உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Chittarkottai

ஆள்கூறுகள்: 9°25′38″N 78°54′15″E / 9.42722°N 78.90417°E / 9.42722; 78.90417
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சித்தார்கோட்டை
—  village  —
சித்தார்கோட்டை
அமைவிடம்: சித்தார்கோட்டை, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 9°25′38″N 78°54′15″E / 9.42722°N 78.90417°E / 9.42722; 78.90417
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் இராமநாதபுரம்
அருகாமை நகரம் இராமநாதபுரம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் சிம்ரன்சித் சிங் கக்லோன், இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி இராமநாதபுரம்
மக்களவை உறுப்பினர்

நவாஸ் கனி

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்
இணையதளம் www.chittarkottai.com


புவியியல் அமைப்பு:

[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 9°25′38″N 78°54′15″E [4]ஆகும். சித்தார்கோட்டை இராமநாதபுரத்திலிருந்து சாலை வழியாக 13 கி.மீ. ஆகும். இராமநாதபுரத்திற்கு வட கிழக்காவும் தேவிபட்டிணத்திற்கு தெற்கிலும் அமைந்துள்ளது. இராமேஸ்வரம் செல்லும் வழி இதன் வழியாகச் செல்கின்றது. கடற்கரை 3 கி.மி தொலைவில் உள்ளது.


சுற்றியுள்ள கிரமங்கள்:

[தொகு]

சித்தார்கோட்டை பஞ்யாத்தில் ஏழு கிராமங்கள் உள்ளன. வாழூர், பழனிவலசை, முடிவீரன்பட்டினம், குலசேகரக்கால், அம்மாரி, ஜமீன்தார்வலசை மற்றும் இலந்தைக் கூட்டம் இதில் அடங்கும்.

மக்கள் வகைப்பாடு:

[தொகு]

சித்தார்கோட்டை மற்றும் வாழூரில் பெரும்பகுதியானவர்கள் முஸ்லிம்கள். பெரும்பகுதியான மக்கள் வெளிநாடுகளில் தான் வியாபாரம் செய்து வருகின்றனர். பலர் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் குடியுரிமை பெற்றுள்ளனர். சித்தார்கோட்டை மற்றும் வாழூர், மக்கள் பெரும்பகுதி முஸ்லிம்கள் ஆவர். முடிவீரன்பட்டிணம் மற்றும் பழனிவழசை உள்ளவர்கள் பெரும்பகுதி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பழனிவழசையில் விவசயாயமும் செய்கின்றனர்.


கல்விஅறிவு:

[தொகு]

முன்பு பெண்களும் கிராமத்தில் உள்ளவர்களும் கல்வியில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் சித்தார்கோட்டையின் முஹமதியா மேல்நிலைப் பள்ளியின் வளர்ச்சியால் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 95 சதம் பெண்களும் ஆண்களும் தற்போது படித்துள்ளனர். மிக அதிகமானவர்கள் கல்லூரிகளில் படித்து இளநிலை மற்றும் மேல்நிலைப் படிப்புடன் சிறந்து விளங்குகின்றனர்.

பள்ளிவாசல்:

[தொகு]

இங்கே மூன்று பள்ளிவாசல்கள் உள்ளன. ஜன்னத்துல் ஃபிர்தெளஸ் பள்ளி கம்பீரமாக ஊரின் நுழைவிலேயே உள்ளது. இதன் மினாரா 4 கி.மீ தூரத்திலேயே தெரியும். அதே போன்று சின்னப்பள்ளிவாசல் மற்றும் பிலால் பள்ளிவசால் உள்ளது. வாழூரிலும் ஒரு பள்ளிவாசல் உள்ளது.

அமைப்புகள்:

[தொகு]

சித்தார்கோட்டையில் முஸ்லிம் தர்மபரிபாலண சபா என்ற அமைப்பு உள்ளது. அதே போன்று ஒவ்வொரு கிராமங்களிலும் கிரமாநிர்வாக சபை முறையே நடைபெற்று வருகிறது. அந்தந்த ஊர்களின் பிரச்சனைகள், திருமணம் போன்ற காரியங்கள் இதன் மூலம் நடைபெறுகின்றது.

அதே போன்று அனைத்து கிரமாம சபை நிர்வாகத்திற்கிடையே மிக நல்ல உறவு உள்ளதால் அனைவர்களும் மிகவும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர்.

ஹிந்து முஸ்லிம் என்ற பாகுபாடின்றி அனைவர்களும் ஒற்றுமையுடன் வாழ்வதை சாதாரணமாகப் பர்க்கலாம்.


இணையதளங்கள:

[தொகு]

[1] [2]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. http://www.chittarkottai.com/wp?p=309
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Chittarkottai&oldid=702489" இலிருந்து மீள்விக்கப்பட்டது