மங்கோலியப் பீடபூமி
மங்கோலியப் பீடபூமி | |||||||
---|---|---|---|---|---|---|---|
சீன எழுத்துமுறை | 蒙古高原 | ||||||
எளிய சீனம் | 蒙古高原 | ||||||
|
மங்கோலியப் பீடபூமி மத்திய ஆசியப் பீடபூமியின் ஒரு பகுதியாக உள்ளது. இது 37 ° 46'-53 ° 08'N மற்றும் 87 ° 40'-122 ° 15'E புவியியல் ஆள்கூற்றுக்கு இடையில் அமைந்துள்ளது. இது சுமார் 32 இலட்சம் சதுர கி.மீ. (12 இலட்சம் சதுர மைல்) பரப்பளவில் உள்ளது. இதன் கிழக்கில் கிரேட்டர் ஹிங்கன் மலைகள் , தெற்கில் இன் மலைகள் , மேற்கில் அல்டாய் மலைகள் , வடக்கில் சியான் மற்றும் கென்டீ மலைகள் உள்ளன. [1] இப்பீடபூமியில் கோபி பாலைவனமும், உலர்ந்த புல்வெளி மண்டலங்களும் அடங்கும். இது ஏறக்குறைய 1,000 முதல் 1,500 மீட்டர் உயரம் கொண்டது. இதில் குலுன்புயிர் மிகக் குறைவான இடமாகவும், அல்டாய் மிக உயர்ந்த இடமாகவும் உள்ளது.[1]
அரசியல் ரீதியாக, பீடபூமி மங்கோலியா, சீனா மற்றும் உருசியா இடையே பிரிக்கப்பட்டுள்ளது. சீனாவில், உள் மங்கோலியா மற்றும் சிஞ்சியாங் சுயாட்சி மண்டலங்களின் பகுதிகள் பீடபூமியில் உள்ளன. உருசியாவில், பீடபூமி புர்யத்தியா மற்றும் தெற்கு இர்குத்சுகு பகுதிகளைக் கொண்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Zhang, Xueyan; Hu, Yunfeng; Zhuang, Dafang; Qi, Yongqing; Ma, Xin (2009). "NDVI spatial pattern and its differentiation on the Mongolian Plateau". Journal of Geographical Sciences (Springer-Verlag) 19: 405. doi:10.1007/s11442-009-0403-7.
வெளி இணைப்புகள்
[தொகு]- John, Ranjeet; et al. "Vegetation response to extreme climate events on the Mongolian Plateau from 2000 to 2010". IOP Publishing. பார்க்கப்பட்ட நாள் 26 November 2016.
{{cite web}}
: Explicit use of et al. in:|last2=
(help) - "Mongolian Plateau region, Mongolia and China". Britannica.com. பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். 2 August 1999. பார்க்கப்பட்ட நாள் 26 November 2016.