பேச்சு:மெய்யியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெய்யியல் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

இதை தத்துவம் தத்துவவியல் என நகர்த்தினால் என்ன ? மெய்யியல் என்ற சொல் தமிழ் விக்கிப்பீடியாவில் மட்டும்தான் வழங்கப்படுவது போல எனக்கு தோன்றுகிறது βινόδ  வினோத் 09:27, 7 பெப்ரவரி 2008 (UTC)

கட்டுரையில் இருந்த பகுதி: (வேதகால அறிஞர்கள் கோட்பாடுகள், புத்த, சமண மதக் கோட்பாடுகள், பழந்தமிழர் கோட்பாடுகள், சீனாவின் கன்ஃவூசியசு முதலியோர் கொள்கைகள், சாக்ரட்டீசுக்கு முன்னும் பின்னும் வாழ்ந்த கிரேக்க, மற்றும் ரோமானியர்களின் மெய்யியல் கொள்கைகள், பின்னர் இடைக்கால, தற்கால மெய்யியல் கொள்கைகள் பற்றி எழுதி விரிவாக்க வேண்டும்).

திருமூலர் முதல் சித்தர்களின் பாடல்களை அலசி ஆராய்ந்ததால் பல உண்மைகள் தெளிவாகப் புரியும்.

சித்தர்கள் பெரும்பாலோர் மெய்யியலார்களே ஆவர். இவர்களை இந்தியாவில் லோகாய்தவாதிகள் என இந்திய ஆன்மீகவாதிகள் குறிக்கின்றனர்--Yokishivam (பேச்சு) 03:21, 9 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

தத்துவவியல் (மெய்யியல்)[தொகு]

