2016 கோடை ஒலிம்பிக் ஏலங்கள்
தொடரின் அங்கம் |
2016 கோடை ஒலிம்பிக் மற்றும் மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் ஏலங்களில் ஏழு நாடுகள் பன்னாட்டு ஒலிம்பிக் குழுவிடம் செப்டம்பர் 13, 2007இல் கேட்பு விண்ணப்பம் அளித்தன.[1] இவற்றில் அசர்பைசானின் பக்கூ , கத்தாரின் தோகா, செக் குடியரசின் பிராகா நகரங்களின் விண்ணப்பங்கள் சூன் 2008இல் நிராகரிக்கப்பட்டன. இவை மூன்றுமே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் அவர்களின் முதல் ஒலிம்பிக்காக இருந்திருக்கும். அசர்பைசானின் மனு போதிய கட்டமைப்புக்கள் இல்லாததாலும் [2] மற்றும் 2014ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடந்த சோச்சிக்கு அண்மையில் இருந்ததாலும் நிராகரிக்கப்பட்டது. கத்தாரின் கேட்பு பாரசீக வளைகுடாவில் கோடையில் நிலவும் மிக உயரிய வெப்பநிலை காரணமாக நிராகரிக்கப்பட்டது. பிராகாவின் கேட்பும் மீண்டும் ஈரோப்பாவில் நடத்தும் வாய்ப்பின்மையால் நிராகரிக்கப்பட்டது.
சூன் 4, 2008இல் நான்கு நகரங்களின் கேட்பு விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது: சிகாகோ, மத்ரித், இரியோ டி செனீரோ, தோக்கியோ. கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரத்தில் நடந்த பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் அமர்வில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.[3][4]
இந்த நான்கு நகரங்களின் நாட்டுத் தலைவர்களின் முன்னிலையில் அக்டோபர் 2, 2009இல் கோபனாவன், டென்மார்க்கில் நடந்த ப.ஒ.குழுவின் 121வது அமர்வு நடைபெற்றது.[5] பெல்லா மையத்தில் ஒன்றன் பின் ஒன்றாக, சிகாகோ, தோக்கியோ, இரியோ, மத்ரிது தங்கள் அளிக்கைகளை வழங்கினர். இந்த அமர்வில் எசுப்பானியாவின் அரசர், ஓப்ரா வின்ஃப்ரே, பெலே போன்ற பல புகழாளர்களும் இருந்தனர்.[6][7] பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் மதிப்பீட்டுக் குழுவும் தனது அறிக்கையை வழங்கியது.[6] மூன்று சுற்று வாக்கெடுப்பிற்குப் பின்னர் முதலில் சிகாகோவும் பின்னர் தோக்கியோவும் தங்கள் வாய்ப்பை இழந்தன.[8][9]
இறுதிச் சுற்றில் இரியோ டி செனீரோ 66 வாக்குகளும் மத்ரித் 32 வாக்குகளும் பெற 2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளையும் மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக்கையும் நடத்தும் உரிமையை இரியோ பெற்றது.[10][11] போர்த்துக்கேய மொழி பேசும் நாடுகளில் பிரேசில் முதலாவது நாடாகவும் இரியோ டி செனீரோ தென் அமெரிக்காவில் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களை நடத்தும் முதல் நகரமாகவும் இருக்கும்.[12] இந்த ஏல செயல்பாட்டின் போது உளவு, இனப்பாகுபாடு, எதிர்த்தரப்பு தடங்கல்களைக் குறித்த சர்ச்சைகளும் நிகழ்ந்துள்ளன.[13]
வெற்றி வாய்ப்பை இழந்த ஆறு நகரங்களில் நான்கு மீண்டும் 2020 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்த விண்ணப்பித்தன. பக்கூ, தோகா, மத்ரித் மற்றும் தோக்கியோ தேர்ந்தெடுக்கப்பட்டன. மத்ரிதும் தோக்கியோவும் அடுத்த நிலைக்கு முன்னேற இறுதியில் தோக்கியோ தேர்ந்தெடுக்கப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Seven Applicant NOCs/Cities for the 2016 Games". International Olympic Committee. September 14, 2007. பார்க்கப்பட்ட நாள் March 2, 2010.
- ↑ gamesbids.com
- ↑ "Four cities to compete to host the 2016 Olympic Games". International Olympic Committee. June 4, 2008. பார்க்கப்பட்ட நாள் March 2, 2010.
- ↑ "Four on 2016 Olympics short list". BBC. June 4, 2008. http://news.bbc.co.uk/sport2/hi/olympics/7435215.stm. பார்த்த நாள்: March 2, 2010.
- ↑ "Rio to stage 2016 Olympic Games". BBC. October 2, 2009. http://news.bbc.co.uk/sport2/hi/olympic_games/8282518.stm. பார்த்த நாள்: March 2, 2010.
- ↑ 6.0 6.1 "The 2016 Bid Process Explained". International Olympic Committee. October 2, 2009. பார்க்கப்பட்ட நாள் March 2, 2010.
- ↑ "Obama 2016 In Copenhagen - What Bid?". GamesBids. October 1, 2009. Archived from the original on அக்டோபர் 4, 2009. பார்க்கப்பட்ட நாள் March 2, 2010.
- ↑ "The Olympic Bid Vote – Ballot By Ballot Results". GamesBids. October 2, 2009. Archived from the original on March 18, 2013. பார்க்கப்பட்ட நாள் March 2, 2010.
- ↑ "Olympic Host City Selection Voting Procedures". GamesBids. October 1, 2009. Archived from the original on March 18, 2013. பார்க்கப்பட்ட நாள் March 2, 2010.
- ↑ "Rio de Janeiro Elected As 2016 Host City". International Olympic Committee. October 2, 2009. பார்க்கப்பட்ட நாள் March 2, 2010.
- ↑ "Olympics affirms Brazil's rise, Lula's legacy". Reuters. October 2, 2009 இம் மூலத்தில் இருந்து January 15, 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100115201153/http://www.reuters.com/article/idUSTRE5914MO20091002. பார்த்த நாள்: March 2, 2010.
- ↑ Macur, Juliet (October 2, 2009). "Rio Wins 2016 Olympics in a First for South America". The New York Times. http://www.nytimes.com/2009/10/03/sports/03olympics.html?pagewanted=all. பார்த்த நாள்: March 2, 2010.
- ↑ "2016 Olympic Bid Timeline – How We Got Here". GamesBids. October 1, 2009. Archived from the original on March 20, 2012. பார்க்கப்பட்ட நாள் March 2, 2010.
வெளி இணைப்புகள்
[தொகு]
- Candidature Acceptance Procedure (PDF). (IOC). May 16, 2007.
- Application File for Rio de Janeiro. (BOC). January 14, 2008.
- Application File for Madrid. (SOC). January 14, 2008.
- Application File for Tokyo. (JOC). January 14, 2008.
- Application File for Chicago. (USOC). January 14, 2008.
- Application File for Doha. (QOC). January 14, 2008.
- Application File for Prague. (COC). January 14, 2008.
- Application File for Baku. (AOC). January 14, 2008.
- Working Group Report (PDF). (IOC). March 14, 2008.
- Candidature Procedure and Questionnaire (PDF). (IOC). June 4, 2008.
- Candidature File for Rio de Janeiro. (BOC). February 12, 2009.
- Candidature File for Chicago. (USOC). February 12, 2009.
- Candidature File for Madrid. February 12, 2009.
- Candidature File for Tokyo. February 12, 2009.
- Report of the Evaluation Commission (PDF). (IOC). September 2, 2009.