எகல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஹேகெல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மேற்கத்திய மெய்யியல்
19 ஆவது நூற்றாண்டு மேற்குலக மெய்யியல்
Hegel portrait by Schlesinger 1831.jpg
கியார்க் எகல்

பெயர்

கியார்க் வில்ஃகெம் பிரீடரிக் எகல்

பிறப்பு

ஆகத்து 27, 1770 (இசுடுட்கார்ட், இடாய்ச்சுலாந்து)

இறப்பு

நவம்பர் 14, 1831(1831-11-14) (அகவை 61) (பெர்லின், இடாய்ச்சுலாந்து)

கருத்துப் பரம்பரை

இடாய்ச்சுலாந்திய கருத்தியம்; எகலியத்தின் நிறுவுனர்

முதன்மைக் கருத்துக்கள்

ஏரணம், வரலாற்றின் மெய்யியல், கலைநயம், சமயம், மீவியற்பியல், Epistemology, அரசியல் அறிவியல்,

குறிப்பிடத்தக்க கருத்துக்கள்

முழுமுதல் கருத்தியம்(Absolute idealism), டயலெக்டிக், அடியெழுச்சி(Sublation)

ஏற்ற தாக்கங்கள்

அரிசிட்டாட்டில், இராக்ளிட்டசு, அன்செல்ம், ரெனே டேக்கார்ட், யோஃகான் வுல்ஃவ்கங் ஃவான் கோத்தே, மாரூஃக் ஸ்பினோசா, ழான் ழாக் ரூசோ, யாக்கோப் பியோமெ, இம்மானுவேல் கண்ட், யோஃகான் ஃவிஃக்டெ, பிரீடரிக் ஃகோல்டெர்லின், செல்லிங்

ஊட்டிய
தாக்கங்கள்

ஃவூயெர்பாக், குரோசே, கார்ல் மார்க்ஸ், பிரெட்ரிக் எங்கெல்சு, பௌவெர், பிராட்லி, லெனின், லூக்காஃசு, ஐடெகர், சாத்ரே, பார்த், குங், ஃகாபர்மாசு, காடமர், மோல்ட்மன், கீர்க்கெகார்டு, சென்ட்டீல், மக்சு இசுரேனர், டெய்லர், அலெக்ஃச்சாந்திரெ கோய்ரெ, Kojève, லக்கான், டிலோசு, சிழ்செக், ஃபூக்குயாமா

கையொப்பம்

Hegel Unterschrift.svg

ஜோர்ஜ் வில்ஃகெம் பிரீட்ரிக் எகல் (Georg Wilhelm Friedrich Hegel, கியார்க் வில்ஹெம் ஃபிரீடரிக் ஹெகல், [ˈgeɔʁk ˈvɪlhɛlm ˈfʁiːdʁɪç ˈhegəl], ஆகத்து 27, 1770நவம்பர் 14, 1831) என்பவர் ஒரு புகழ்மிக்க இடாய்ச்சு நாட்டு (செருமனிய) மெய்யியல் அறிஞர் ஆவார்.

இவருடைய கொள்கைகள் இடாய்ச்சுலாந்து மெய்யியல் கருத்துக்களிலும் மேற்குலகின் மெய்யியியல் கருத்துக்களிலும் பெரும் செல்வாக்குப் பெற்று, இன்றும் மிக்க புகழுடன் விளங்குவன. இவருடைய கருத்துப்படி மாந்தர்களுடைய எண்ணம், கருத்து, பண்பாடு ஆகிய எந்தவொரு தன்மையையும் அறிந்து கொள்ள, கருத்துக்கள் எழுந்த வரலாற்றைத் துல்லியமாய் அறிதல் வேண்டும். இவருடைய செல்வாக்கினால், மேற்குலகில் மெய்யியல், கலை, சமயம் (மதம்), அறிவியல், அரசியல் முதலான பல துறைகளிலும் வரலாற்றுக் கண்ணோட்டம் மிகுந்தது. எகல், கருத்துக்கள் வரன் முறையில் அதிக நாட்டம் காட்டினார். இதன் அடிப்படையில் கருத்துக்கள் (நிகழ்வுகளும்) படிப்படியாய் எழுவதையும் அது “வளர்ச்சி” அடைவதையும், எதிர்-எதிர் கருத்துக்கள் எழுந்து (மோதி) விரிவான வளர்ச்சி அடைவதையும் சுட்டிக்காட்டினார். இவ்வகை விரிவான கருத்து மோதலினால் ஏற்படும் வளர்ச்சியை டயலெக்டிக் (dialectic) என்று மேற்குலகில் குறிக்கின்றனர்.

வாழ்க்கை[தொகு]

பிறப்பு[தொகு]