தத்துவம் உலகின் மூத்த அறிவுத்துறை. தொன்மையான கல்விமுறையில் பல முக்கிய துறைகள் தத்துவப்பின்ணணியிலிருந்து வளர்ச்சி பெற்று பின்னர் தனித்தனித்துறைகளாக மாற்றம் பெற்றன. அவ்வகையில் மருத்துவம், பொறியியல், சமூகவியல், வரலாறு, புவியியல் என இன்று உலகில் காணப்படும் துறைகளுக்கெல்லாம் தாய். மனிதனை நல்வழிப்படுத்தி ஒழுக்க உணர்வோடு கைப்பிடித்து அழைத்துச் செல்லும் தந்தை. மனிதன் தன்னைப் பற்றியும், பிறரைப் பற்றியும் புரிந்து கொள்ள பலதரப்பட்ட அனுபவங்களையும், நியாயங்களையும் கற்றுத்தருகின்ற ஆசிரியர். விரிந்து கிடக்கின்ற பிரபஞ்சத்தின் பெருக்கத்தையும், நுணுகிக் கிடக்கின்ற மனதின் ஆழத்தையும் அளக்க முனையும் அதிசயம். ஐம்புலன்களுக்கு எட்டாத ஒன்றை தேடுவதும், அவ்வாறு தேடிய ஒன்றை உணர்ந்தும், அதனை விவரிக்க இயலாமல் தடுமாறுவதும் சில ஆயிரம் வருடங்களாக நிகழ்ந்து கொண்டிருக்கும் வாடிக்கை தத்துவம். ஒவ்வொரு துறையின் முன்னோடிகள் அல்லது கோட்பாட்டு ரீதியான சிந்தனையாளர்களை தத்துவவியலாளர்களாகவே கருதப்படுவார்கள். அந்த வகையில் காரல் மார்க்ஸ் (சமூகவியல்), ஜோன்டூஈ (கல்வியியல்), பேர்டரன்ட் (கணிதவியல்), ரஸல் (அளவையியல்), ப்ராய்டு (உளவியல்), ஐன்ஸ்டீன் (விஞ்ஞானம்), ஏனருஸ்ட் மாஹ்(கணிதம், அளவையியல்) போன்றவர்களைக் குறிப்பிடலாம். தத்துவம் பொதுவாக இறை, உலகம், உயிர் இவைகளைப் பற்றி ஆராய்ந்தாலும், மேலைத் தத்துவமோ பிரபஞ்சத்தை நோக்கிப் பயணித்தது. மாறாக இந்தியத் தத்துவம் தன்னைப்பற்றியும், இந்த பிறப்பின் நோக்கம் என்ன? இறப்புக்குப்பின் உயிரின் நிலை, இவற்றை யார் படைத்தது? படைத்தது இறைவன் என்றால் அவர் எங்குள்ளர்? என்ற தேடல்களில் உள்முகமாகப் தனக்குள் பயணித்தது. எனவேதான் நாடு, இனம், சமயம், காலம் இவற்றின் காரணமாக தத்துவங்களும் மாறுபட்டு நிற்கின்றன. இங்குதான் அகவய உணர்வுகளை முதன்மைப்படுத்தும் கருத்து முதல்வாதமும், பொருளை மையமாக வைத்து பொருள்முதல்வாதமும் பிறக்கின்றன. உலகப் பொதுமையாம் ஆசை, காதல், வீரம், கோபம் போன்றவை அமைந்தாலும் தத்துவம் மட்டும் இடத்திற்கு இடம் காலத்திற்கு காலம் அந்தந்த மக்களின் பண்பாடு, வாழ்க்கைமுறை போல மாறுபட்டு நிற்கின்றது. மேலைத் தத்துவ வரலாறானது சாக்ரட்டீஸ், பிளேட்டோ, அரிஸ்டாடில் இவர்களில் தொடங்கி 20ஆம் நூற்றாண்டு காரல்மார்க்ஸ், ஐன்ஸ்டீன் வரை நீள்கிறது. இப்படிஇருக்க இந்தியத் தத்துவமோ வேதகாலத்தில் தொடங்கி வேத ஏற்பும், எதிர்ப்பும் என நியாயம், வைசேடிகம், சாங்கியம், யோகம், மீமாம்சம், வேதாந்தம், சமணம், பௌத்தம், உலகாயதம் ஆசீவகம் எனவும் அத்வைதம் (சங்கரர்), துவைத (மத்துவர்), வி~;டாத்வைதம் (இராமானுஜர்) என பயணித்து வள்ளளார், இராமகிரு~;ணபரமஹம்சர், விவேகானந்தர் என இன்றுவரை நடைபோடுகிறது. இவையில்லாமல் தென்னிந்தியாவில் தனியே சிவனை முழுமுதலாக வணங்கும் சைவ சித்தாந்தம் என்றொரு சமயம் வளர்ந்து வந்தது. இப்படி மேலைத்தத்துவமும், கீழைத் தத்துவமும் (இந்தியத் தத்துவம்) பெரும்பாலும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் வளர்ந்து நிற்கிறது. இந்நிலையில் இந்தியத் தத்துவம் பெரும்பாலும் சமயங்களின் சாயலோடுதான் வெளியுலகிற்கு அறிமுகமாகியிருக்கிறது. ஆனாலும் ஆன்மிக விடுதலையின் ஆனந்தக்களிப்பே எல்லாச்சமயத் தத்துவங்களின் சாரமாகும். பெரும்பாலான சமயங்கள் மறுபிறப்பை ஏற்றுக்கொள்கின்றன. மறுபிறப்பானது இப்பிறவியில் செய்யும் வினை காரணமாக நிகழ்கின்றது எனவும் அவ்வினைகளின் தன்மைக்கேற்ப மறுபிறப்பு தீர்மானிக்கப்படும் எனக்கூறுகின்றன. ஆனால் மேலைத் தத்துவமரபு தர்க்க, விமர்சனத்துடனான தேடலை முன்வைக்கிறது. மெய்ஞானமும் விஞ்ஞானமும் இரு துருவங்கள் போல உருவகப்படுத்தப்பட்டாலும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புண்டு. விஞ்ஞானத்தின் எல்லையில் மெய்ஞானம் தொடங்குகிறது என்றும் கூறலாம். எல்ல விஞ்ஞானமும் முடிவான முடிவுகளை முன்வைத்து விடவில்லை. அதேசமயம் மெய்ஞானத்தின் வலிமையையும் குறைவாக எண்ணுவதற்குமில்லை. ஏனெனில் செவ்வாய், சனி என்ற கோள்களுக்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அதன் நிறத்தை பக்கத்திலிருந்து பார்த்தது போல் பெயர் வைத்துள்ளனர் நம் முன்னோர். இதனைக் கண்டு மேலைநாட்டு விஞ்ஞானிகள் இந்திய மெய்ஞானிகளை மிரட்சியுடனும் வியப்புடனும் பார்க்கின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மெய்யியல்&oldid=2384640" இலிருந்து மீள்விக்கப்பட்டது