2016 கோடைக்கால ஒலிம்பிக் துவக்க விழா
Appearance
நாள் | ஆகத்து 5, 2016 |
---|---|
நேரம் | 20:00 பிநேவ (23:00 ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்) |
நிகழிடம் | மரக்கானா விளையாட்டரங்கம், இரியோ டி செனீரோ, பிரேசில் |
Coordinates | 22°54′43.80″S 43°13′48.59″W / 22.9121667°S 43.2301639°W |
தொடரின் அங்கம் |
2016 கோடை ஒலிம்பிக் விளையாட்டுக்களின் துவக்க விழா கொண்டாட்டங்கள் இரியோ டி செனீரோவின் மரக்கானா விளையாட்டரங்கத்தில் ஆகத்து 5, 2016 அன்று வெள்ளிக்கிழமை இரவு 20:00க்கு பி.நே.வ (23:00 ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்) துவங்கின.[1] ஒலிம்பிக் பட்டயத்தில் வரையறுத்துள்ளபடி இப்பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளின் முறைசார்ந்த துவக்கவிழா நிகழ்வுகளில் வரவேற்புரைகள், கொடியேற்றங்கள், பன்னாட்டு விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு, ஒலிம்பிக் சுடர் ஏற்றுதல், விளையாட்டாளர், நடுவர், அலுவலர் உறுதிமொழிகள் ஆகியன இடம்பெற்றன. இவற்றுடன் போட்டி நடத்தும் நாட்டின் பண்பாட்டிற்கேற்ப கலைநிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ "Tickets". 31 March 2015. Archived from the original on 14 September 2015. பார்க்கப்பட்ட நாள் 14 June 2015.