1940 பசிபிக் சூறாவளிப்பருவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1940 பசிபிக் சூறாவளிப்பருவம்
முதலாவது புயல் தோன்றியது பிப்ரவரி 1, 1940
கடைசி புயல் அழிந்தது டிசம்பர் 24, 1940
பலம் வாய்ந்த புயல் ஜூலை சூறாவளி – 927 hPa (mbar),
Tropical depressions 43
Typhoons 27
இறந்தோர் தொகை 183
மொத்த அழிவு Unknown
Pacific typhoon seasons
1938, 1939, 1940, 1941, 1942

1940 பசிபிக் சூறாவளிப்பருவம் (1940 Pacific typhoon season) இரண்டாம் உலகப்போர் தொடங்கிய காலத்தில் ஹொங்கொங் மற்றும் பிலிப்பீன்சு ஆகிய இடங்களில் அடுத்தடுத்து வீசிப் பேரிடரை ஏற்படுத்திய சூறாவளி குறித்து வளிமண்டலவியல் பதிவுகளில் பதியப்பட்ட ஒரு நிகழ்வு ஆகும். பசிபிக் பெருங்கடலில் 43 முறை உருவான வெப்பமண்டலக் காற்றழுத்த தாழ்வு நிலைகளில் 27 சூறாவளிகள் உயர்நிலைகளை எட்டின. முதன்முதலில் ஏற்பட்ட புயல் பிப்ரவரி மாதம் அவதானிக்கப்பட்டது. அதன் பின் இரு மாதங்கள் கழித்து முதல் சூறாவளி உருவானது. இதில் மிண்டனாவோவில் மட்டும் மூவர் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் ஜூன், ஜூலை மாதங்களில் பலமுறை தொடர் புயல்கள் உருவாயின. இவ்வாறு உருவான புயல் மற்றும் சூறாவளியில் தென் கொரியாவில் 52 பேர் பலியானதாகவும், சமர் பகுதியில் ஏற்பட்ட கடும்மழை காரணமாக ஒருவர் கொல்லப்பட்டதாகவும் அறிக்கைகள் தெரிவித்துள்ளன. இப்பருவத்தில் வீசிய சூறாவளிகளுள் ஜூலை மாதம் மிகக் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை 927 mbar (27.4 inHg) காரணமாக வீசிய சூறாவளியே மிகவும் கடுமையானது என பிலிப்பீன்சின் வடகிழக்கில் இருந்த ஒரு கப்பல் மூலம் கிடைத்த அறிக்கையில் கூறப்பட்டது.

ஆகஸ்ட் மாதம் பதினெட்டாம் நாள் சூறாவளியானது வடகிழக்கு லூசானை நோக்கி நகர்ந்தது. இதில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் இது போனின் தீவுகளை நோக்கி நகர்ந்து பின்னர் ஜப்பானின் கியுசூ தீவுகளை நோக்கி நகர்ந்தது. இதனால் ஏற்பட்ட கடும் மழை காரணமாக ஜப்பானின் ஒரு பகுதியான ஓயிட்டா பெர்பெக்ச்சர் பகுதியில் நீர் சூழ்ந்ததால் 50 பேர் உயிரிழந்தனர். செப்டம்பர் 18 அன்று ஏற்பட்ட சூறாவளியின் காரணமாக எதிர்வரும் வண்டிகளைப் பார்க்க முடியாததால் ஏற்பட்ட ஒரு டிராம் வண்டி விபத்தில் டோக்கியோவில் 20 பேர் உயிரிழந்தனர், மற்றுமொரு சூறாவளி செப்டம்பர் 29 இல் தைவானில் நிலைகொண்டதால் 50 பேர்கள் இறந்தனர். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட சூறாவளிக் கண்காணித்தல் பணிகளில் முதன் முறையாக அக்டோபர் 19 இல் வேக் தீவுகளில் ஒரு வலுவான சூறாவளிக்காற்று பதிவு செய்யப்பட்டது. நவம்பர் 3 இல் குவாம் தீவுக்கு அருகில் மணிக்கு 200 கி. மீ வேகத்தில் பலத்த காற்றுடன் சூறாவளி வீசியது இதில் ஐவர் உயிரிழந்தனர். அத்தீவின் கட்டிடங்கள் சேதமடைந்தன. டிசம்பர் மாதத்தில் வீசிய மூன்று புயல்களால் பிலிப்பீன்சு பாதிக்கப்பட்டது. இதில் இரண்டாவதாக வீசிய புயல் காரணமாக கேட்டன்டுனிசு பகுதியில் 63 பேர்கள் உயிரிழந்தனர் 75,000 பேர்கள் உடைமைகளையும் வீடுகளையும் இழந்தனர். டிசம்பர் 24 இல் வீசிய மூன்றாவது புயலுக்குப் பின் அதன் அழிவுகள் ஓரளவு முடிவுக்கு வந்தன. இந்த டிசம்பர் புயலில் குவாம் தீவுக்கு அருகில் ஒரு கப்பலில் இருவர் கொல்லப்பட்டனர்.

