வைஜெயந்திமாலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎அரசியல் வாழ்க்கை: தானியங்கி: பகுப்பு மாற்றம்
சி →‎அரசியல் வாழ்க்கை: தானியங்கி: பகுப்பு மாற்றம்
வரிசை 49: வரிசை 49:
[[தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1984|1984இல்]] முதல் முறையாக வைஜெயந்திமாலா மக்களவை தேர்தலில் அகில [[இந்திய_தேசிய_காங்கிரசு|இந்திய காங்கிரசு கட்சியின்]] சார்பில் [[தென்_சென்னை_மக்களவைத்_தொகுதி|தென் சென்னை மக்களவைத் தொகுதி]] போட்டியிட்டார். மீண்டும் [[தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1989|1989இல்]] வைஜெயந்திமாலா தேர்தலில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஆலடி அருணா போட்டியிட்டார். இந்த தேர்தலிலும் இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை 1.25 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார். பின்னர் இவர் 1993 ஆம் ஆண்டு [[மாநிலங்களவை]] உறுப்பினராகப் பரிந்துரைக்கப்பட்டார்.

[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள்]]

13:02, 22 பெப்பிரவரி 2012 இல் நிலவும் திருத்தம்

(வைஜெயந்திமாலா பாலி)
பிறப்புவைஜெயந்திமாலா ராமன்
ஆகத்து 13, 1936 (1936-08-13) (அகவை 87)
திருவல்லிக்கேணி, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா
பணிநடிகை, இந்திய நடன கலைஞர், கர்நாடக சங்கீத கலைஞர், அரசியல்வாதி.
பெற்றோர்எம். டி. ராமன்
வசுந்தராதேவி
வாழ்க்கைத்
துணை
சமன்லால் பாலி (1968–1986)(மறைவு)
பிள்ளைகள்சுசிந்திர பாலி
கையொப்பம்

வைஜெயந்திமாலா பாலி ஒரு இந்திய நடிகையும் பாரத நாட்டிய கலைஞரும் ஆவார். இவர் ஆகத்து 13 ஆம் தேதி 1936 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் ஒரு கர்நாடக சங்கீத கலைஞரும், இந்திய அரசியல்வாதியும் ஆவார்.

வைஜயந்திமாலா ஒரு புகழ்பெற்ற பாலிவுட் நட்சத்திரம் ஆவார். ஏறக்குறைய இருபது ஆண்டுகள் திரைப்படத் துறையில் பணியாற்றியுள்ளார். மேலும் தென்னிந்தியாவிலிருந்து அகில இந்திய அளவில் புகழ் பெற்ற முதல் நட்சத்திரம் இவர். இவரைத் தொடர்ந்து ஹேமாமாலினி, ரேகா, ஸ்ரீதேவி, ஜெயப்ரதா, மீனாக்ஷி சேஷாத்ரி, ஐஸ்வர்யா ராய் மற்றும் அசின் போன்ற பல தென்னிந்திய நடிகைகள் இவரைப் பொல அனைத்திந்திய அளவில் புகழ் பெற்றுள்ளனர்.

ஆரம்ப கால வாழ்க்கை

வைஜெயந்திமாலா சென்னையில் திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி திருக்கோயிலின் அருகில் வசித்த வைதீக அய்யங்கார் வகுப்பை சேர்ந்த பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவரது தாயார் வசுந்தராதேவியும் 1940களில் புகழ்பெற்ற ஒரு பழம்பெரும் தமிழ் நடிகை ஆவார். இவரது தந்தையார் பெயர் எம். டி. ராமன் வைஜயந்தி இவரது பள்ளி படிப்பை செக்ரடு ஹார்ட் மேல்நிலை பள்ளி, ப்ரசெண்டசன் கான்வென்ட், சர்ச் பார்க், சென்னையில் முடித்தார். இவர் குரு வாழ்வோர் ராமையா பிள்ளையிடம் சிறுவயதிலேயே பரதநாட்டியம் பயின்றார். மேலும் மனக்கல் சிவராஜா அய்யர் என்பவரிடம் கர்நாடக சங்கீதமும் பயின்றார். இவர் தனது அரங்கேற்றதினை தனது 13வது வயதிலேயே முடித்தார்.

சொந்த வாழ்க்கை

இவர் சமன்லால் பாலி என்பவரை மணமுடித்த பின்பு நடிப்பதை நிறுத்திக்கொண்டு சென்னைக்கு குடிபெயர்ந்துவிட்டார். இவர்களுக்கு சுசிந்திர பாலி என்கிற மகன் உண்டு. வைஜயந்தி மாலா தனது சுயசரிதையை 2007ஆம் ஆண்டு வெளியிட்டார்.

அரசியல் வாழ்க்கை

வைஜயந்திமாலா பாலி
பாராளுமன்ற உறுப்பினர் (லோக் சபா) தென் சென்னை மக்களவைத்தொகுதி
பதவியில்
1984–1991
பிரதமர்இந்திரா காந்தி
ராஜீவ் காந்தி
வி.பி.சிங்
சந்திரசேகர்
பி.வி.நரசிம்ம ராவ்
முன்னையவர்ரா._வெங்கட்ராமன்
பின்னவர்R. ஸ்ரீதரன்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு (1984 - 1999)
பாரதிய ஜனதா கட்சி (1999 முதல் நடப்பு)

1984இல் முதல் முறையாக வைஜெயந்திமாலா மக்களவை தேர்தலில் அகில இந்திய காங்கிரசு கட்சியின் சார்பில் தென் சென்னை மக்களவைத் தொகுதி போட்டியிட்டார். மீண்டும் 1989இல் வைஜெயந்திமாலா தேர்தலில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஆலடி அருணா போட்டியிட்டார். இந்த தேர்தலிலும் இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை 1.25 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார். பின்னர் இவர் 1993 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராகப் பரிந்துரைக்கப்பட்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வைஜெயந்திமாலா&oldid=1033425" இலிருந்து மீள்விக்கப்பட்டது