவி இறந்த பின், சூன் 1935-இல் இந்திராணி என்பவரை மணந்தார். சுரேஷ் குமார் என்ற மகனும், [[மீரா குமார்]] (நாடாளுமன்ற சபாநாயகர் 2009-2014) என்ற மகளும் பிறந்தனர்.
ஆகஸ்டு, 1933-இல் மனைவி இறந்த பின், சூன் 1935-இல் இந்திராணி என்பவரை மணந்தார். சுரேஷ் குமார் என்ற மகனும், [[மீரா குமார்]] (இந்திய நாடாளுமன்ற சபாநாயகர் 2009-2014) என்ற மகளும் பிறந்தனர்.


==ஜெகசீவன்ராமை பற்றிய நூல்கள்==
==ஜெகசீவன்ராமை பற்றிய நூல்கள்==

11:11, 10 ஏப்பிரல் 2014 இல் நிலவும் திருத்தம்

பாபு ஜெகசீவன்ராம்
இந்தியத் துணை பிரதமர்
பதவியில்
24 மார்ச்சு 1977 – 28 சூலை 1979
Serving with சரண்சிங்
பிரதமர்மொரார்ஜி தேசாய்
முன்னையவர்மொரார்ஜி தேசாய்
பின்னவர்யஷ்வந்திராவ் சவாண்
இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர்
பதவியில்
24 மார்ச்சு 1977 – 1 சூலை 1978
பிரதமர்மொரார்ஜி தேசாய்
முன்னையவர்சர்தார் சுவரண்சிங்
பின்னவர்சர்தார் சுவரண்சிங்
பதவியில்
27 1970 – 10 அக்டோபர் 1974
பிரதமர்இந்திரா காந்தி
முன்னையவர்பன்சிலால்
பின்னவர்ப. சிதம்பரம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1908-04-05)5 ஏப்ரல் 1908
சந்த்வா கிராம்ம், போஜ்பூர் மாவட்டம், பீகார் மாநிலம், பிரித்தானிய இந்தியா (தற்போது இந்தியா)
இறப்பு6 சூலை 1986(1986-07-06) (அகவை 78)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ் கட்சி-ஜெகசீவன்,காங்கிரஸ் (1981–1986)
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரஸ் (1977க்கு முன்பு)
ஜனநாயக காங்கிரஸ்(1977)
ஜனதா கட்சி (1977–1981)
பிள்ளைகள்மகன் சுரேஷ் குமார்
மகள்மீரா குமார்
முன்னாள் கல்லூரிபனாரஸ் இந்து பல்கலைக் கழகம்
கல்கத்தா பல்கலைக் கழகம்

ஜெகசீவன்ராம் (இந்தி: बाबू जगजीवन राम) (பிறப்பு:5 ஏப்ரல் 1908 – இறப்பு:6 சூலை1986), பாபு என அன்பாக அழைக்கபடும் இவர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதியும் ஆவார். பீகார் மாநிலம், போஜ்பூர் மாவட்டம், சந்த்வா கிராமத்தில் சாமர் எனும் தலித் சமூகத்தில் பிறந்தவர்.

1946ஆம் ஆண்டில் ஜவகர்லால் நேருவின் தலைமையிலான இடைக்கால அரசில் தொழிலாளர்நலத் துறை அமைச்சராக இருந்தவர். மேலும் இந்திய அரசியலமைப்பு சட்ட முன்வடிவக் குழுவில் உறுப்பினராக செயல்பட்டவர்.

இளமை வாழ்க்கை மற்றும் கல்வி

ஐந்து உடன் பிறந்தவர்க்ளுடன் பிறந்த ஜெகசீவன்ராமின் தந்தை சோபிராம், இந்திய பிரித்தானியப் படையில் பெஷாவரில் பணி புரிந்தவர். தாய் பெயர் வசந்தி தேவி. ஜெகசீவன்ராம் 1914-இல் துவக்கப் பள்ளியில் சேர்ந்தார்.

