லாவோ சீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(லா ஒசி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
, லாவோ ஸீ
டாவோயிசத்தின் கடவுளாக வர்ணிக்கப்படும் லாவோ ஸீ
முழுப் பெயர் , லாவோ ஸீ
பிறப்பு கி.மு. 604, சோ டைனாஸ்டி
இறப்பு சோ டைனாஸ்டி
காலம் பண்டைய தத்துவவியல்
பகுதி கிழக்காசிய தத்துவவியல்
சிந்தனை மரபுகள் டாவோயிசம்
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
வு வெய்

லாவோ சீ (Lao Zi மற்றும் Lao Tsu என்றும் எழுதப்படும்) சீனாவின் முக்கியமான மெய்யியலாளர்களில் ஒருவர். ஆனாலும், இவர் தனியொருவரா அல்லது லாவோ சீ என்ற யோசனைகள் நிமித்தம் சேர்ந்த வெவ்வேறான தனிநபர்களின் கூட்டா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இதன் காரணமாக இவரின் பிறந்த திகதி இன்னும் அறியப்படாமலேயே காணப்படுகிறது. தாவோ தே ஜிங் (Tao Te Ching - 道德經) என்ற நூலின் ஆசிரியரும் இவராவார். இவரின் இந்த நூலின் படி, டாவோ எனப்படுகின்ற வழி மாற்றமடையாது என்பதுவும் அதுவே பிரபஞ்ச உண்மையாகவும் விளக்கப்படுகிறது. இவரின் டாவோயிசம் என்ற தத்துவக் கோட்பாடு சீனாவில் மிகவும் புகழ் பெற்றது. டாவோசியம் என்ற கோட்பாட்டின் முதன்மையான கடவுளாகவும் லாவோ சீ பொது மக்களால் இனங் காணப்படுகின்றார். லாவோ சீ என்ற சீனப் பெயரின் தமிழ் அர்த்தமாக, "முதிர்ந்த ஆசான்" என்பதைச் சொல்லலாம்.

இவர் கிமு 6 ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக சீன மரபு சொல்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=லாவோ_சீ&oldid=2013494" இருந்து மீள்விக்கப்பட்டது