பீர்மேடு
Appearance
பீர்மேடு | |||
— மலைவாழிடம் — | |||
அமைவிடம் | 9°33′02″N 77°01′49″E / 9.5505100°N 77.0302580°E | ||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | கேரளம் | ||
மாவட்டம் | இடுக்கி | ||
ஆளுநர் | ஆரிப் முகமது கான் | ||
முதலமைச்சர் | பிணறாயி விஜயன்[1] | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
குறியீடுகள்
|
பீர்மேடு என்பது கேரள மாநிலத்தில் உள்ள ஒரு மலைவாழிடமாகும். இது மேற்குத் தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்தில் இருந்து 915 மீட்டர் உயரத்தில் உள்ளது. கோட்டயத்தில் இருந்து தேக்கடி செல்லும் வழியில் அமைந்துள்ளது.
பெருமேடு அழகிய அருவிகளுக்கும், பரந்த புல்வெளிகளுக்கும், நெடிய ஊசியிலை மரங்களுக்கும் பெயர் பெற்றது. திருவிதாங்கூர் மன்னர்களின் கோடைவாழிடமாக இது ஒரு காலத்தில் திகழ்ந்திருக்கிறது. இந்தியாவின் பெரிய கானுயிர்க் காப்பகங்களுள் ஒன்றான பெரியார் கானுயிர்க் காப்பகம் இங்கிருந்து 43 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
இங்கு மிளகு, ஏலம் முதலிய வாசனைப் பொருட்கள் பயிர் செய்யப்படுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece.