உள்ளடக்கத்துக்குச் செல்

காமெங் யானை காப்பகம்

ஆள்கூறுகள்: 27°05′N 92°26′E / 27.083°N 92.433°E / 27.083; 92.433
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காமெங் யானை பாதுகாப்பகம்
வனவிலங்கு சரணாலயம்
காமெங் யானை பாதுகாப்பகம் is located in அருணாசலப் பிரதேசம்
காமெங் யானை பாதுகாப்பகம்
காமெங் யானை பாதுகாப்பகம்
Location in Arunachal Pradesh, India/,
காமெங் யானை பாதுகாப்பகம் is located in இந்தியா
காமெங் யானை பாதுகாப்பகம்
காமெங் யானை பாதுகாப்பகம்
காமெங் யானை பாதுகாப்பகம் (இந்தியா)
ஆள்கூறுகள்: 27°05′N 92°26′E / 27.083°N 92.433°E / 27.083; 92.433
மாநிலம்அருணாச்சல பிரதேசம்/திபெத் தன்னாட்சிப் பகுதிகள்
மாவட்டம்கிழக்கு காமெங்/கோனா நாடு
தோற்றுவிக்கப்பட்டது2002
பரப்பளவு
 • மொத்தம்1,894 km2 (731 sq mi)
ஏற்றம்
3,250 m (10,660 ft)
மொழிகள்
 • அலுவல்lஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
வாகனப் பதிவுAR
அருகில் உள்ள நகரம்தேசுபூர்
IUCN வகைப்பாடுIV
Governing bodySecretary (Political), Government of Arunachal Pradesh
சராசரி கோடைகால வெப்பநிலை28 °C (82 °F)
சாரசரி குளிர்கால வெப்பநிலை−2 °C (28 °F)
Kameng Elephant Reserve

காமெங் யானை காப்பகம் (Kameng Elephant Reserve) இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தின் இமயமலை அடிவாரத்தில் உள்ள கிழக்கு மற்றும் மேற்கு காமெங் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது 2002ஆம் ஆண்டு ஜீன் மாதம் 19ஆம் நாள் 1894 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் தோற்றுவிக்கப்பட்டது. இதனுடைய தலைமையகம் சீஜோசாவில் உள்ளது.

நிலவியல்

[தொகு]

இதன் வடபகுதியில் செசா ஆர்க்கிட் சரணாலயமும் (36 கி.மீ 2 ), மேற்குப் பகுதியில் கழுகுக்கூடு வனவிலங்கு சரணாலயமும் (128 கி.மீ 2 ) மேற்கில், பாகுய் புலி பாதுகாப்பகமும் (586 கி.மீ 2 ) கிழக்கில் கமெங் ஆறும் கெல்லாங் வனப் பிரிவின் பாதுகாப்புக் காடுகளும் (1144 கி.மீ 2) அமைந்துள்ளன. இந்தப் பகுதியானது 100 மீட்டர்கள் (328 அடி) முதல் 3,250 மீட்டர்கள் (10,663 அடி) வரை உயரத்தில் அமைந்துள்ளது. [1]

விலங்குகள்

[தொகு]
மேகமூட்டப்பட்ட சிறுத்தை

இந்த வனவிலங்கு பாதுகாப்பகத்தில் 377 இந்திய யானைகளும் (2001 கணக்கெடுப்பு), வங்காள புலி, சிறுத்தை, மேகமூட்டப்பட்ட சிறுத்தை, சிவப்பு பாண்டா, கஸ்தூரி மான், கடமான், பன்றி மான், இமயமலை கருப்புக் கரடி, செந்நாய், மீன்பிடி பூனை, காட்டுப் பூனை, சுந்தா லோரிஸ், இந்திய காட்டெருமை, நரி, குள்ள நரி, பெரிய கருப்பு அணில்,புணுகுப்பூனை, முயல், செம்முகக் குரங்கு, மூடிய லங்கூர் மற்றும் மஞ்சள் தொண்டை மார்டன் . 4 வகையான இருவாய்ச்சி உட்பட 250 வகையான பட்டாம்பூச்சிகள் மற்றும் 300 வகையான பறவைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Wild Arunachal retrieved 10/11/2007 Kameng Elephant Reserve பரணிடப்பட்டது 2 ஏப்பிரல் 2007 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=காமெங்_யானை_காப்பகம்&oldid=3653083" இலிருந்து மீள்விக்கப்பட்டது