புயல்கள்[தொகு]

பெரும்பாலான புயல்களைப் பற்றிய தரவுகள் TD-9636 என்றறியப்படும் உலகளாவிய வெப்பமண்டலப் புயல் தரவுகளிலிருந்து பெறப்படுகின்றன. இத்தரவின் பல்வேறு சான்றுகளைப் பயன்படுத்தியே எங்கு புயல்கள் உருவாகும் அறிகுறிகள் தென்படுகின்றன எனவும், அவற்றின் இரட்டிப்பு விளைவுகள் ஆகிய தரவுகளும் கணக்கிடப்படுகின்றன.[1]

இச்சூறாவளிப் பருவத்தின் போது பிலிப்பீன்சு வானிலை நிறுவனம் மாதாந்திர வானிலை செய்தி அறிக்கையை வெளியிட்டது. பின்னர் அது வெப்பமண்டலப் புயல் தடங்களைப் பற்றிய தகவல்களை வழங்கியது. இதற்காக ஸ்பெயின் மற்றும் ஐக்கிய அமெரிக்கா நாடுகளின் கட்டுப்பாட்டில் இருந்த தீவுக்கூட்டங்களில் வானிலை நிலையங்களை இந்நிறுவனம் நிறுவியது. பின்னர் 1940, ஆகஸ்ட் மாதம் இந்நிறுவனம் தடை செய்யப்பட்டு மீண்டும் 1945 மறுநிர்மானம் பெற்றது. [2] மேலும், 1940 களில் இரண்டாம் உலகப் போரின் போது ஹொங்கொங்கில் வெளியிடப்பட்ட சிதிலமடைந்த வளிமண்டலப் பதிவுகள் 1947 இல் மீண்டும் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டன.[3] [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Warren L. Hatch (December 1988). Selective Guide to Climatic Data Sources (PDF) (Report). National Oceanic and Atmospheric Administration. p. I-37. பார்க்கப்பட்ட நாள் 2014-05-23.
  2. Hisayuki Kubota1; Johnny C. L. Chan (June 2009). "Interdecadal variability of tropical cyclone landfall in the Philippines from 1902 to 2005" (PDF). Geophysical Research Letters 36 (12). doi:10.1029/2009GL038108. Bibcode: 2009GeoRL..3612802K. http://onlinelibrary.wiley.com/doi/10.1029/2009GL038108/pdf. பார்த்த நாள்: 2014-05-23. 
  3. "Introduction". Meteorological Results, 1985 (PDF) (Report). Hong Kong Observatory. p. 7. Archived from the original (PDF) on 2013-09-30. பார்க்கப்பட்ட நாள் 2014-05-23.
  4. "Observed Climate Change in Hong Kong". Hong Kong Observatory. 2003. Archived from the original on 2014-06-06. பார்க்கப்பட்ட நாள் 2014-05-23.