அமெரிக்க முதற்குடிமக்கள் மெய்யியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமெரிக்க முதற்குடிமக்கள் மெய்யியல் என்பது அமெரிக்க முதற்குடிமக்கள் கூறிய, எழுதிய, வெளிப்படுத்திய மெய்யியல் ஆகும். அமெரிக்க முதற்குடிமக்கள் பல்வகைப்பட்டவர்கள். எனவே அவர்கள் எல்லோரும் ஒரே மெய்யியலைக் கொண்டிருக்கவில்லை. எனினும், இவர்களின் பல மெய்யியல் கருத்துக்கள் பல ஐரோப்பிய, ஆசிய மெய்யியல் கருத்துக்களில் இருந்து பல வழிகளில் வேறுபட்டவை. குறிப்பாக சொத்து, சூழலியல், முடிவெடுக்கும் முறை, ஆன்மிகம் ஆகிய துறைகளில் பல முதற்குடிக் குழுக்கள் கொண்டிருந்த மெய்யியல் மிகவும் மாறுபட்டதாகும்.

வெளி இணைப்புகள்[தொகு]