அருணா கோரி
அருணா கோரி | |
---|---|
பெண்கள் நல மற்றும் கலாச்சார அமைச்சர் | |
பதவியில் 15 மார்ச் 2012 – 19 மார்ச் 2017 | |
தொகுதி | பில்கார், கான்பூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 15 மார்ச்சு 1973 கான்பூர், உத்தரப் பிரதேசம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பிரகதிஷீல் சமாஜ்வாடி கட்சி (லோகியா) (2019-தற்போது வரை) சமாஜ்வாதி கட்சி (2019க்கு முன்னர்) |
துணைவர் | உமேஷ் சந்திர கோரி |
பிள்ளைகள் | வத்சல் கோரி |
வாழிடம்(s) | கான்பூர், உத்தரப் பிரதேசம் |
தொழில் | அரசியல்வாதி |
அருணா கோரி (Aruna Kori; பிறப்பு 15 மார்ச் 1973) ஓர் இந்திய அரசியல்வாதியும், சமூக சேவகரும் ஆவார். இவர்சமாஜ்வாதி கட்சியின் சட்ட மன்ற உறுப்பினரகாக உத்தரப் பிரதேசத்தில் பில்கார் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். மேலும் இவர் உத்தரபிரதேச அரசின் பெண்கள் நல மற்றும் கலாச்சார அமைச்சராகவும் இருந்தார். [1]
அரசியல் வாழ்க்கை
[தொகு]கோரி சமாஜ்வாதி கட்சியில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தற்போது பிரகதிஷீல் சமாஜ்வாடி கட்சியின் தலைவராக இருக்கிறார்.[2] உத்தரபிரதேச பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சராக இருந்த முதல் பெண்ணாவார்.கான்பூரில் உள்ள பில்காரில் இருந்து உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராக முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] இவர் உத்தரபிரதேசத்தின் இளம் பெண் அமைச்சர் என்ற பெருமையையும் பெற்றார்.[4]
உத்தரபிரதேசத்தின் 48 அமைச்சர்கள் கொண்ட சபையில் அருண் குமாரி கோரி, ஒரே பெண் அமைச்சராக இருந்தார்.[5] பெண்கள், நல்வாழ்வு மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகள் இவரிடம் ஒப்படைக்கப்பட்டன.
பெயர் குழப்பம்
[தொகு]இருப்பினும், இவரது பெயர் குறித்து குழப்பம் உள்ளது. இவருடைய சரியான பெயரான அருண்குமாரி கோரி என்ற சரியானபெயரில் இல்லாமல் அருணா கோரியாக பதவிப்பிரமாணம் செய்தார். "உண்மையில் என் பெயர் அங்கு அருணா குமாரி என்று பதிவாகி இருந்தது. பதவிப்பிரமாணம் செய்யும் போது கூட அது அருணா குமாரி என்று குறிப்பிடப்பட்டது, அதனால்தான் நான் அருணா குமாரி என்று கையெழுத்திட்டு சத்தியம் செய்தேன்" என்கிறார் அருண்குமாரி கோரி.
இது இவருடைய பெயரைப் பற்றியது மட்டுமல்ல. வயது குறித்து ஒரு குழப்பமும் இருக்கிறது. 2007இல் தேர்தலில் போட்டியிடும் போது, தேர்தல் ஆணையத்திற்கு அளித்த வாக்குமூலத்தில் தனது வயது 35 என அறிவித்தார். 2012இல் இவர் தனது வயது 38 என்று குறிப்பிட்டார். இந்த குழப்பத்தை நீக்கி, "என் பிறந்த தேதி 1973 மார்ச் 11 ஆகும். 2007ஆம் ஆண்டு பிரமாணப் பத்திரத்தில் என் வயது 35 என யாரோ தவறாக எழுதியுள்ளனர்" எனக் கூறினார்.
அமைச்சரவை
[தொகு]சமாஜ்வாடி கட்சியின் ஒரு தலித் மற்றும் இளம் பெண் முகமாக இருப்பதால், இவர் சட்டத்திற்கு சரியாக பொருந்துகிறார். சமாஜ்வாடி கட்சி, மாற்றத்திற்கு உட்பட்டு, உத்தரபிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தனது அமைச்சரவை குழுவில் சேர்க்க முடிவு செய்தார்.
இவர் மிகவும் இளமையாக இருந்தாலும், இவர் அரசியலுக்கு மூத்தவராகக் கருதப்படுகிறார். அகிலேஷ் தனது முதல் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஒரு வருடம் முன்பு இவர் தேர்தலில் போட்டியிட்டார். 26 வயதில், 1999 மக்களவைத் தேர்தலில் கட்டாம்பூரில் இருந்து சமாஜ்வாதி கட்சி வேட்பாளராக இருந்தார். தேர்தலில் கிட்டத்தட்ட 105 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இவர் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் பியாரே லால் சங்வார் என்பவரால் தோற்கடிக்கப்பட்டார். இவர் 1,56,477 வாக்குகள் பெற்றார். பியாரே லால் சங்வார் 1,56,582 வாக்குகள் பெற்றார்.
தேர்தல்
[தொகு]2002 ஆம் ஆண்டில், கான்பூரின் தனித் தொகுதியான போக்னிபூரிலிருந்து 2002 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இவருக்கு கட்சி வாய்ப்பு அளித்தது. இவர் தனது நெருங்கிய போட்டியாளரான பகுஜன் சமாஜ் கட்சியின் நிர்மலா சங்க்வாரை கிட்டத்தட்ட 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
தனக்கு எதிராக குற்றவியல் பதிவு ஏதுமில்லாத அரசியல்வாதிகளில் இவரும் ஒருவர். 59 லட்சம் மதிப்புள்ள சொத்துகளை கொண்டிருந்தார். (இவரது பிரமாணப் பத்திரத்தில் அறிவிக்கப்பட்டபடி).
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "UP Minister Aruna Kori says society, not govt, responsible for rape; draws flak". 4 January 2015.
- ↑ "Archived copy". Archived from the original on 13 July 2015. பார்க்கப்பட்ட நாள் 13 July 2015.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Archived copy". Archived from the original on 13 July 2015. பார்க்கப்பட்ட நாள் 13 July 2015.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Students get laptops with calls to make Mulayam Singh Yadav PM | Kanpur News - Times of India".
- ↑ "Arun Kumari Kori Only woman in UP Cabinet". 18 March 2012.