உள்ளடக்கத்துக்குச் செல்

பெல்லா மையம்

ஆள்கூறுகள்: 55°38′15″N 12°34′42″E / 55.63750°N 12.57833°E / 55.63750; 12.57833
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெல்லா மையம்

வடமேற்கு பகுதியிலிருந்து பெல்லா மையம் காட்சி
முகவரி மத்திய பொலேவார்ட் 5, DK-2300 கோபனாவன்
திறக்கப்பட்டது 1965
இடம்ஒரேஸ்டாட், கோபனாவன்
விரிவாக்கம்1973-75, 2000, 2009-2011
சுற்று பரப்பு
 மொத்த கொள்ளளவு121.800 m²
இணையதளம்அலுவல்முறை இணையதளம்

பெல்லா மையம் (Bella Center,abbreviated BC) டென்மார்க்கின் கோபனாவன் நகரில் அமைந்துள்ள ஸ்காண்டிநேவியாவின் மிகப்பெரும் கண்காட்சி மற்றும் கூட்டரங்கு மையமாகும்.கோபனாவன் விமானநிலையத்திற்கும் நகரமையத்திற்கும் இடையே ஒரேஸ்டாட் என்னுமிடத்தில் 20,000 நபர்கள் பங்கேற்கக்கூடிய அளவில் 121.800 சதுரமீட்டர் உள்ளரங்க பரப்பு கொண்டுள்ளது.

இங்கு நடைபெறும் வழமையான நிகழ்வுகளில் கோபனாவன் பன்னாட்டு அலங்கார கண்காட்சி மற்றும் கோபனாவன் வடிவ நிகழ்வு (CODE)அடங்கும்.

வசதிகள்

[தொகு]

பெல்லா மையத்தில் உள்ள வசதிகளில் சில:

  • மாநாடு அரங்கம், மூன்று பிரிவுகளாக தடுக்கப்படக்கூடியது(4,200 நபர்கள)
  • 4 மேடையரங்கங்கள், 310-930 நபர்கள் பங்கேற்க வல்லது
  • 63 மாற்றக்கூடிய கூட்ட அறைகள் (2 முதல்-400 நபர் வரை)
  • விருந்துகள்,வரவேற்புகள்,நடன விழாக்கள் நடத்தக்கூடிய மைய அரங்கம்.
  • மாநாடு மற்றும் கண்காட்சிகளுக்கு பயன்படக்கூடிய பல்வேறு அரங்கங்கள்
  • அஞ்சலகம், பலசரக்கு மற்றும் மலர்செண்டு கடைகள் கொண்ட சந்தையிடம்

பெல்லா விடுதி

[தொகு]

814-அறைகள் கொண்ட பெல்லா விடுதி கட்டப்பட்டு வருகிறது.நான்கு நட்சத்திர மதிப்பு பெறும் இவ்விடுதியில் 100 சிறப்பறைகள் உட்பட 814 அறைகளும் 32 கூட்ட அறைகளும்,3 உணவகங்களும்,ஒர் மதுவகமும் உடல்நல மையமும் அமைந்திருக்கும்.முதற்கட்ட வேலை 2011 இளவேனில் காலத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Leaning towers of Copenhagen". World Architecture News. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=பெல்லா_மையம்&oldid=1466180" இலிருந்து மீள்விக்கப்பட்டது