பயனர்:Amuthanan Irapann
இந்திய | |
---|---|
பெயர் | அமுதனன் இர்பான் |
பால் | ஆண் |
பிறந்த நாள் | சூன் 10, 1985 |
தற்போதைய வசிப்பிடம் | மும்பை |
தேசியம் | இந்திய தமிழ் |
இனம் | தமிழர் |
கல்வி, தொழில் | |
தொழில் | பொறியாளர் |
கல்வி | பொறியியலில் பட்டப்படிப்பு |
கொள்கை, நம்பிக்கை | |
பொழுதுபோக்கு | தகவல் தொழில்நுட்பம், துணிகரச் செயல்கள், புகைப்படம் எடுத்தல், இயற்கை விரும்பி, நண்பர்களுடன் செல்லும் பயணம், காடுகளில் வசிப்பது அல்லது காட்டு வாழ்க்கையினை ரசித்தல் |
நூல்கள் | தகவல் தொழில்நுட்பம் |
ஆர்வம் | துணிகரச் செயல்கள் |
விக்கி விபரம் | |
இணைந்தது | 18 ஏப்ரல் 2014 |
முதல் தொகுப்பு | விதர்பா_எக்ஸ்பிரஸ் |
About me
[தொகு]தமிழின் மீது தீராத ஆர்வம் கொண்ட நான் தமிழ் சம்பந்தப்பட்ட எனக்குத் தெரிந்த சில விக்கிபீடியா கட்டுரைகளை மொழிமாற்றம் செய்து வருகின்றேன். பெரும்பாலும் போக்குவரத்து, அரண்மனை மற்றும் ஹோட்டல்கள் என எனக்கு நன்றாகத் தெரிந்த சிலவற்றை கடந்த சில மாதங்களாக தொகுத்து பதிவிட்டு வருகிறேன். ஹைதராபாத்தில் பிறந்திருந்தாலும் தமிழை கூடிய வரை தவறில்லாமல் எழுதவும், படிக்கவும், பேசவும் முயற்சித்து வெற்றி கண்டுள்ளேன். எனது கட்டுரைகளையும், கருத்துக்களையும் தமிழ் விக்கிபீடியாவில் படித்து அது சம்பந்தப்பட்ட எத்தகைய கருத்தாக இருந்தாலும் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தகவல் தொழில்நுட்ப பொறியியல் துறையில் பட்டம் பெற்றதால் பெரும்பாலான அத்துறை சம்பந்தப்பட்ட பெருவாரியான செய்திகளை எளிதாக கைபற்ற முடிகிறது.இருப்பினும் அவை தவிர தமிழ் மக்களுக்கு எளிதாக புரியும் வகையில் ஒரு சில ஹோட்டல்களின் விவரங்கள் மற்றும் போக்குவரத்து வசதிகளின் விவரங்களை இணையத்தின் துணைகொண்டு எழுதிவருகிறேன். எனது கட்டுரைகள் பற்றிய தங்களின் மேலான கருத்துக்களை தெரியப்படுத்தும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். எனது எழுத்துமுறையில் ஏதேனும் மாற்றம் தேவைப்பட்டாலும் எந்த வித கூச்சமும் இன்றி தெரியப்படுத்துங்கள். ஏனெனில் தவறுகளில் இருந்து தான் தகுந்த பாடம் படிக்க இயலும். என்னைப் பற்றியும் என் கட்டுரைகளையும் படித்ததற்கு நன்றி!.