2018 ஹுவாலியன் நிலநடுக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டாய்வான் மத்திய வானிலை ஆய்வு மையத்தின்படி 2018 ஹுவாலியன் நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவு
2018 ஹுவாலியன் நிலநடுக்கத்தை சித்தரிக்கும் வரைபடம்

2018 ம் ஆண்டு, 6 பிப்ரவரி அன்று, இடநேரம் 23:50 மணிக்கு, உந்தத்திறன் ஒப்பளவில் 6.4 ஆக பதிவான நிலநடுக்கம் டாய்வானை தாக்கியது.[1] மெர்காலி தீவிர அளவில் வீஐஐ (மிகவும் தீவிரம்) ஆக பதிவான ஹுவாலியன் கடற்கரை எல்லை தான் அதிக பாதிக்கப்பட்டு, அந்நிலநடுக்கத்தின் நடுவமாக அமைந்தது.[2] குறைந்தபட்சம் 12 இறப்புகளும் 277 க்கும் மேற்பட்ட காயமடைந்தோரும் அறிவிக்கப்பட்டுள்ளது.[3]

தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு[தொகு]

டாய்வானின் வரலாற்றில் வலிமை வாய்ந்த நிலநடுக்கங்கள் உள்ளன. [4] இத்தீவு, ஃபிலிப்பீன மற்றும் இயூரேசிய கண்டத்தட்டுகளின் நடுவிலான கூட்டுச்சதி மண்டலத்தில் அமைகின்றது. நிலநடுக்கத்தின் இடத்தில், இக்கண்டத்தட்டுகள் ஓராண்டுக்கு 75 மில்லிமீட்டர் என்ற விகிதத்தில் குறுகிப் போகின்றன.

நிலநடுக்கம்[தொகு]

எம் 4.6 க்கும் மேற்பட்ட 9 முந்தையநடுக்கங்களைக் கொண்டு அப்பகுதியை பல நாட்களாய் பாத்தித்து, பல நிகழ்வுகளின் வரிசையில் மிகப்பெரிதாக அமைந்தது இந்நிலநடுக்கம். 4 பிப்ரவரி அன்று எம். 4.8 நில அதிர்வுடன் தொடங்கி, அதே நாள் சில கிலோமீட்டர் தொலைதூரத்தில் இன்னொரு எம். 6.1 அதிர்வும் நிகழ்ந்தது.[2] 6 பிப்ரவரி அன்றைய நிலநடுக்கம் சாய்வுச்சீட்டு குழப்பத்தால் நடைபெற்றது.[2]

இந்நிலநடுக்கம், 2016 ல், டாய்வானின் டாய்னான் பகுதியில் நிகழ்ந்து, 117 நபர்களை கொன்ற நிலநடுக்கத்தின் இரண்டாம் நூற்றாண்டு அன்றே நடந்தது. [5]

இந்நிலநடுக்கத்தை பல மறுநிலவதிர்வுகளால் பின்பற்றியது. இவற்றின் மிகப்பெரிது 7 பிப்ரவரி அன்று, ஹுவாலியன் நகரத்திற்கு 19 கிலோமீட்டர் வடகிழக்கு திசையில் இடநேரம் 23:21 க்கு நடைபெற்று, வீஐ (வலுவானது) என்ற அதிகபட்ச தீவிரம் அடைந்த எம். 5.7 நிகழ்வாக அமைந்தது.[6]

சேதம்[தொகு]

டாய்வானியக் குடியரசுத்தலைவர் சாய் இங்-வென் என்பவர் ஹுவாலியன் நகரத்திலான ஒரு சாய்ந்த கட்டிடத்தை ஆய்வு செய்கின்றார்

ஹுவாலியன் நகரத்தின் ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்தன; இவற்றில் 4 முழுமையாக அழிந்து வீழ்ந்தன. மார்ஷல் தங்கும்விடுதியின் தரைத்தளங்கள் தகர்ந்துப் போனதால், இருவர் உயிரிழந்தனர். தரைத்தளங்களின் அழிவால் தீவிரமாக சரிந்துள்ள யுன் மென் ஸுயீ டீ குடியிருப்பு கட்டிடத்தைச் சேர்ந்த பலர் உயிரிழந்தும், 8 பிப்ரவரி அன்று, சுமார் 6:30 இடநேர மணி வரை, 7 குடியிருப்பாளர்கள் இன்னும் காணாமல் போயிருக்கின்றனர். இன்னும் கட்டிட சரிவை தவிர்க்க, பாரந்தூக்கிகளால இக்கட்டிடத்தின் ஒரு பக்கத்தில் பெரிய கம்பிகள் வைக்கப்பட்டன.[7] தலைநில சீனாவில் இருந்து வந்த 4 சுற்றுலா பயணிகளைச் சேர்ந்து, 277 பேர் படுகாயமடைந்தனர் எனவும் 12 பேர் உயிரிழந்தனர் எனவும் அதிகாரிகள் அறிவித்தனர்.[8] நிலநடுக்கத்தால் ஏற்படுத்தப்பட்ட சேதத்தினால், பல பாலங்களும் நெடுஞ்சாலைகளும் மூடப்பட்டன, மற்றும் நீரின்றி பல இல்லங்கள் கிடந்தன.[5]

சேதமடைந்த கட்டிடங்களில் சிக்கியுள்ளவர்களை காப்பாற்ற நூற்றுக்கணக்கான தீயணைப்புத்துறையினரும் இராணுவ வீரர்களும் அழிவின் அருகில் இருந்தனர். [9]

மேலும் காணவும்[தொகு]

  • List of earthquakes in 2018
  • List of earthquakes in Taiwan

மேற்கோள்கள்[தொகு]

இதர இணைப்புகள்[தொகு]