லிண்ட்சே ஹாசெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆர்தர் லிண்ட்சே ஹாசெட் MBE (28 ஆகஸ்ட் 1913 - 16 ஜூன் 1993) விக்டோரியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடிய ஒரு முன்னாள் துடுப்பாட்ட வீரர் ஆவார். [1] [2] பள்ளி அளவிலான துடுப்பாட்டப் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய இவர் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் நிரந்தரமான இடத்தினைப் பெறுவதற்கு சில காலங்கள் ஆனது. அதிக ஓட்டங்களை எடுப்பதற்கு திணறினார்.1938 ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு தேர்வு செய்யப்படுவதற்கு முன்பாக இவர் ஒரு முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்தார்.தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்த தவறினார். இருந்த போதிலும் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான நான்காவது ஆசஷ் துடுப்பாட்டப் போட்டியில் வெற்றி பெறுவதற்கு இவர் உதவினார்.

2003 ஆம் ஆண்டில், அவர் ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இவர் இடம்பெற்றார். [3]

ஆரம்ப ஆண்டுகளில்[தொகு]

ஹாசெட் ஆகஸ்ட் 28, 1913 அன்று விக்டோரியாவின் இரண்டாவது பெரிய நகரமான ஜீலாங்கின் புறநகர்ப் பகுதியான நியூட்டவுனில் பிறந்தார். இவரது தந்தை எட்வர்ட் ஒரு அசையாச் சொத்து முகவராக இருந்தார். அவர் ஜீலாங் கட்டிட சங்கத்தின் செயலாளராக பணியாற்றினார் மற்றும் ஒரு தீவிர சங்க துடுப்பாட்ட வீரராக இருந்தார். [4] [5] இவரது பெற்றொர்களின் ஒன்பது குழந்தைகளில் இவர் இளையவர் ஆவார். இதில் ஆறு ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் ஆவர். இவர் சிறுவயதாக இருந்தபோது கொல்லைப்புறத்தில் மூன்று பக்க துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினர்.தனது இரு சகோதரர்களுடன் இவர் ஜீலாங் கல்லூரியில் பயின்றார், மற்றும் 14 ஆம் வயதில் முதல் லெவன் அணியில் இடம் பெற்றார்.அந்த அணிக்காக ஐந்து ஆண்டுகளில், அவர் 2,335 ரன்கள் எடுத்தார். அதில்,மூன்று ஆண்டுகள் தலைவராக இருந்தார். இதில் ஸ்காட்ச் கல்லூரிக்கு எதிராக 245 ரன்கள் எடுத்தது இவரின் அதிகபட்ச ஓட்டமாகும். அதே வேளையில் , இவர் மூன்று பருவங்களுக்கு பள்ளியின் கால்பந்து அணியின் தலைவராகவும் இருந்தார்.டென்னிஸில் விக்டோரியன் பொதுப் பள்ளி ஒற்றையர் வாகையாளர் பட்டத்தினையும் வென்றார். இவரது மூத்த சகோதரர், ரிச்சர்ட், விக்டோரியாத் துடுப்பாட்ட அணிக்காக 1930 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் நேர்ச் சுழற்பந்து வீச்சாளராக விளையாடினார். [6]

தேர்வுத் துடுப்பாட்டம்[தொகு]

வொர்செஸ்டர்ஷைர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், லீசெஸ்டர்ஷைர் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களுக்கு எதிராக முறையே 43, 146, 148 மற்றும் ஆட்டமிழக்காமல் 220 ஓட்டங்களை எடுத்தார். [1]இதனால் இவர் சுற்றுப் பயணத்திற்குத் தேர்வு செய்யப்படுவோமா என்பதில் இவருக்கு சந்தேகம் இருந்தது.[7] மேரிலேபோன் துடுப்பாட்ட சங்கம் மற்றும் ஹாம்ப்ஷயருக்கு எதிரான அடுத்த இரண்டு போட்டிகளில் அவர் 57 மற்றும் 98 ஓட்டங்களைச் சேர்த்தார். அடுத்த நான்கு ஆட்டப் பகுதிகளிலும் 30 ரன்களைக் கடக்கத் தவறிய போதிலும்,நாட்டிங்ஹாமில் நடைபெற்ற தொடரின் முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.லங்கசயர் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் 118 ஓட்டங்களை எடுத்தார். [8]

மூன்றாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டி மழையால் ரத்தானது. பின்னர் யார்க்சய்ர் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 94 ஓட்டங்களும் நாட்டிங்காம்சயர் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் 127 ஓட்டங்களையும் எடுத்தார்.[9]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "Lindsay Hassett – Cricketer of the Year". Wisden Cricketers' Almanack. Wisden. 1949. பார்க்கப்பட்ட நாள் 4 December 2007.
  2. Haigh, p. 3.
  3. Staff (29 January 2003). "Chappell comes in from the cold as Hall of Fame opens its arms". The Age. பார்க்கப்பட்ட நாள் 24 July 2019.
  4. Coleman, pp. 522–529.
  5. Whitington (1969), p. 18–23.
  6. McHarg, Jack. "Hassett, Arthur Lindsay". in Cashman et al (eds.)., pp. 109–110.
  7. "Player Oracle AL Hassett 1948". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 18 December 2008.
  8. "Player Oracle AL Hassett 1948". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 18 December 2008.
  9. "Player Oracle AL Hassett 1948". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 18 December 2008.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லிண்ட்சே_ஹாசெட்&oldid=2881384" இலிருந்து மீள்விக்கப்பட்டது