அமுருதா சுரேன்குமார்
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | அம்ருதா சுரேன்குமார் | |||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 24 அக்டோபர் 2006 போர்னிமவுத், டோர்செட், இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலக்கை | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலக்கை நடுத்தரம் | |||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பன்முக வீரர் | |||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||
2022–இன்று | மிடில்செக்சு | |||||||||||||||||||||||||||||||||||||||
2023–இன்று | சன்ரைசர்சு | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கெட்ஆர்க்கைவ், 20 அக்டோபர் 2023 |
அமுருதா சுரேன்குமார் (Amuruthaa Surenkumar, பிறப்பு: 24 அக்டோபர் 2006) என்பது இலங்கைத் தமிழ்ப் பின்னணியைக் கொண்ட ஆங்கிலேயத் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் மிடில்செக்சு பெண்கள் துடுப்பாட்ட அணியிலும், சன்ரைசர்சு பெண்கள் அணியிலும் விளையாடி வருகிறார். வலக்கை மிதப் பந்து வீச்சாளரும், வலக்கை துடுப்பாட்டமும் செய்கிறார்.[1][2]
உள்ளூர் போட்டிகளில்
[தொகு]அமுருதா 2022 ஆம் ஆண்டில் மாவட்ட மட்டத்திலான போட்டிகளில் விளையாடத் தொடங்கினார், மிடில்செக்சு பெண்கள் அணியில் அண்டிங்டன்சயர் அணிக்கு எதிராக விளையாடி 11* ஓட்டங்களை எடுத்தார்.[3] அடுத்த போட்டியில் அதே அணிக்கு எதிராக 17* ஓட்டங்களையும் எடுத்தார், 2 ஓவர்களில் 8 ஓட்டங்களைக் கொடுத்து ஒரு இலக்கையும் கைப்பற்றினார்.[4]
அமுருதா 2021-2023 காலப்பகுதியில் சன்ரைசர்சு பெண்கள் கழகக் குழுவில் சேர்க்கப்பட்டார்.[5][6][7][8] தனது முதல் மூத்த விளையாட்டு ஒப்பந்தத்தில் 2023 சூலை 1 அன்று கையெழுத்திட்டார்.[9] தனது முதல் போட்டியை 2023 சூலை 2 இல் சதர்ன் வைப்பர்சு அணிக்கு எதிராக விளையாடி 25 ஓட்டங்களையும், 8.3 ஓவர்களில் 44 ஓட்டங்களைக் கொடுத்து 2 இலக்குகளையும் எடுத்தார்.[10] அந்தப் பருவத்துக்காக ஒட்டுமொத்தமாக ஏழு போட்டிகளில் விளையாடி 29.40 சராசரியில் ஐந்து இலக்குகளைக் கைப்பற்றினார்.[11]
பன்னாட்டுப் போட்டிகள்
[தொகு]2024 ஏப்ரலில் இலங்கையில் நடைபெற்ற மூன்று நாடுகள் பங்கேற்ற பெண்கள் 19-அகவைக்குட்பட்டோருக்கான ஒருநாள் பன்னாட்டுச் சுற்றுப் போட்டியில் இங்கிலாந்து பெண்கள் அணியில் அமுருதா விளையாடினார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Player Profile: Amu Surenkumar". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 July 2023.
- ↑ "Player Profile: Amuruthaa Surenkumar". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 3 July 2023.
- ↑ "Huntingdonshire Women v Middlesex Women, 18 April 2022". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 3 July 2023.
- ↑ "Huntingdonshire Women v Middlesex Women, 18 April 2022". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 3 July 2023.
- ↑ "North London teenager sets sights on professional cricket". Ham & High. 5 May 2021. பார்க்கப்பட்ட நாள் 3 July 2023.
- ↑ "Sunrisers Academy Announcement". Sunrisers Cricket. 21 April 2021. பார்க்கப்பட்ட நாள் 3 July 2023.
- ↑ "Sunrisers Announce Academy Squad for 2021/2022". Sunrisers Cricket. 21 April 2021. பார்க்கப்பட்ட நாள் 3 July 2023.
- ↑ "Sunrisers Academy Squad Confirmed for 2023 Season". Sunrisers Cricket. 17 November 2022. பார்க்கப்பட்ட நாள் 3 July 2023.
- ↑ "Amu Surenkumar Earns First Senior Contract". Sunrisers Cricket. 1 July 2023. பார்க்கப்பட்ட நாள் 3 July 2023.
- ↑ "23rd Match, Chelmsford, July 2 2023, Rachael Heyhoe Flint Trophy: Sunrisers v Southern Vipers". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 July 2023.
- ↑ "Records/Rachael Heyhoe Flint Trophy 2023 - Sunrisers/Batting and Bowling Averages". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 20 October 2023.