உள்ளடக்கத்துக்குச் செல்

குதிரை (சீன சோதிடம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குதிரைசீன சோதிடத்தின் ஏழாவது குறி ஆகும். 1930, 1942, 1954, 1966, 1978, 1990, 2002, 2014, 2026, 2038 ஆகிய வருடங்கள் குதிரை வருடம் ஆகும். இந்த வருடத்தில் பிறந்தவர்கள் புத்திசாலித்தனம்,பிடிவாதம் மற்றும் பல்திறன் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள் என்பது சீன சோதிடத்தின் கணிப்பு ஆகும்.


பெயர்க்காரணம்

[தொகு]

முன்பு ஒரு காலத்தில் முதல் வருடக்குறியாக யார் வருவது என்பதில் விலங்குகளுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. இதற்கு தீர்வாக கடவுள் ஒரு நீச்சல் போட்டியை அறிவித்தார். போட்டியின் தொடக்கத்தில் எலி, எருது, புலி, முயல், டிராகன் ஆகியவற்றை தொடர்ந்து குதிரை ஆறாவதாக வந்தது. இறுதியில் கரையை நெருங்கும் நேரத்தில் இதன் குழம்பில் இருந்து பாம்பு ஒன்று வெளிப்பட்டது. இதனால் குதிரை பயந்து சற்று பின்வாங்கிய நேரத்தில், பாம்பு முந்திக்கொண்டு ஆறாவதாக கரையை அடைந்தது. ஏழாவதாக கரையை அடைந்த குதிரையை கடவுள் ஏழாவது வருடக்குறியாக அறிவித்தார்.

குதிரை ஏழாவது சீன சோதிட குறியாக குறிப்பிடப்படுவதின் காரணமாக, சீனாவில் கூறப்படும் கதை இது.

இயல்புகள்

[தொகு]
   
நேரம் காலை 11:00 முதல் மதியம் 1:00 வரை
உரிய திசை தெற்கு
உரிய காலங்கள் கோடை காலம் (சூன்)
நிலையான மூலகம் நெருப்பு
யின்-யான் யான்
ஒத்துப்போகும் விலங்குகள் நாய், புலி, ஆடு
ஒத்துப்போகாத விலங்குகள் எலி, குரங்கு


இராசி அம்சங்கள்

[தொகு]
   
இராசி எண்கள் 1, 3, 4, 8, 13, 14, 41, 43
இராசி நிறம் சிகப்பு, அடர் கருப்பு
இராசிக் கல் புசுபராகம்

குதிரை வருடத்தைய பிரபலங்கள்

[தொகு]


குதிரை வருடத்தில் உதயமான நாடுகள்

[தொகு]

இதையும் பார்க்கவும்

[தொகு]

உசாத்துணை

[தொகு]
  • சீன விலங்கு ஜோதிடம் - சித்ரா சிவகுமார்

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=குதிரை_(சீன_சோதிடம்)&oldid=3538058" இலிருந்து மீள்விக்கப்பட்டது