வினிசியசும் டாமும்


![]() |
தொடரின் அங்கம் |
பிரேசிலின் இரியோ டி செனீரோவில் நடைபெறும் 2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் 2016 கோடைக்கால மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்கு வினிசியசும் டாமும் (Vinicius and Tom) முறையே நற்பேறுச் சின்னங்களாகும்.
வரலாறு[தொகு]
2016 கோடை ஒலிம்பிக் மற்றும் மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக்கிற்கு நற்பேறுச் சின்னங்களை உருவாக்க தேசிய ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டன; இதில் சாவோ பாவுலோ சேர்ந்த அசைபட நிறுவனம், பேர்டோ, தேர்ந்தெடுக்கப்பட்டது.[1] இவர்கள் வடிவமைத்த சின்னங்கள் நவம்பர் 23, 2014இல் வெளிப்படுத்தப்பட்டன; இவற்றின் பெயரைத் தேர்ந்தெடுக்க பொதுமக்கள் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. திசம்பர் 14, 2014இல் "வினிசியசும் டாமும்", "ஓபாவும் ஈபாவும்" , "டிபா டுக்கும் எசுகுயின்டிமும்" என்ற பெயர்களில் வினிசியசும் டாமும் பெயருக்கு 323,327 வாக்குகள் (44%) கிடைத்தன. பிரேசில் நாட்டுப் புனைவுக் கதைகளில், வினிசியசும் டாமும் "பிரேசிலியர்களின் மகிழ்ச்சியிலிருந்து உருவானவர்கள்" ஆகும்.[2] வணிக மனப்படிம இயக்குநர் பெத் லூலா இந்த சின்னங்கள் பிரேசிலியப் பண்பாடு மற்றும் மக்களின் பன்மயமையைக் காட்டுவனவாக உள்ளதாக் கூறியுள்ளார்.[3][4]
பிரேசிலிய பாடலாசிரியர் வினிசியசு டி மோராசு நினைவுறுத்தி கோடை ஒலிம்பிக்கின் சின்னம், வினிசியசு என்ற பெயரிடப்பட்டுள்ளது. வினிசியசின் வடிவம் பிரேசிலிய காட்டுயிரை எதிரொளிக்கின்றது; "பூனைகளின் விரைவியக்கம், குரங்குகளின் அசைவாட்டம், பறவைகளின் நளினத்தை" இணைக்கின்றது.[5] இந்த கதாபாத்திரத்தின் கைகளையும் கால்களையும் எவ்வளவு தொலைவு வேண்டுமானாலும் நீட்டலாம்.[5] இசைக்கலைஞர் டாம் ஜோபிம் நினைவுறுத்தி மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக்கின் சின்னம், டாம் பெயரிடப்பட்டுள்ளது. டாமின் வடிவமைப்பு பிரேசிலியக் காடுகளில் உள்ளத் தாவரங்களை 'எதிரொளிக்கின்றது; டாமின் தலையிலுள்ள இலைகளிலிருந்து எந்தப் பொருளையும் வெளியிழுக்கலாம்.[3]
இவர்களைக் கொண்டு கேலிச்சித்திரத் திரைப்படம் ஆகத்து 5, 2015 அன்று கார்ட்டூன் நெட்வொர்க் தொலைக்காட்சி அலைவரிசையில் வெளியானது.[6]
மேற்சான்றுகள்[தொகு]
- ↑ "Meet the Rio 2016 Olympic and Paralympic Games mascots and help choose their names". Rio 2016. 2016-10-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-05-25 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Quarrell, Dan (22 July 2016). "2016 Rio Olympics: Biggest stars, dates, schedule, mascots, logo, Usain Bolt 'triple triple', Zika". Eurosport. 25 July 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 3.0 3.1 "Rio 2016: Olympic and Paralympic mascots launched". bbc.com. 18 December 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Rio 2016 mascots inspired by animals and plants of Brazil". Reuters. 15 December 2014. http://www.reuters.com/article/2014/11/24/us-olympics-brazil-mascotidUSKCN0J802V20141124?feedType=RSSfeedName=sportsNews. பார்த்த நாள்: 18 December 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 5.0 5.1 "Meet the Rio 2016 Olympic and Paralympic Games mascots and help choose their names". Rio 2016. 23 November 2014. 10 அக்டோபர் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 25 July 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Rio 2016 mascots to become characters in new Cartoon Network series in Brazil". Rio 2016. 21 June 2015. 21 செப்டம்பர் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 25 July 2016 அன்று பார்க்கப்பட்டது.