1927-இல் மெட்ரிக்குலேசன் தேர்வில் தேர்ச்சி பெற்றபின் வாரணாசி யில் உள்ள பனாராஸ் இந்து பல்கலை கழகத்தில் சேர்ந்து, அறிவியல் படிப்பில் இண்டர்மீடியேட் தேர்வில் தேர்ச்சி பெற்றார். 1931-இல் கல்கத்தா பல்கலை கழகத்தில் இளங்கலை அறிவியல் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றார்.

இளமைக்கால பணிகள்

1934-இல் பிகாரில் ஏற்பட்ட நிலநடுக்க நிவாரணப்பணிகளில் தீவிரமாக பங்கு கொண்டார்.[1]

1935-இல் தலித் சமூகத்தவர் சார்பாக பிகார் மாகாண அரசுக் குழவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இருப்பினும் வேளாண்மைக்கான பாசான நீருக்கான வரியை எதிர்த்து பதவியிலிருந்து விலகினார்.[2]

1935-இல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்திய விடுதலை இயக்கத்தில் இணைந்த்து காந்திஜியின் தலைமையில் நடந்த சத்தியாகிரகப் போராட்டத்திலும், வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும் தீவிரமாக பங்கு கொண்டு 1940-இல் சிறை சென்றார். தலித் சமுகத்தினரை கோயிலிலுள் சென்று வழிபடவும், தீண்டாமைக்கு எதிராகவும் போராடினார்.[3][4]

வகித்த பதவிகள்

இந்திய நடுவண் அரசில் பல துறைகளில் தொடர்ந்து முப்பது ஆண்டுகள் கேபினட் அமைச்சராக பணிபுரிந்தவர் என்ற பெருமை பெற்றவர். பீகார் மாநிலத்தில் உள்ள சசாராம் நாடாளுமன்ற தொகுதியில் 1952 முதல் 1984-ம் ஆண்டு வரை எட்டு முறை தொடர்ந்து வெற்றி பெற்றவர்.

  1. தொழிலாளர் துறை அமைச்சர் 1946-1952
  2. தொலை தொடர்புத் துறை அமைச்சர் 1952-1956
  3. போக்குவரத்து மற்றும் புகைவண்டித் துறை அமைச்சர் 1956-1962
  4. போக்குவரத்து மற்றும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் 1962-1963
  5. தொழிலாளர் துறை மற்றும் வேலை வாய்ப்புத் துறை அமைச்சர் 1966-1967
  6. உணவு மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் 1967-1970
  7. பாதுகாப்புத்துறை அமைச்சர் 1970-1974, 1977-1979
  8. வேளாண்மை மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் 1974-1977
  9. இந்தியா நடுவண் அரசில் துணைபிரதமராக 23 மார்ச்சு 1977 - 22 ஆகஸ்டு 1979 முடிய.
  10. அகில இந்தியத் தலைவர், பாரத சாரணர் படை 1976 - 1983.[5]

சொந்த வாழ்க்கை

ஆகஸ்டு, 1933-இல் மனைவி இறந்த பின், சூன் 1935-இல் இந்திராணி என்பவரை மணந்தார். சுரேஷ் குமார் என்ற மகனும், மீரா குமார் (இந்திய நாடாளுமன்ற சபாநாயகர் 2009-2014) என்ற மகளும் பிறந்தனர்.

ஜெகசீவன்ராமை பற்றிய நூல்கள்

  • Sharma, Devendra Prasad (1974). Jagjivan Ram: the man and the times. Indian Book Co. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  • Chanchreek, Kanhaiyalal (1975). Jagjivanram: a select bibliography, 1908–1975. S. Chand. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  • Singh, Nau Nihal (1977). Jagjivan Ram: symbol of social change. Sundeep Prakashan. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  • Ram, Jagjivan (1977). Four decades of Jagjivan Ram's parliamentary career. S. Chand. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  • Ramesh Chandra, Sangh Mittra (2003). Jagjivan Ram And His Times. Commonwealth Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7169-737-2. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  • Secretariat, Lok Sabha (2005). Babu Jagjivan Ram in parliament: a commemorative volume. Lok Sabha Secretariat. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  • Maurya, Dr. Omprakash. Babu Jagjivan Ram. Publications Division, Govt. of India. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)

மேலும் படிக்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெகசீவன்ராம்&oldid=1644310" இலிருந்து மீள்விக்கப்பட்டது