உள்ளடக்கத்துக்குச் செல்

கிரஹாம் மெக்கன்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரஹாம் மெக்கன்சி
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கிரஹாம் டக்ளஸ் மெக்கன்சி
பிறப்பு24 சூன் 1941 (1941-06-24) (அகவை 83)
காட்டஸ்லோ, பெர்த்
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைவலதுகை விரைவு வீச்சு
பங்குபந்துவீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 220)22 சூன் 1961 எ. இங்கிலாந்து
கடைசித் தேர்வு9 சனவரி 1971 எ. இங்கிலாந்து
ஒரே ஒநாப (தொப்பி 5)5 சனவரி 1971 எ. இங்கிலாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1960–1974மேற்கு ஆத்திரேலியா
1969–1975லீசெஸ்டர்சயர்
1979–1980டிரான்ஸ்வால்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது ஒபது முதது ப அ
ஆட்டங்கள் 60 1 383 151
ஓட்டங்கள் 945 5,662 519
மட்டையாட்ட சராசரி 12.27 15.64 11.28
100கள்/50கள் 0/2 0/18 0/0
அதியுயர் ஓட்டம் 76 76 41*
வீசிய பந்துகள் 17,681 60 76,780 7,515
வீழ்த்தல்கள் 246 2 1,219 217
பந்துவீச்சு சராசரி 29.78 11.00 26.96 19.55
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
16 0 49 3
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
3 0 5 0
சிறந்த பந்துவீச்சு 8/71 2/22 8/71 5/15
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
34/0 1/0 201/0 38/0
மூலம்: CricketArchive, 3 பெப்ரவரி 2009

கிரஹாம் டக்ளஸ் மெக்கென்சி (Graham Douglas McKenzie பிறப்பு 24 ஜூன் 1941) என்பவர் முன்னாள் ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் ஆவார்.இவர் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார். 60 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 945 ஓட்டங்களை எடுத்துள்ளார். அதில் அதிகபட்சமாக76 ஓட்டங்களை எடுத்துள்ளார். இவரது மட்டையாட்ட சராசரி 12.27 ஆகும். பந்துவீச்சில் இவர் 246 இழப்புகளைக் கைப்பற்றியுள்ளார். அதில் 5 இழப்புகளை 16 முறை கைப்பற்றியுள்ளார். இவரின் பந்துவீச்சு சராசரி 29.78 ஆகும். இவர் 71 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 8 இழப்புகளைக் கைப்பற்றியதே இவரின் சிறந்த பந்துவீச்சு ஆகும். இவர் ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார்.இவர் 383 முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 5662 ஓட்டங்களை 15.64 எனும் சராசரியில் எடுத்தார். இவர் அதிகபட்சமாக 76 ஓட்டங்களை எடுத்தார். பின் பந்துவீச்சில் 1,219 இழப்புகளைக் கைப்பற்றினார்.

இவர் மேற்கு ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணிக்காக 1960 ஆம் ஆண்டு முதல் 1974 ஆம் ஆண்டு வரையிலும் , லீசெஸ்டர்ஷைர் துடுப்பாட்ட அணிக்காக 1969 ஆம் ஆண்டு முதல் 1975 வரையிலும், டிரான்ஸ்வால் துடுப்பாட்ட அணிக்காக 1979 முதல் 1980வரையிலும் மற்றும் ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணிக்காக 1961 முதல் 1971 வரையிலும் இவர் துடுப்பாட்டம் விளையாடினார். 1965 ஆம் ஆண்டில் விஸ்டன் துடுப்பாட்ட வீரராக அறிவிக்கப்பட்டார். அவர் ஆஸ்திரேலியாவின் முதன்மை விரைவு வீச்சாளராக ஆலன் டேவிட்சனுக்குப் பின் வந்தார். அவரது தந்தை எரிக் மெக்கென்சி மற்றும் மாமா டக்ளஸ் மெக்கென்சி ஆகியோர் மேற்கு ஆஸ்திரேலியாவுக்காக துடுப்பாட்ட விளையாடியதுடன், கார்த் 1961 ஆம் ஆண்டில் இங்கிலாந்து ஆஷஸ் சுற்றுப்பயணத்திலும் 19 ஆம் வயதில் இவர் தேர்வானார்.லார்ட்ஸில் நடந்த இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார், அந்தப் போட்டியில் 37 பந்துகளில் 5 இழப்புகளைக் கைப்பற்றினார்.அந்தப் போட்டியில் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணியினை ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி வென்றது.

ஆரம்ப ஆண்டுகளில்

[தொகு]

மெக்கென்சி ஒரு விளையாட்டுக் குடும்பத்தில் வளர்ந்தார். அவரது தந்தை, எரிக் மெக்கென்சி, 1931-32 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்க துடுப்பாட்ட அணிக்கு எதிராக சுற்றுப்பயணம் செய்த மேற்கு ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடிய தொடக்க மட்டையாளர் ஆவார். அவரது மாமா, டக்ளஸ் மெக்கென்சி, பல போட்டிகளில் மேற்கு ஆஸ்திரேலியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஒரு மட்டையாளர் ஆவார், 1945-46ல் லிண்ட்சே ஹாசெட்டின் சர்வீசஸ் அணிக்கு எதிரான தனது கடைசி போட்டியில் 88 ஓட்டங்கள் எடுத்தார். டக்ளஸ் மேற்கு ஆஸ்திரேலிய துடுப்பாட்ட சங்கத்தின் தலைவரானார். டக்ளஸ் மற்றும் எரிக் இருவரும் மேற்கு ஆஸ்திரேலியாவை வளைதடிப் பந்தாட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்தினர் .[1][2]

அவரது இளமை பருவத்தில், மெக்கென்சி ஒரு பன்முக வீரராக இருந்தார், வலது கை மட்டையாளரான இவர் எதிர்ச் சுழற்சியை வீசினார். பன்னிரண்டு வயதில், 1953 ஆம் ஆண்டில் அடிலெய்டில் நடைபெற்ற 14 வயதுக்குட்பட்ட மாநிலங்களுக்கு இடையேயான போட்டியில் மேற்கு ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணியில் இவர் இடம்பெற்றார். ஆனால் மேற்கு ஆஸ்திரேலியாவில் இளம்பிள்ளை வாதம் தொற்றுநோய்க்குப் பிறகு இவர் அந்த அணியில் விளையாடவில்லை.அடுத்த ஆண்டில் பெர்த்தில் போட்டி நடைபெற்றபோது அவர் மாநிலத்தின் தலைவராக இருந்தார், தனது அணியை வெற்றி பெறச் செய்தார்.[1]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 "Wisden 1965 – Graham McKenzie". -Wisden. 1965. பார்க்கப்பட்ட நாள் 2007-05-21.
  2. The A-Z of Australian cricketers. 1997.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரஹாம்_மெக்கன்சி&oldid=3986687" இலிருந்து மீள்விக்கப்பட்டது