உள்ளடக்கத்துக்குச் செல்

ராயகடா

ஆள்கூறுகள்: 19°10′N 83°25′E / 19.17°N 83.42°E / 19.17; 83.42
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராயகடா
ରାୟଗଡ଼ା
நகரம்
ராயகடா தொடருந்து நிலையம்
ராயகடா is located in ஒடிசா
ராயகடா
ராயகடா
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் ராயகடா மாவட்டத்தில் ராயகடா நகரத்தின் அமைவிடம்
ராயகடா is located in இந்தியா
ராயகடா
ராயகடா
ராயகடா (இந்தியா)
ஆள்கூறுகள்: 19°10′N 83°25′E / 19.17°N 83.42°E / 19.17; 83.42
நாடு இந்தியா
மாநிலம்ஒடிசா
மாவட்டம் ராயகடா
தோற்றுவித்தவர்மன்னர் விஸ்வநாத தேவ கஜபதி
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்ராயகடா நகராட்சி
ஏற்றம்
207 m (679 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்71,208
மொழிகள்
 • அலுவல்ஒடியா
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
765001
தொலைபேசி குறியிடு06856
வாகனப் பதிவுOD-18
இணையதளம்http://rgda.in
தொங்கு பாலம், சக்ககுட்டா, இராயகடா நகரம்

இராயகடா (Rayagada) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள ராயகடா மாவடடத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். இராயகடா நகரத்தை நிறுவியவர் கலிங்கத்தின் ஜெய்ப்பூர் சிற்றரசர் விஸ்வநாத் தேவ் கஜபதி (கிபி 1527-1531) ஆவார். 1947 இந்திய விடுதலைக்கு முன்னர் வரை ராயகடா நகரம், ஜெய்ப்பூர் இராச்சியத்தின் தலைநகராக விளங்கியது.[1] இந்நகரம் அருகே உள்ள தேவகிரி மலையில் பஞ்சமுக சிவலிங்கம் கோயில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 24 வார்டுகளும், 16,362 வீடுகளும் கொண்ட ராயகடா நகரத்தின் மொத்த மக்கள்தொகை 71,208 ஆகும். அதில் ஆண்கள் 36,036 மற்றும் 35,172 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 976 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 78.62% ஆக உள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 94.06%, இசுலாமியர் 2.21%, கிறித்தவர்கள் 2.93% மற்றும் பிறர் 0.81% ஆகவுள்ளனர்.[2] இநநகரத்தில் பெரும்பான்மையோர் ஒடியா மொழி பேசுகின்றனர்.

அரசியல்

[தொகு]

இந்நகரம் இராயகடா சட்டமன்றத் தொகுதிக்கும் (பட்டியல் பழங்குடி மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது), கோராபுட் மக்களவை தொகுதிக்கும் உட்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  • KSB Singh (1939). Nandapur A Forsaken Kingdom. Utkal Sahitya Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-86772-17-1. {{cite book}}: Invalid |ref=harv (help)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராயகடா&oldid=3818405" இலிருந்து மீள்விக்கப்பட்டது