ஹோர்ஹே லூயிஸ் போர்கெஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: ast:Jorge Luis Borges
சி r2.7.3) (தானியங்கி மாற்றல்: kk:Хорхе Луис Борхес
வரிசை 65: வரிசை 65:
[[ka:ხორხე ლუის ბორხესი]]
[[ka:ხორხე ლუის ბორხესი]]
[[kaa:Jorge Luis Borges]]
[[kaa:Jorge Luis Borges]]
[[kk:Борхес, Хорхе Луис]]
[[kk:Хорхе Луис Борхес]]
[[ko:호르헤 루이스 보르헤스]]
[[ko:호르헤 루이스 보르헤스]]
[[ku:Jorge Luis Borges]]
[[ku:Jorge Luis Borges]]

17:43, 29 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்

ஜார்ஜ் லூயிஸ் போர்கஸ்
Jorge Luis Borges
பிறப்புஜார்ஜ் பிரான்சிஸ்கோ இசிடோரோ லூயிஸ் போர்கஸ்
(1899-08-24)24 ஆகத்து 1899
புவெனஸ் ஐரெஸ், ஆர்ஜெண்டீனா
இறப்பு14 சூன் 1986(1986-06-14) (அகவை 86)
ஜெனீவா, சுவிட்சர்லாந்து
தொழில்எழுத்தாளர், கவிஞர், திறனாய்வாளர், நூலகர்

ஜார்ஜ் பிரான்சிஸ்கோ இசிடோரோ லூயிஸ் போர்கஸ் (Jorge Francisco Isidoro Luis Borges, ஆகஸ்ட் 24, 1899ஜூன் 14, 1986) ஒரு ஆர்ஜெண்டீன எழுத்தாளர். இவர் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதை, இலக்கியத் திறனாய்வு, மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் ஈடுபாடு கொண்டிருந்தார்.

இவர் 1899 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் நாள் ஆர்ஜெண்டீனாவில் உள்ள, புவெனஸ் ஐரெசில் பிறந்தார். இவரது குடும்பம், ஆர்ஜெண்டீன வரலாற்றில் புகழ் பெற்ற படைத்துறை அலுவலர்களது மரபில் வந்த படிப்பறிவுள்ள ஒரு குடும்பம். போர்கெசின் தாயார் லியொனோர் அசெவேடொ சுவாரெஸ், உருகுவேயைச் சேர்ந்த பழைய குடும்பம் ஒன்றைச் சேர்ந்தவர். லூயிஸ் போர்கசின் தந்தையார், ஜார்ஜ் கிலேர்மோ போர்கஸ் ஹஸ்லாம், இலக்கிய ஆர்வம் கொண்ட ஒரு சட்டவியலாளரும், உளவியல் ஆசிரியரும் ஆவார். இவரும் எழுத்தாளராக முயன்று தோல்வியுற்றவர்.

போர்கசின் தந்தையார் கண்பார்வை குறைவடைந்ததைத் தொடர்ந்து, சட்டத்துறையில் இருந்து ஓய்வு பெற்றுக்கொண்டு, 1914 ஆம் ஆண்டில் குடும்பத்தோடு ஜெனீவாவுக்குச் சென்றார். தந்தையார் ஜெனீவாவில் இருந்த ஒரு மருத்துவரிடம் சிகிச்சை பெற்றார். இளைய போர்கசும், அவரது சகோதரி நோராவும் ஜெனீவாவில் பள்ளிக்குச் சென்றனர். இளைய போர்கஸ் அங்கே பிரெஞ்சு மொழியையும், ஜெர்மன் மொழியையும் கற்றுக்கொண்டார். ஆர்ஜெண்டீனாவில் இருந்த உள்நாட்டுக் குழப்பங்கள் காரணமாக அவர்கள் 1921 ஆம் ஆண்டுவரை ஜெனீவாவிலேயே தங்கியிருந்தனர். இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர், போர்கஸ் குடும்பம் லுகானோ, பார்சிலோனா, மஜோர்சா, செவிலே, மாட்ரிட் போன்ற பல்வேறு நகரங்களில் மூன்று ஆண்டுகள் தங்கியிருந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹோர்ஹே_லூயிஸ்_போர்கெஸ்&oldid=1199145" இலிருந்து மீள்விக்கப்பட்டது