மெய்யியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கிஇணைப்பு: mt:Il-Filosofija
சி r2.7.1) (தானியங்கிமாற்றல்: ilo:Pilosopia
வரிசை 110: வரிசை 110:
[[ie:Filosofie]]
[[ie:Filosofie]]
[[ig:Ákọ na Uche]]
[[ig:Ákọ na Uche]]
[[ilo:Filosofia]]
[[ilo:Pilosopia]]
[[io:Filozofio]]
[[io:Filozofio]]
[[is:Heimspeki]]
[[is:Heimspeki]]

15:51, 16 பெப்பிரவரி 2012 இல் நிலவும் திருத்தம்

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு." திருவள்ளுவர் (கிமு 2000)
"A leader is best when people barely know that he exists, not so good when people obey and acclaim him, worst when they despise him." சீன அறிஞர் லா ஒசி
"ஆராயப்படாத வாழ்வு வாழ்வதற்குப் பெறுமதியற்றது." கிரேக்க மெய்யியலாளர் சாக்ரட்டீசு (கி.மு 470-399)
அவ்ரோசு இசுலாமிய அறிஞர் (1126 - 1198)

மெய்யியல் அல்லது மெய்க்கோட்பாட்டு இயல் அல்லது தத்துவம் (philosophy) என்னும் அறிவுத்துறையானது எது உண்மை, எது சரி, எது அறிவு, எது கலை, எது அறம், கடவுள் என்று ஏதும் உண்டா, எது அழகு என்பது போன்ற அடிப்படையான கேள்விகளைப் பற்றி ஆழ ஆராயும் துறை ஆகும். தத்துவம் என்றால் உண்மை; உள்ளதை உள்ளவாறே அறிவதைப் பற்றிய கொள்கை, இயல் என்று பொருள். மெய்யியல் துறையில் கருத்துக்கள் எவ்வாறு ஏற்கப்படுகின்றன என்பதும், காரணம், ஏரணம் (தருக்கம்) முதலியன யாவை என்றும் கூர்ந்து நோக்கி ஆராயப்படும்.

தற்காலத்தில் அறிவியல் என்று அறியப்படும் துறை சிறப்புற்று வளரும் முன்னர், மெய்யியல் துறைதான் முன்னணியில் இருந்த அறிவுத்துறை ஆகும். 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சீனர்களும், இந்தியர்களும், கிரேக்கர்களும் பிற உலக மாந்த இனங்களும் பலவாறாக அடிப்படையாக சிந்தித்து தொகுத்து வைத்த கருத்துக்கள்தாம் மெய்யியலின் தொடக்கம். மெய்யியல் என்பது ஆங்கிலத்தில் Philosophy (ஃவிலாசஃவி) என்று கூறப்படுவது. இச்சொல் கிரேக்கச் சொல்லாகிய Φιλοσοφία (philo-sophia) என்பதில் இருந்து பெற்றது. இசொல்லின் பொருள் அறிவின் பால் காதல் (அறிவால் ஈர்க்கபடும் துறை) என்பதாகும்.

மெய்யியல் என்ற துறை சார்ந்த ஆய்வு கிரேக்கம் தொடக்கம் மேற்குலகிலேயே தொடங்கியது. ஐரோப்பியர்கள் ஆசியாவை காலனித்துவ ஆட்சி செய்த போது அவர்கள் சீன இந்திய சிந்தனைகளில் பலவற்றை மெய்யியல் சிந்தனைகளாக அடையாளப்படுத்தினார்கள். இவ்வாறே பின்னர் ஆபிரிக்க, அமெரிக்க முதற்குடிமக்கள் சிந்தனைகளில் இருந்தும் மெய்யியல் கூறுகள் அடையாளம் காணப்பட்டன. பின்னர் காலனித்துவத்துக்கு உட்பட்டவர்களும் தமது சிந்தனைகளை இவ்வாறு அடையாளப்படுத்தியும், இத் துறை சார்ந்தும் செயற்படத் தொடங்கினர்.

வரலாறு

காலத்தாலும் இடத்தாலும் மெய்யியல் கொள்கைகளிலும் கருத்துக்களிலும் வேறுபாடுகள் உண்டு. மாந்த இன வரலாற்றில் ஏறத்தாழ 6,000-7,000 ஆண்டுகளாகத்தான் சற்று விரிவாக அறியத்தக்க நாகரிகங்கள் அறியப்பட்டுள்ளன. சுமேரியர்கள், எகிப்தியர்கள், எலாமைட், அக்காடியர்கள், அசிரீயர்கள் போன்று நடுகிழக்கு நாடுகளில் வாந்த மக்களின் கருத்துக்களும் கோட்பாடுகளும் மெய்யியல் கூறுகள் கொண்டவை.

உள் துறைகள்

கோட்பாடுகள்

நாகரிகங்கள் வாரியாக மெய்யியல்

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெய்யியல்&oldid=1023974" இலிருந்து மீள்விக்கப்பட்டது