பிரேசிலிய ஒலிம்பிக் குழு
![]() பிரேசிலிய ஒலிம்பிக் குழு Comitê Olímpico do Brasil - அடையாளச்சின்னம் | |
நாடு/பகுதி | ![]() |
---|---|
குறியீடு | BRA |
உருவாக்கப்பட்டது | சூன் 8, 1914 |
ஏற்பளிக்கப்பட்டது | சூன் 8, 1935 |
கண்டக் கழகம் | பான் அமெரிக்க விளையாட்டு அமைப்பு |
தலைமையகம் | இரியோ டி செனீரோ |
தலைவர் | கார்லோசு ஆர்த்தர் நுசுமான் |
பொதுச் செயலாளர் | கார்லோசு இராபர்ட்டோ ஓசோரியோ |
இணையத்தளம் | http://www.cob.org.br/ |
![]() |
தொடரின் அங்கம் |
பிரேசிலிய ஒலிம்பிக் குழு (Brazilian Olympic Committee), (போர்த்துக்கேய மொழி: Comitê Olímpico do Brasil – COB) பிரேசிலிய விளையாட்டுத் துறையில் மிக உயரிய அமைப்பாகும்; இது ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பிரேசிலின் பங்கேற்பை கட்டுப்படுத்துகின்றது. சூன் 8, 1914இல் நிறுவப்பட்டபோதும் இதன் அலுவல்முறையான செயற்பாடுகள் முதல் உலகப் போரால் தடைபட்டு 1935ஆம் ஆண்டுகளிலிருந்து செயல்படுகின்றது. துவக்கத்தில் இது பிரேசிலின் படகுவலிப்பு சங்கங்களின் கூட்டமைப்புத் தலைமையிடத்திலிருந்து செயல்பட்டது.
பி.ஒ.குழு பலவகைகளில் வருமானம் ஈட்டுகின்றது; முதன்மையான வருமானமாக பிரேசிலிய தேசிய குலுக்கல் பரிசுச் சீட்டு இலாபத்தில் 2% இதற்கு வழங்கப்படுகின்றது. இதன் தற்போதைய தலைவராக கார்லோசு ஆர்த்தர் நுசுமான் உள்ளார். இதன் முதன்மைத் திட்டமாக இரியோ டி செனீரோவில் நடக்கவிருக்கும் 2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் உள்ளன.[1]
மேற்சான்றுகள்[தொகு]
- ↑ "About Rio 2016 Summer Olympics". Rio 2016 Olympics Wiki. http://rio2016olympicswiki.com/about-rio-2016-summer-olympics/. பார்த்த நாள்: 31 October 2015.
வெளி இணைப்புகள்[தொகு]
- Official website (in Portuguese)
- Website for the 2004 Summer Olympic Games (in Portuguese)