இடுக்கி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 9°51′N 76°56′E / 9.85°N 76.94°E / 9.85; 76.94
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Mdmahir (பேச்சு | பங்களிப்புகள்)
சி மேற்கோள்
சி r2.7.2+) (தானியங்கிமாற்றல்: en:Idukki God's Own District
வரிசை 39: வரிசை 39:


[[de:Idukki (Distrikt)]]
[[de:Idukki (Distrikt)]]
[[en:Idukki district]]
[[en:Idukki God's Own District]]
[[es:Distrito de Idukki]]
[[es:Distrito de Idukki]]
[[fi:Idukkin piirikunta]]
[[fi:Idukkin piirikunta]]

10:47, 29 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்

இடுக்கி
—  district  —
இடுக்கி
இருப்பிடம்: இடுக்கி

, கேரளம் , இந்தியா

அமைவிடம் 9°51′N 76°56′E / 9.85°N 76.94°E / 9.85; 76.94
நாடு  இந்தியா
மாநிலம் கேரளம்
தலைமையகம் Painavu
ஆளுநர் ஆரிப் முகமது கான்
முதலமைச்சர் பிணறாயி விஜயன்[1]
மக்களவைத் தொகுதி இடுக்கி
மக்கள் தொகை

அடர்த்தி

11,29,221 (2001)

259/km2 (671/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

5105.22 கிமீ2 (1971 சதுர மைல்)

1,200 மீட்டர்கள் (3,900 அடி)

ஐ. எசு. ஓ.3166-2 IN-KL-IDU
இணையதளம் www.idukki.nic.in/

இடுக்கி மாவட்டம் கேரள மாநிலத்திலுள்ள பதினான்கு மாவட்டங்களுள் ஒன்று. பைனாவு இதன் தலைநகரம். இடுக்கி மாவட்டமே கேரளத்தின் இரண்டாவது பெரிய மாவட்டம். இது கேரளத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மாவட்டமாகும். தேவிகுளம், பெருமேடு(பீர்மேடு) வட்டங்களில் பெரும்பான்மை மக்கள் தமிழர்களே. இதன் பெரும்பாலான பகுதி (ஏறத்தாழ 97%) காடுகளும் மலைகளுமே.

சுற்றுலா

இடுக்கி அணை, தேக்கடி, மூணாறு முதலியன இடுக்கி மாவட்டத்தில் உள்ள குறிப்பிடத்தகுந்த சுற்றுலாப் பகுதிகள். இம்மாவட்டத்தில் சின்னாறு புரவலர்க்காடு, இரவிக்குளம் புரவலர்க்காடு முதலிய பாதுகாக்கப்பட்ட இடங்கள் உள்ளன.

குறிப்பிடத்தக்க இடங்கள்

கட்டப்பனை, குமுளி, மூணாறு, பைனாவு, தேக்கடி, பெருமேடு(பீர்மேடு), தேவிகுளம் முதலியன இம்மாவட்டத்தில் உள்ள குறிப்பிடத்தக்க ஊர்களாகும்.

மூணாறு தேயிலைத்தோட்டங்கள்

வரலாறு

இடுக்கி மாவட்டத்தின் தொன்மையான (பழங்கற்கால paleolithic age) வரலாறு தெளிவாக அறியப்படவில்லை. இன்றைய இடுக்கி மாவட்டம் முன்னாளில் சேர நாட்டையும் கொங்கு நாட்டையும் சேர்ந்த பகுதியாக இருந்தது. கி.பி 800-1100 காலப்பகுதியில் தேவிகுளம், உடும்பஞ்சோளா, பீர்மேடு போன்றவை அடங்கிய உயர் மலைத்தொடர் பகுதிகள் வேம்பொளி நாட்டின் பட்குதியாக இருந்தன. 16 ஆவது நூற்றாண்டில் இடுக்கியின் பெரும்பகுதி பூஞ்சார் இராசா அவர்களின் ஆட்சிக்குகீழ் வந்தது.

இடுக்கியின் அண்மைக்கால வரலாறு, ஐரோப்பிய காப்பி-தேயிலைத் தோட்டப் பயிர்த்தொழில் முதலாளிகளின் செயற்பாடுகளில் இருந்து தொடங்குகின்றது. 1877 இல் பூஞ்சார் இராசா கேரள வர்மா கண்ணன் தேவன் மலைகளில் 590 சதுர கி.மீ (227 சதுர மைல்) இடத்தை சான் டேனியல் மன்ரோ (John Danial Manroe) என்னும் பிரித்தானிய தோட்டத் தொழில் முதலாளிக்கு குத்தகைக்கு விட்டார். அக்காலப் பகுதியில் இவ்விடம் அடர்ந்த காடுகளாக இருந்தது. சான் மன்ரோ வட திரிவிதாங்கூர் நிலத் தோட்டம் பயிர்த்தொழில் குமுகம் ஒன்றை நிறுவினார். இக் குமுகத்தின் உறுப்பினர்கள் உயர்நிலப்பகுதிகளில் பல தோட்டங்கள் நிறுவினர், சாலைகள் அமைத்தனர், போக்கு வரத்து வசதிகள் செய்தனர். இதன் பயனாய் வீடுகள் அமைப்பதும் விளைபொருள்களை எடுத்துச்செல்வதும் எளிதாயிற்று.

மேற்கோள்கள்

  1. "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இடுக்கி_மாவட்டம்&oldid=1007699" இலிருந்து மீள்விக்கப்பட்டது