உள்ளடக்கத்துக்குச் செல்

உஸ்மான் கான் சின்வாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உசுமான் கான் சின்வாரி (Usman Khan Shinwari (பஷ்தூ: عثمان خان شينواری; பிறப்பு: 1 மே, 1994) பாக்கித்தானியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் பாக்கித்தான் அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடி வருகிறார். இடது கை வேகப் பந்துவீச்சாளரான இவர் சரய் தராகியத்தி வங்கி அணிக்காக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார். அதற்கு முன்பாக இவர் கான் ஆய்வக அணி சார்பாக விளையாடினார்[1] .2013 ஆம் ஆண்டு திசம்பரில் நடைபெற்ற இருபது20 போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 9 ஓட்டங்களில் 5 இலக்குகளைக் கைப்பற்றினார்.மேலும் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற இருபது 20போட்டியிலும் பாக்கித்தான் தேசிய அணி சார்பாக விளையாடினார்.[2][3] ஆகஸ்டு 2018 இல் பாக்கித்தான் துடுப்பாட்ட வாரியம் இவர் உட்பட முப்பத்து மூன்று வீரர்களுக்கு 2018-19 ஆம் ஆண்டிற்கான மத்திய ஒப்பந்த விருதினை வழங்கியது.[4][5]

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

உஸ்மான் சின்வாரி பஷ்தூன் இனத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் பாக்கித்தான், கைபர் மாவட்டத்தில் உள்ள லந்தி கொடலில் வளர்ந்தார். இந்தப் பகுதி ஆப்கானித்தான் எல்லை அருகே உள்ளது. இங்கு உள்ள ததாரா மைதானத்தில் தனது துடுப்பாட்ட வாழ்க்கையை ஆரம்பித்தார். இதற்கு அருகில் ததாரா மலைப் பகுதி இருந்ததால் இந்தப் பெயர் வந்தது.[6]

உள்ளூர்ப் போட்டிகள்

[தொகு]

இவர் இசட் டி பி எல் இ அணிக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடி வருகிறார். 2013 ஆம் ஆண்டில் டிசம்பரில் ஃபைசல் பேங் இருபது20 கோப்பைகான தொடர் நடந்தது. அந்தத் தொடரில் சூயி வடக்கு எரிவாயு பைபலைன்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் நான்கு ஓவர்கள் வீசி 9 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 5 இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் மிஸ்பா-உல்-ஹக் இலக்கினை வீழ்த்தி அணியினை வெற்றி பெற உதவினார். இந்தத் தொடரின் 6 போட்டிகளில் விளையாடி 11 இலக்குகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் அதிக இலக்குகளை வீழ்த்திவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.[7]

2018 ஆம் ஆண்டிற்கான பாக்கித்தான் கோப்பைக்கான தொடரில் இவர் ஃபெடரல் ஏரியாஸ் அணிக்காக விளையாடினார்.[8][9] பாக்கித்தான் சூப்பர் லீக் தொடரில் இவர் கராச்சி கிங்ஸ் அணி சார்பாக 2017 ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார்.

சர்வதேசப் போட்டிகள்

[தொகு]

உள்ளூர்ப் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் இவர் பாக்கிஸ்தான் தேர்வுக் குழுவினரின் கவனத்தை ஈர்த்தார். அதனால் 2013-14 ஆம் ஆண்டிற்கான் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான் பன்னாட்டு இருபது20 தொடரில் பாக்கித்தான் அணியில் இடம் பெற்றார். டிசம்பர் 11, 2013 இல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற முதல் பன்னாட்டு இருபது20 போட்டியில் இவர் அறிமுகமானார்.[2] அந்தப் போட்டியில் ஒரு ஓவர் வீசி 9 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் இலகினைக் கைபப்ற்றவில்லை. பின் இரண்டாவது போட்டியில் நான்கு ஓவர்கள் வீசி 52 ஓட்டங்க:ளை விட்டுக் கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. பின் மட்டையாட்டத்தில் 3 பந்துகளில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 2 ஓட்டங்கள் எடுத்தார்.

2017 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்குஎதிரான பன்னாட்டு இருபது20 தொடரில் பாக்கித்தான் அணியில் இடம்பெற்றார்.[10] பின் அதே அண்டில் அக்டோபரில் இலங்கைத்ய் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத் தொடருக்கான அணியில் இடம்பெற்றார்.[11] அக்டோபர் 20 இல் நடைபெற்ற போட்டியில் இவர் அமுகமானார்.[12] இந்தத் தொடரின் இரண்டாவது போஒட்டியில் 21 பந்துகளி வீசி தனது முதல் ஐந்து இலக்குகளைக் கைப்பற்றினார்[13]. இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி வெற்றி பெற்றது. இவர் ஆட்டநாயகனாகத் தேர்வானார். மேலும் பாக்கித்தான் அணி தொடரை 5-0 எனக்கைப்பற்றியது.[14]

சான்றுகள்

[தொகு]
  1. "Usman Khan". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 11 December 2013.
  2. 2.0 2.1 "Pakistan reward rookie bowler with T20 spot". Dawn. 10 December 2013. http://www.dawn.com/news/1061698/pakistan-reward-rookie-bowler-with-t20-spot. பார்த்த நாள்: 11 December 2013. 
  3. "Throwback to the 90s but questions remain". Dawn. 11 December 2013. http://www.dawn.com/news/1061904/throwback-to-the-90s-but-questions-remain. பார்த்த நாள்: 11 December 2013. 
  4. "PCB Central Contracts 2018–19". Pakistan Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 6 August 2018.
  5. "New central contracts guarantee earnings boost for Pakistan players". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 August 2018.
  6. "Whole Landi Kotal is in celebration, says Shinwari's father on son's brilliant spell". The Express Tribune. பார்க்கப்பட்ட நாள் 20 October 2018.
  7. "Usman, Haris stars in convincing ZTBL win". ESPN cricinfo. பார்க்கப்பட்ட நாள் 4 December 2013.
  8. "Pakistan Cup one-day tournament to begin in Faisalabad next week". Geo TV. பார்க்கப்பட்ட நாள் 21 April 2018.
  9. "Pakistan Cup Cricket from 25th". The News International. பார்க்கப்பட்ட நாள் 21 April 2018.
  10. "Kamran Akmal returns to Pakistan ODI and T20I squads". ESPN Cricinfo. 
  11. "Shin injury puts Amir out of ODI series". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 8 October 2017.
  12. "4th ODI (D/N), Sri Lanka tour of United Arab Emirates and Pakistan at Sharjah, Oct 20 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 20 October 2017.
  13. "Khan's record haul destroys SL". Cricket Australia. பார்க்கப்பட்ட நாள் 23 October 2017.
  14. "5th ODI (D/N), Sri Lanka tour of United Arab Emirates and Pakistan at Sharjah". Espn cricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 October 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உஸ்மான்_கான்_சின்வாரி&oldid=3719168" இலிருந்து மீள்விக்கப்பட்டது