தி பார்க், சென்னை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தி பார்க் சென்னை
The Park Chennai
The Park Hotels Logo.png
Hotel chainThe Park Hotels
பொதுவான தகவல்கள்
இடம்சென்னை, இந்தியா
முகவரி601, அண்ணா சாலை, சென்னை, தமிழ்நாடு 600 006
ஆள்கூற்று13°03′11″N 80°15′00″E / 13.052956°N 80.249923°E / 13.052956; 80.249923ஆள்கூறுகள்: 13°03′11″N 80°15′00″E / 13.052956°N 80.249923°E / 13.052956; 80.249923
ஆரம்பம்15 மே 2002
உரிமையாளர்தி பார்க் ஹோட்டல்ஸ்
Managementதி பார்க் ஹோட்டல்ஸ்
நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை12
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்ஹர்ஷ் பெட்னர் கூட்டு, லாஸ் ஏஞ்சலஸ்
பிற தகவல்கள்
Number of rooms214
Number of suites15
Number of restaurants5
இணையத் தளம்
http://www.theparkhotels.com/chennai-park/chennai-park.html

தி பார்க், சென்னை (The Park Chennai) சென்னையில் அண்ணா மேம்பால சந்திப்பிற்கு அருகிலுள்ள ஐந்து நட்சத்திர விடுதியுடன் கூடிய உணவகம் ஆகும்.[1]மே 15, 2002 ல் திறக்கப்பட்ட இந்த விடுதி ஏபிஜே சுரேந்திர குழுவிற்கு சொந்தமானது. இந்த விடுதிக்கான முதலீடு 1000 மில்லியன் ரூபாய் ஆகும். [2]

வரலாறு[தொகு]

1940 முதல் செயல்பட்டுவந்த ஜெமினி ஸ்டூடியோஸ் இருந்த இடத்தில் பார்க் ஹோட்டல் கட்டப்பட்டுள்ளது. தமிழ் திரைப்படங்களை உருவாக்கி வந்த 1940 இல் தீக்கிரையாகி ஏலத்திற்கு வந்த மோஷன் பிக்சர்ஸ் ஸ்டுடியோவை எஸ்.எஸ்.வாசன் ஏலத்தில் வாங்கி மறுகட்டுமானம் செய்து ஜெமினி ஸ்டூடியோசை நிறுவினார். அவ்வளாகத்தின் ஒருபுறத்தில் 1990ல் கட்டப்பட்ட இரு கட்டிங்களில் ஒன்றை, கொல்கத்தாவினை மையமாக கொண்டு செயல்பட்ட பார்க் ஹோட்டல்களின் குழுமம் 21-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாங்கி ஐந்து நட்சத்திர விடுதியாக உருவாக்கியது. இவ்விடுதி மே 15, 2002-ல் திறக்கப்பட்டது. அதே ஆண்டில் மற்றொரு கட்டிடம் இந்தியன் வங்கியால் 930 மில்லியன் ரூபாய்க்கு ஏலம் விடப்போவதாக முடிவெடுக்கப்பட்டது. [3]

2010-ஆம் ஆண்டு, மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் ஹோட்டலின் சுற்றுச்சுவர் மற்றும் நீரூற்றுக்களைக் கட்டியதற்காக சென்னை மாநகராச்சியுடன் சட்ட ரீதியான பல பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தது. [4]

உணவகமும் அறைகளும்[தொகு]

போட்டிக் உணவகத்தின் கலைச் சாயலுடன் கட்டப்பட்டுள்ள இந்த விடுதியில் மொத்தம் எட்டு அடுக்குமாடிக்கட்டிடங்களில் 214 அறைகள் உள்ளன. இதில் 127 உயர்வசதியுடைய அறைகள் 31 மதிப்பு கூட்டப்பட்ட அறைகள், 41 குடியிருப்பு அறைகள், 6 சிறிய அறைகள், 5 உயர்ரக அறைகள், 3 முதன்மைத் தன்மையுடைய அறைகள் மற்றும் 1 குடியரசுத்தலைவர் அறையும் அடங்கும். உணவு வசதிகள் கொண்ட தாய் உணவு விடுதி “லோட்டஸ்” என்ற பெயருடன் இயங்கி வருகிறது. இத்துடன் 601 மதுபான அருந்தகம், பாஸ்டா-சாக்கோ மதுபான அருந்தகம் மற்றும் அக்வா உணவகமும் இவ்விடுதியின் எட்டாவது மாடியில் உள்ளன. நகரத்திலுள்ள தோல் தொழிற்சாலைகளை கௌரவப்படுத்தும் வகையில் அங்குள்ள ஒரு மதுபான அருந்தகத்திற்கு லெதர் பார் எனப்பெயரிட்டுள்ளனர். [5] இவ்விடுதியில் வணிகவளாகமும் உள்ளது.

ஹோட்டலில் சிறிய அளவில் பொதுக்கூட்டங்கள் நடைபெறுவதற்கென மூன்று பொதுக்கூட்ட மண்டபங்கள் உள்ளன. அவை, சான்சரா, சந்திரா மற்றும் சூரியா. இவை ஒவ்வொன்றிலும் ஒரே நேரத்தில் 500 பேர் கூடலாம்.

விருதுகள்[தொகு]

2006 ஆம் ஆண்டு, இதன் உணவக உணவு விலைப் பட்டியலின் மூலம் இந்தியாவின் முதல் பத்து விலையுயர்ந்த உணவகங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டது.[6]

குறிப்புகள்:[தொகு]

  1. "Category : 5 Star Delux". List of Approved Hotels as of : 06/01/2013.Ministry of Tourism, Government of India. 2013. (Retrieved 6 Jan 2013). மூல முகவரியிலிருந்து 18 ஜனவரி 2013 அன்று பரணிடப்பட்டது.
  2. "Premium boutique hotel in Chennai". The Hindu (Chennai: The Hindu)16 May 2002 (Retrieved 4 Dec 2011). மூல முகவரியிலிருந்து 20 ஜூன் 2014 அன்று பரணிடப்பட்டது.
  3. "Recalling what Gemini did". The Hindu(Chennai: The Hindu) (Retrieved 3 Feb 2012).
  4. "Hotel's petition against Chennai Corporation dismissed". The Hindu (Chennai: The Hindu). (25 June 2010). பார்த்த நாள் 4 Aug 2012.
  5. "Park Hotels launches Chennai property". Business Line (Chennai: The Hindu) (16 May 2002). மூல முகவரியிலிருந்து 20 ஜூன் 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் Retrieved 4 Aug 2012.
  6. "International Dining: India's Most Expensive Restaurants". Forbes (16 May 2002). பார்த்த நாள் Retrieved 4 Aug 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_பார்க்,_சென்னை&oldid=3247593" இருந்து மீள்விக்கப்பட்டது