2024 பாக்கித்தான் பொதுத் தேர்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2024 பாகிஸ்தான் பொது தேர்தல்

← 2018 8 பிப்ரவரி 2024 2029 →
 
தலைவர் நவாஸ் ஷெரீப் இம்ரான் கான் பிலாவல் பூட்டோ ஜர்தாரி
கட்சி பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (ந) சுயேச்சை பாகிஸ்தான் மக்கள் கட்சி

பாகிஸ்தான் தேசிய நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளைக் காட்டும் வரைபடம்

நடப்பு தற்காலிக பிரதம அமைச்சர்

அன்வர் உல் ஹக் காக்கர்
சுயேச்சை2024 பாகிஸ்தான் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 8 பிப்ரவரி 2024 அன்று336 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுவதாக, பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் 15 டிசம்பர் 2023 அறிவிக்கையும், தேர்தல் அட்டவணையும் வெளியிட்டது. இத்தேர்தலுடன் பாகிஸ்தானின் 4 மாகாணங்களின் சட்டமன்றத் தேர்தல்களும் நடத்தப்பட உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் முக்கியமாக இம்ரான் கான் தலைமையிலான பாக்கித்தான் தெஹரீக்-எ-இன்சாஃப், கோகர் அலி கான் தலைமையிலான பாக்கித்தான் தெஹரீக்-எ-இன்சாஃப் கட்சி, நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) கட்சி மற்றும் பிலாவல் பூட்டோ ஜர்தாரி தலைமையிலான பாக்கித்தான் மக்கள் கட்சி போட்டியிடுகிறது.

பின்னணி[தொகு]

பாகிஸ்தான் நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். கடைசியாக 25 சூலை 2018 அன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவுற்றதால் தேர்தல்கள் நடைபெறுகிறது.

தேர்தல் அட்டவணை[தொகு]

பாகிஸ்தான் நாடாளுமன்ற மக்களவைக்கான 336 தொகுதிகளுக்கான தேர்தலை 8 பிப்ரவரி 2024 நடத்த தேர்தல் ஆணையம் 15 டிசம்பர் 2023 அன்று அறிவிக்கை அட்டவணை வெளியிட்டது. [1]

வரிசை எண் தேர்தல் நிகழ்வு அட்டவனை
1 தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவிக்கை வெளியிடல் 19 டிசம்பர் 2023
2 வேட்பு மனு தாக்கல் செய்தல் 20 டிசம்பர் 2023 முதல் 22 டிசம்பர் 2023 வரை
3 வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் பெயர்களை வெளியிடல் 23 டிசம்பர் 2023
4 வேட்பு மனு பரிசீலனை முடிவு நாள் 24 டிசம்பர் 2023 to 30 டிசம்பர் 2023
5 வேட்பு மனு மீதான் ஆட்சேபனைகளை பரிசீலித்து முடிவு செய்தல் 3 சனவரி 2024
6 வேட்பு மனுக்களை மேல்முறையீட்டு தீர்வாணையம் முடிவு செய்தல் 10 சனவரி 2024
7 திருந்திய வேட்பாளர்களின் பெயர்களை வெளியிடுதல் 11 சனவரி 2024
8 வேட்பு மனு திரும்பப் பெறும் நாள் 12 சனவரி 2024
9 வேட்பாளர்களுக்கு தேர்தல் சின்னங்கள் ஒதுக்கும் நாள் 13 சனவரி 2024
10 தேர்தல் நாள் & வாக்கு எண்ணிக்கை நாள் 8 பிப்ரவரி 2024

தேர்தல் நடைமுறை[தொகு]

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் மொத்தமுள்ள 336 இடங்களில் 266 இடங்களுக்கு நேரடித் தேர்தல் மூலம் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.[2] பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட 60 இடங்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை யில், பாக்கித்தானின் 4 மாகாணங்களில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் பெற்ற மொத்த வாக்குகள் அடிப்படையில் ஒதுக்கப்படுகிறது.

அரசியல் கட்சிகள்[தொகு]

பெயர் கோரிக்கை
கருத்தியல்
தலைவர் வாக்கு பங்கீடு
in 2018
2018 நாடாளுமன்றத் தேர்தல் தேர்தலுக்கு முந்தைய இடங்கள்
PTI பாக்கித்தான் தெஹரீக்-எ-இன்சாஃப் மக்களைக் கவரும் கொள்கை
இஸ்லாமிய ஜனநாயகம்
ஊழல் எதிர்ப்பு
இம்ரான் கான் 31.82%
116 / 272
149 / 342
PML(N) பாகிஸ்தான் மக்கள் கட்சி (நவாஸ்) பழைமை வாதம்
பொருளாதார விடுதலை
கூட்டாட்சி
நவாஸ் ஷெரீப் 24.35%
64 / 272
82 / 342
PPP பாகிஸ்தான் மக்கள் கட்சி சமூக ஜனநாயகம்
இஸ்லாமிய ஜனநாயகம்
முன்னேற்றம்
பிலாவல் பூட்டோ ஜர்தாரி 13.03%
43 / 272
54 / 342
JUI-F ஜமியத் இ இஸ்லாம் (பாசில்) இசுலாமியம்
பழமைவாதம்
பாசில் உர் ரகுமான் 4.85%
11 / 272
14 / 342
JI ஜமாத் இ இஸ்லாமி பாகிஸ்தான் இஸ்லாமியம்
சமூக பழமைவாதம்
சிராஜ் உல் ஹக்
1 / 272
1 / 342
MQM(P) முத்தஹிதா குவாமி இயக்கம் தாராளவாதம்
சமூக தாராளவாதம்
சமூக ஜனநாயகம்
புலம்பெயர்ந்தோர் தேசியவாதம்
மதச்சார்பின்மை
காலித் மக்பூர் சித்திக் 1.38%
6 / 272
7 / 342
TLP டெக்ரீக் இ லப்பைக் பாகிஸ்தான் இசுலாமியவாதம் சாத் உசைன் ரிஸ்வி 4.21%
0 / 272
0 / 342
GDA ஜனநாயகப் பெருங்கூட்டணி பிரதேச வாதம் பகோரோவின் எட்டாம் பீர் 2.37%
2 / 272
3 / 342
ANP அவாமி தேசிய கட்சி பஷ்தூன் தேசியவாதம்
ஜனநாயக சோசலிசம்
அஸ்பன்தியர் வாலி கான் 1.54%
1 / 272
1 / 342
PML(Q) பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (Q) பழமைவாதம்
தேசியவாதம்
சுஜாத் உசைன் 0.97%
4 / 272
5 / 342
BAP பலுசிஸ்தான் அவாமி கட்சி கூட்டாச்சி
இஸ்லாமிய ஜனநாயகம்
காலித் உசைன் மக்சி 0.60%
4 / 272
5 / 342
BNP(M) பலுசிஸ்தான் தேசிய கட்சி (எம்) பலூச்சி தேசியவாதம் அக்தர் மெங்கல் 0.45%
3 / 272
4 / 342
AML அவாமி முஸ்லீம் லீக் (பாகிஸ்தான்) இஸ்லாமியவாதம் சேக் ரசீத் அகமது 0.22%
1 / 272
1 / 342
JWP ஜம்பூரி வட்டன் கட்சி பலூச் தேசியவாதம் சாஜெயின் புக்தி 0.04%
1 / 272
1 / 342

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sadozai, Irfan (2023-12-15). "ECP issues election schedule for Feb 8 general polls". DAWN.COM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-12-15.
  2. ECP decreases NA seats to 336 in preliminary delimitation of constituencies GEO TV, 31 May 2022