உள்ளடக்கத்துக்குச் செல்

2016 கோடைக்கால ஒலிம்பிக்கில் தீச்சுடர் தொடரோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரேசிலியத் தலைவர் டில்மா ரூசெஃப் ஒலிம்பிக் தீச்சுடரை பற்றியிருத்தல்; உடன் பிரேசிலிய ஒலிம்பிக் குழுத் தலைவர் கார்லோசு ஆர்த்தர் நுசுமானும் (இடது) இரியோ டி செனீரோவின் மேயர் உட்வர்டோ பெயசும் (வலது) உள்ளனர்.

2016 கோடைக்கால ஒலிம்பிக்கில் தீச்சுடர் தொடரோட்டம் (2016 Summer Olympics torch relay) 2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்பாக ஏப்ரல் 21, 2016 முதல் ஆகத்து 5, 2016 வரை நடைபெறும். கிரேக்கத்தின் ஒலிம்பியாவில் ஏற்றப்படும் தீச்சுடர் ஏதென்சிற்கு ஏப்ரல் 27 அன்று வந்தது. பிரேசில் நாட்டில் தலைநகர் பிரசிலியாவில் துவங்கி 300 பிரேசிலிய நகரங்கள், 26 மாநில மற்றும் கூட்டரசு மாவட்ட தலைநகரங்கள் வழியே இரியோ டி செனீரோவிலுள்ள மரக்கானா விளையாட்டரங்கத்தில் முடிவுறும்.[1]

தொடரோட்ட வழியும் நிரலும்

கிரீசு

  • ஏப்ரல் 21 - ஒலிம்பியாவில் ஒலிம்பிக்கின் பிறப்பிடத்தில் தீச்சுடர் ஏற்றப்படுதல், 4 ஊர்கள் வழியாகப் புறப்பாடு
  • ஏப்ரல் 22 -ஏப்ரல் 26 : கிரீசின் பல்வேறு நகரங்களுக்குச் சென்று ஏதென்சு அடைதல்
  • ஏப்ரல் 27,28 - ஏதென்சு

சுவிட்சர்லாந்து

பிரேசில்

  • மே 3 - பிரசிலியா
  • மே 4 முதல் சூலை 27 வரை பிரேசில் நாட்டின் பல்வேறு ஊர்களுக்கும் மாநிலத் தலைநகரங்களுக்கும் செல்லுதல்

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்