2023 ஆந்திரப் பிரதேச ரயில் விபத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொகுப்பு 2023 ஆந்திரப் பிரதேச ரயில் விபத்து
Map
விவரங்கள்
நாள்அக்டோபர் 29, 2023 (2023-10-29)
இடம்விசயநகர மாவட்டம் (ஆந்திரப் பிரதேசம்)
நாடுஇந்தியா
தடம்ஹவுரா - சென்னை முதன்மை வழித்தடம்
Operatorஇந்திய இரயில்வே
Incident typeஆபத்தில் சமிக்ஞைைய கடந்து செல்லல்
காரணம்மனிதப்பிழை
தரவுகள்
தொடருந்துகள்2
இறப்புகள்14
காயம்30

2023 ஆந்திரப் பிரதேச ரயில் விபத்து 29 அக்டோபர் 2023 அன்று, தென்னிந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் விஜயநகரம் மாவட்டத்தில் ஏற்பட்டது. இரண்டு பயணிகள் ரயில்கள் மோதிக்கொண்டதில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 50 பேர் காயமடைந்தனர். [1] இயக்கத்தில் இருந்த ரயில் மற்றொரு நின்று கொண்டிருந்த பயணிகள் ரயிலின் மூன்று பெட்டிகள் மீது மோதியதால் தடம் புரண்டு இவ்விபத்து ஏற்பட்டது.

நிகழ்வு[தொகு]

29 அக்டோபர் 2023 அன்று, மாலை 07:00 மணியளவில் (13:30 கி.இ.நே) ஹவுரா - சென்னை முதன்மை வழித்தடத்தில் [2] இவ்விபத்து நிகழ்ந்தது. விசாகப்பட்டினம்- பலாசா விரைவு இரயிலின் மீது ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்திலிருந்து ஒடிசாவின் ராயகடாவிற்குப் பயணித்துக்கொண்டிருந்த பயணிகள் ரயில் மோதி மேல்நிலை கம்பிவடம் உடைந்து விசாகப்பட்டினம்- பலாசா விரைவு இரயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. [3] [4] [5] கந்தகப்பள்ளி மற்றும் அலமண்டா ரயில் நிலையங்களுக்கு இடையே இந்த மோதல் ஏற்பட்டது [6] இதன் விளைவாக பலாசா பயணிகளின் மூன்று பெட்டிகள் மற்றும் ராயகடா பயணிகள் இரயில் உந்துப் பொறி மற்றும் இரண்டு பெட்டிகள் கடுமையாக சேதமடைந்தன. [7] இதன் விளைவாக குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 50 பேர் காயமடைந்தனர். [8]

மீட்பு நடவடிக்கைகள்[தொகு]

தேசிய பேரிடர் மீட்பு படையினர், காவல்துறையினர் மற்றும் ரயில்வே ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். பழுதடைந்த பெட்டிகளை அகற்றுவதற்காக கனரக பாரந்தூக்கிகள் தளத்தில் நிறுத்தப்பட்டன. [9]

இரண்டாவது ரயிலின் "மிகை சமிக்ஞையால்" ஏற்பட்ட "மனிதப் பிழை" மோதலுக்கு வழிவகுத்ததாக இந்திய கிழக்கு கடற்கரை தொடருந்து மண்டலத்தின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி பிசுவஜித் சாகூ தெரிவித்தார் [10] இச்சம்பவம் குறித்து இந்திய ரயில்வேயின் முதற்கட்ட விசாரணையில், ராயகடா பயணிகள் ரயில் இரண்டு குறைபாடுள்ள தானியங்கி சமிக்ஞைகளை விதிமுறைகளை மீறி கடந்து சென்றதால் இவ்விபத்து நிகழ்ந்ததாகக் கண்டறியப்பட்டது. மேலும் மோதியதற்கு அதன் ஓட்டுநர் மற்றும் உதவி ஓட்டுநர் பொறுப்பேற்றனர். கொல்லப்பட்டவர்களில் இரு பணியாளர்களும் அடங்குவர். [11]

விபத்தைத் தொடர்ந்து, 33 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதோடு 22 ரயில்கள் மாற்றுப்பாதைகளில் திருப்பி விடப்பட்டன. [12] பின்னர், 20 மணி நேரத்திற்குள் ரயில் பாதை சீரமைக்கப்பட்டு, ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன. [13]

