இரஞ்சனா கௌகர்
பத்மஸ்ரீ ரஞ்சனா கௌகர் (Ranjana Gauhar) [1] ஓர் ஒடிசி நடனக் கலைஞர் ஆவார். நவீன மற்றும் புராணக் கருப்பொருள்களை சித்தரிக்கும் பல நடங்களை ரஞ்சனா தயாரித்து இயக்கியுள்ளார்.
இவர் 2003இல் பத்மசிறீ விருதினை வென்ள்ளார். [2] இந்திய குடியரசுத்தலைவரிடமிருந்து 2007ஆம் ஆண்டிற்கான சங்கீத நாடக அகாதமி விருது பெற்றுள்ளார்.
ஆரம்பக் காலம்
[தொகு]தில்லியில் 1949 இல் பிறந்த தனது கல்வியை தில்லி, லேடி இர்வின் பள்ளியில் முடித்து பின்னர், லேடி சிறீராம் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். [3] திருமதி ரஞ்சனா கௌகர் ஆரம்பத்தில் தில்லியின் கலைக் கல்லூரியில் ஓவியராகப் பயிற்சி பெற்றார். அதைத் தொடர்ந்து, ஒடிசி நடனத்திற்கு அறிமுகமான இவர், திருமதி அலோகா பணிக்கர் மற்றும் குரு மாயதர் ரூத் ஆகியோரின் கீழ் தில்லியில் உள்ள சிறீராம் பாரதிய கலா மையத்தில் கலையில் பயிற்சி பெற்றார். ரஞ்சனா கௌகர் சிங்ஜித் சிங் என்பவரிடம் மணிப்பூரி நடனத்தையும், மாயா ராவ் என்பவரிடம் கதக் நடனத்தையும் கற்றுக்கொண்டார். இவர் அபியான் என்ற நாடகக் குழுவைத் தொடங்கி, நிறுவனத்தின் பல தயாரிப்புகளில் முக்கிய நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார். பல ஆண்டுகளாக, ரஞ்சனா கௌகர் ஒடிசி நடனத்தின் முன்னணி கலைஞராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். மேலும் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள முக்கிய நடன விழாக்களில் நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். [4]
நிகழ்ச்சிகள்
[தொகு]இரஞ்சனா கௌகர் தனது ஒடிசி நடனக் கலையுடன் நாட்டின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்துள்ளார். இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள மதிப்புமிக்க நடன விழாக்களில் பங்கேற்றுள்ளார். இந்தியாவின் இந்த கலாச்சார தூதர், இந்தியாவின் திருவிழாவில், ராணி எலிசபெத் ராயல் ஃபெஸ்டிவல் ஹால், பிளைமவுத்தின் ராயல் ஹால், காமன்வெல்த் நிறுவனம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், மிட்லாண்ட் கலை மையம், [[பர்மிங்காம், தக்லெம் அருங்காட்சியகம், பெர்லின், ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், கிரீஸ், செர்பியா, சைப்ரஸ், குவைத், சுவிட்சர்லாந்து, துனிசியா, யூகோஸ்லாவியா, ஜப்பான், ஆலந்து, போலந்து, செக்கோஸ்லோவாக்கியா, ஆஸ்திரியா, [[குரோஷியா] மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளான கொலம்பியா, ஈக்குவடார், பனாமா மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளில் ரஞ்சனா தனது நடன நிகழ்ச்சிகளை நிகழத்தியுள்ளார். மெக்ஸிகோவில், செர்வென்டினோ விழாவில் ரஞ்சனா இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். கம்போடியா, பூட்டான், வியட்நாம் மற்றும் [[இலங்கை], ஆப்பிரிக்கா கண்டம், மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் உள்ள பார்வையாளர்களுக்கு நடுவே ஒடிஸி நடனத்தை நிகழ்த்தினார். இவரது குழு 2011 சூலை மாதம் தென்கொரியாவில் இந்தியாவின் திருவிழாவைத் துவக்கியது. அதைத் தொடர்ந்து ஜப்பான்,சீனா, [[சிங்கப்பூர்] மற்றும் [[பிலிப்பைன்ஸ்] ஆகிய நாடுகளில் நிகழ்ச்சிகள் நடத்திய்து. உலகெங்கிலும் உள்ள பல்வேறு விழாக்களில் இவர் தனி மற்றும் குழு நடனங்களை வழங்கியுள்ளார். [5]
ஆளுமை
[தொகு]ஒடிசி: தி டான்ஸ் டிவைன் உள்ளிட்ட பல புத்தகங்களை இவர் எழுதியுள்ளா. இது ஒடிசி நடனத்தின் பரிணாமத்தையும் அழகியலையும் ஆராய்கிறது. இவர் இந்த விஷயத்தில் ஆவணப்படங்களையும் தயாரித்துள்ளார். இந்திரா காந்தி பிரியதர்ஷினி விருது, ஒரிசாவின் மகாரி விருது (2007), மற்றும் பத்மசிறீ (2003) உள்ளிட்ட பல விருதுகளையும் கௌகர் பெற்றுள்ளார். இவர் நடன அகாடமியான உட்சவ் என்ற நடன நிறுவனத்தை நிறுவியுள்ளார். அங்கு இவர் இளம் நடனக் கலைஞர்களுக்கு பயிற்சி அளிக்கிறார். ரஞ்சனா ஒடிசி நடனத்தில் பங்களித்ததற்காக இந்திய குடியரசுத்தலைவரிடமிருந்து 2007ஆம் ஆண்டிற்கான சங்கீத நாடக அகாதமி விருது பெற்றுள்ளார். [6] மகாரியின் ஒடிசி நடனத்தின் கோயில் பாரம்பரியத்தில் ஆராய்ச்சி செய்ததற்காக கூட்டாள்ர் கௌரவத்தையும் பெற்றுள்ளார். [7]
குறிப்புகள்
[தொகு]- ↑ "Ranjana Gauhar.com". Ranjana Gauhar.com. Archived from the original on 2010-10-15. பார்க்கப்பட்ட நாள் 2015-03-06.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-03-01. பார்க்கப்பட்ட நாள் 2020-03-01.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-09-18. பார்க்கப்பட்ட நாள் 2020-03-01.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-03-01. பார்க்கப்பட்ட நாள் 2020-03-01.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-09-18. பார்க்கப்பட்ட நாள் 2020-03-01.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-03-01. பார்க்கப்பட்ட நாள் 2020-03-01.