உள் ஆசியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள் ஆசிய வரைபடம் - இந்தியானா பல்கலைக்கழகம், ஐக்கிய அமெரிக்கா.
உள் ஆசிய வரைபடம் - டொராண்டோ பல்கலைக்கழகம், கனடா.

உள் ஆசியா என்பது ஆசியாவின் வடக்கு மற்றும் நிலம்சூழ் பகுதிகளை குறிப்பதாகும். இதனுள் வட ஆசியா, மத்திய ஆசியா மற்றும் கிழக்கு ஆசியா ஆகியவை அடங்கும். மேற்கு சீனா, வடகிழக்கு சீனா மற்றும் உருசிய சைபீரியா ஆகியவையும் இதனுள் வருகின்றன. 'மத்திய ஆசியா'வின் வரையறைக்குள் உள் ஆசியா பொருந்துகிறது. பெரும்பாலும் வரலாற்றுப் பகுதிகளே இவ்வாறு பொருந்துகின்றன. ஆனால் உள் ஆசியா எனக் குறிப்பிடப்படும் மஞ்சூரியா போன்ற சில பகுதிகள் எந்த வரையிலும் மத்திய ஆசியாவிற்குள் வருவதில்லை. முன்னாள் சின் அரசமரபின் உண்மையான சீனாவின் மேற்கு மற்றும் வடக்கு எல்லைகள் என உள் ஆசியாவை குறிப்பிடலாம். உண்மையான கிழக்காசியாவானது உள் ஆசியாவின் எல்லைகளாக அமைகிறது. உண்மையான கிழக்கு ஆசியாவில் சீனா, ஜப்பான் மற்றும் கொரியா ஆகிய நாடுகள் அடங்குகின்றன.[1]

உள் ஆசியா என்பது வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு வாறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. சில நேரங்களில் உண்மையான சீனா என்ற பதத்துக்கு எதிர்பதமாக விளங்குகிறது. உண்மையான சீனா என்பது ஆன் சீன மக்களை பெரும்பான்மையாக கொண்ட சீனாவின் உண்மையான மாகாணங்களை குறிக்கிறது. 1800ல் உள் ஆசியா என்பது நான்கு முக்கிய பகுதிகளை தன்னகத்தே கொண்டிருந்தது. அவை மஞ்சூரியா (நவீன வடகிழக்கு சீனா மற்றும் வெளி மஞ்சூரியா), மங்கோலியா (உள் மற்றும் வெளி), சிஞ்சியாங் (கிழக்கு துருக்கிஸ்தான்), மற்றும் திபெத். சீனாவின் சிங் அரசமரபால் இப்பகுதிகள் அப்போதுதான் வெல்லப்பட்டிருந்தன. சிங் ஆட்சியில் பெரும்பாலான நேரங்களின்போது பழைய சீன மாகாணங்களில் இருந்து வேறுபட்ட நிர்வாக அமைப்புகளை கொண்டு இப்பகுதிகள் ஆளப்பட்டன.[2] சிங் அரசாங்கத்தின் ஒரு பிரிவான லிபான் யுவான், சிங் பேரரசின் உள் ஆசிய பகுதிகளை மேற்பார்வையில் வைத்திருந்தது.

மற்றுமொரு உள் ஆசிய வரைபடம் - மங்கோலிய பகுதிகள்

உசாத்துணை[தொகு]

  1. Bulag, Uradyn E. (October 2005). "Where is East Asia?: Central Asian and Inner Asian Perspectives on Regionalism". Japan Focus.
  2. The Cambridge History of China: Volume 10, Part 1, by John K. Fairbank, p37
"https://ta.wikipedia.org/w/index.php?title=உள்_ஆசியா&oldid=3356551" இலிருந்து மீள்விக்கப்பட்டது