நிவாரணம்[தொகு]

பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து இறந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2 இலட்சம் மற்றும் காயமடைந்த ஒவ்வொருவருக்கும் ரூ.50,000 வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Andhra Pradesh: India train crash kills 13 and injures dozens". BBC News. https://www.bbc.com/news/world-asia-india-67234331. பார்த்த நாள்: 30 October 2023. 
  2. "At least 11 dead, over 60 injured as two trains collide near Vizianagaram in Andhra Pradesh" (in en-IN). The Hindu. 29 October 2023 இம் மூலத்தில் இருந்து 30 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231030110343/https://www.thehindu.com/news/national/andhra-pradesh/many-dead-as-two-trains-collide-near-vizianagaram-in-andhra-pradesh/article67474016.ece. 
  3. "At least 10 reported dead after trains collide in India" (in en). CNN. 29 October 2023 இம் மூலத்தில் இருந்து 30 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231030114541/https://edition.cnn.com/2023/10/29/asia/india-vizianagaram-train-collision-deaths/index.html. 
  4. "Andhra Pradesh: India train crash kills 13 and injures dozens". BBC News. https://www.bbc.com/news/world-asia-india-67234331. பார்த்த நாள்: 30 October 2023. 
  5. "At least 10 dead in Indian train collision" (in en). Reuters. 29 October 2023 இம் மூலத்தில் இருந்து 30 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231030105136/https://www.reuters.com/world/india/passenger-train-derails-indias-andhra-pradesh-ndtv-says-3-dead-2023-10-29/. 
  6. "13 dead as two passenger trains collide in Andhra, officials say driver missed red signal" (in en). The Indian Express. 29 October 2023 இம் மூலத்தில் இருந்து 29 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231029210022/https://indianexpress.com/article/india/andhra-pradesh-train-accident-live-updates-9004874/lite/. 
  7. "Andhra train accident updates | Initial probe points finger at Rayagada passenger train crew" (in en-IN). The Hindu. 30 October 2023 இம் மூலத்தில் இருந்து 30 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231030200115/https://www.thehindu.com/news/national/andhra-pradesh-vizianagaram-train-accident-live-updates-oct-30-2023/article67475483.ece. 
  8. "Train Accident Highlights: 14 Killed, 50 Injured As 2 Trains Collide In Andhra". NDTV. October 30, 2023 இம் மூலத்தில் இருந்து 30 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231030163947/https://www.ndtv.com/india-news/andhra-pradesh-train-accident-live-updates-9-killed-40-injured-as-2-trains-collide-in-andhra-4526421. 
  9. "Andhra Pradesh train accident | 'Overshot' main cause of fatal accident, suspects Railway officials" (in en-IN). The Hindu. 30 October 2023 இம் மூலத்தில் இருந்து 30 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231030200150/https://www.thehindu.com/news/national/andhra-pradesh/ap-train-accident-death-toll-increases-number-of-injured-goes-up/article67476910.ece. 
  10. "Andhra Pradesh: India train crash kills 13 and injures dozens". BBC News. https://www.bbc.com/news/world-asia-india-67234331. பார்த்த நாள்: 30 October 2023. 
  11. "Train Accident Highlights: 14 Killed, 50 Injured As 2 Trains Collide In Andhra". NDTV. October 30, 2023 இம் மூலத்தில் இருந்து 30 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231030163947/https://www.ndtv.com/india-news/andhra-pradesh-train-accident-live-updates-9-killed-40-injured-as-2-trains-collide-in-andhra-4526421. 
  12. "Andhra Pradesh: India train crash kills 13 and injures dozens". BBC News. https://www.bbc.com/news/world-asia-india-67234331. பார்த்த நாள்: 30 October 2023. 
  13. "Andhra Pradesh train accident | 'Overshot' main cause of fatal accident, suspects Railway officials" (in en-IN). The Hindu. 30 October 2023 இம் மூலத்தில் இருந்து 30 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231030200150/https://www.thehindu.com/news/national/andhra-pradesh/ap-train-accident-death-toll-increases-number-of-injured-goes-up/article67476910.ece.