உள்ளடக்கத்துக்குச் செல்

இஞ்சி பூண்டு மசாலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரவைக்கல் (கல்வம், குழவி) உள்ளே பூண்டும் இஞ்சியும் உள்ளன.

இஞ்சி பூண்டு மசாலா (Ginger garlic masala) என்பது சமைக்காத இஞ்சியையும், வெள்ளைப்பூண்டினையும், கைவிசையால் நசுக்கி, கலந்து பயன்படுத்தப்படும் சமையல் துணைப்பொருள் ஆகும்.[1][2] இதனுடன் சில நேரங்களில் உப்பும் கலந்து நசுக்குவர்.

இக்கலவையை இந்திய சமையலில் அடிக்கடி பயன்படுத்துவர்.[3] அதிகமாக இறைச்சி உணவு சமையலிலும், காய்கறி சமையல் வகைகளில் குறைவாகவே பயன்படுத்தப்படுகிறது. தாய்லாந்து உணவு வகைகளிலும் இதனைப் பயன்படுத்துவர்.[4]

இக்கலவை பயனுள்ள வேதிப்பொருட்களைத் தன்னகத்தேப் பெற்றுள்ளது.[5] இவ்வேதிப்பொருட்கள், செரிமானத்தினை மேம்படுத்துகிறது. மேலும், உணவுப் பொருளின் சுவையையும் மேம்படுத்தும் சுவையூக்கியாகவும் இருக்கிறது.

இத்தகைய கலவையை உடனுக்குடன் தயாரித்து சமையலில் பயன்டுத்துவர். இதற்கு மாற்றாக மின்சாரத்தில் இயங்கும் அரவை இயந்திரத்தையும் பலர் பயன்படுத்துவர். இதனால் குறைந்த நேரத்தில் அதிக கலைவையை உருவாக்க முடிகிறது. கலவையாக அல்லாமல், நன்கு அரைத்து பசை போல் ஆக்கியதை, இஞ்சி பூண்டு விழுது என்று அழைப்பர். இந்த விழுது, கடைகளில் பதப்படுத்தி புட்டிகளிலும், சிறு நெகிழிப்பைகளிலும் அடைக்கப்பட்டு விற்பனையும் செய்யப்படுகிறது. குறிப்பாக பிரியாணி உணவில், இஞ்சி பூண்டு விழுது பயன்படுத்தப்படுகிறது.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Tarla Dalal - Ginger Garlic Paste
  2. Drysdale, Bethann (2014). 10 Ways to Use Hardneck Garlic (Recipe Book). Mic James.
  3. Why Ginger Garlic paste is essential to Indian food
  4. https://thaiginger.com/common-ingredients-used-in-thai-cuisine/
  5. "Health benefits". Archived from the original on 2015-06-14. பார்க்கப்பட்ட நாள் 8 ஏப்பிரல் 2024.
  6. Times of India-Chicken Biryani

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இஞ்சி_பூண்டு_மசாலா&oldid=3933206" இலிருந்து மீள்விக்கப்பட்டது