எகல் 1770 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி தென்மேற்கு ஜேர்மனியின் வூட்டம்பேர்க்கில் உள்ள டியூச்சே என்ற இடத்திலுள்ள ஸ்டட்கார்ட் என்னும் இடத்தில் பிறந்தார். இவர் ஏதென்ஸ் புரட்சிக் காலத்தில் ஆஸ்திரேலியாவிலிருந்து வூட்டம்பேர்க் வந்த புரட்டஸ்தாந்து அகதிக் குடும்பத்தைச் சேர்ந்தவராவார். எகலின் நெருங்கிய உறவினர்கள் அவரை வில்ஹெம் என்றே அழைத்தனர். இவரது தந்தை ஜோர்ஜ் லூட்விக் ஒரு வரி அறவீட்டாளராக ஒரு சிறு தொழிலில் இருந்தார். இவரது தாயாரான மரியா மக்தலேனா லூயிசா, வூட்டம்பேர்க்கின் உயர் நீதிமன்றத்தின் சட்டத்தரணி ஒருவரின் மகளாவார். எகலின் 13ஆவது வயதில் அவரது தாயார் பித்த நீரால் ஏற்பட்ட காய்ச்சலால் உயிரிழந்தார். எகலையும் அவரின் தந்தையையும் இந்த நோய் தாக்கிய போதும் அவர்கள் உயிர்பிழைத்துக்கொண்டனர். எகலிற்கு கிறிஸ்டியானா லூயிசி (1773–1832) என்ற ஒரு சகோதரியும் ஜோர்ஜ் லுட்விக் (1776–1812) என்ற ஒரு சகோதரனும் இருந்தனர்.

கல்வி[தொகு]

எகல் தனது 3 ஆவது வயதிலேயே ஒரு ஜேர்மனியப் பாடசாலைக்குச் சென்றார். அவர் இருவருடங்களின் பின்னர் இலத்தீன் பாடசாலைக்குச் செல்ல முன்பே அவரது தாயார் எகலுக்கு இலத்தீனியச் சொற்களைக் கற்பித்திருந்தார். எகல் தனது ஆரம்பக்கல்வியை ஸ்ட்யூகார்ட் கல்விக் கூடத்தில் பெற்றுக்கொண்டார். எகல் 1779 - 1800 காலப்பகுதியில் அவரது சொந்தக் கருத்துக்களை விருத்திசெய்துகொண்டார். இக்காலத்தில் இவர் இம்மானுவேல் கண்ட், பிஹ்டே ஆகியோரின் மெய்யியல்களைக் கற்றார். எகல் 1788 ஆம் ஆண்டு தனது 18 ஆவது வயதில் ட்யூபின்ஜென் பல்கலைக்கழகத்தின் இறையியல் நிறுவனத்தில் சேர்ந்தார். டியூபின்ஜென் பல்கலைக்கழகத்திற்கு வரும் பொழுது எகல் புத்தி நுட்பமும் ஊக்கமும் உள்ள மாணவனாக விளங்கினார். இலத்தீன், கிரேக்க மொழிகளில் அவருக்கு நல்ல தேர்ச்சி இருந்தது. அவரது அறிவியல் அறிவு குறிப்பிடத்தக்கதாக இருந்தது. எகல் 20 ஆவது வயதில் மெய்யியலில் முதுகலை கலைப் பட்டம் (M.A.) பெற்றார்.

ஐந்து வருடங்கள் அங்கு பயின்ற காலத்தில் கவி ஹோல்டெர்லினின் தொடர்பையும் ஷெல்லிங்கின் தொடர்பையும் பெற்றார். இதன் மூலம் இயற்கை பற்றிய மெய்யியல் (1797), அப்பாலைக் கருத்து முதல்வாத முறைமை (1800) ஆகிய ஷெல்லிங்கின் நூல்களைக் கற்றார். அக்காலகட்டத்தில் எல்லோருக்கும் ஏற்பட்டது போல ஸ்பினோஸாவின் பாதிப்பு அவரிலும் ஏற்பட்டது. பிஹ்டே ஒழுக்கத்தின் ஊடாகத் தனது முழுமுதல் கோட்பாட்டை அணுகினார். ஷெல்லிங் முழுமுதல் கோட்பாட்டை கலையின் ஊடாக அணுகினார். எகல் அதனை சமயத்தின் ஊடாக அணுகினார்.

படைப்புகள்[தொகு]

எகல் தம் வாழ்நாளில் நான்கு முக்கியமான நூல்களை வெளியிட்டுள்ளார். 1807ல் வெளியிட்ட உள்ளத்தின் நிகழ்வியக்கம் (Phenomenology of Spirit or Phenomenology of Mind) என்னும் நூலில் புலனறிவில் இருந்து எப்படி உள்ளுணர்வும், உள்ளறிவும் எழுகின்றது என்று விளக்குகின்றார். உள்ளுணர்வு நிலைகளில் உள்ள பல்வேறு வடிவங்களை/நிலைகளைப் பற்றி கூறுகின்றார். உலகநிகழ்வுகள் அறவொழுக்கக் கொள்கை நிலைகள் பற்றி விளக்குகிறார். 1811ல் மூன்று தொகுதிகளாக வெளியிட்ட ஏரணத்தின் அறிவியல் (Science of Logic) என்னும் நூலில் ஏரணம், புறவியல்பியல் மீறிய மெய்யியல் முதலிய கொள்கைகளை விரிக்கின்றார். பின்னர் 1811-1812 இலும், பின்னர் 1816லும் (திருந்திய பதிப்பாக 1831லும்) தன்னுடைய முழு மெய்யியல் கருத்துக்களையும் தொகுத்து மெய்யியல்களின் கலைக்களஞ்சியம் (Encyclopedia of the Philosophical Sciences) என்னும் நூலாக வெளியிட்டார். பின்னர் 1822ல் தன்னுடைய அரசியல் குமுகவியல் பற்றிய கருத்துக்களை செவ்வழியின் மெய்யியல் அடிப்படைக் கருத்துக்கள் (Elements of the Philosophy of Right) என்னும் நூலாக வெளியிட்டார்.

குறிப்பிடத்தக்க படைப்புக்கள்[தொகு]

எகலின் வாழ்க்கைக் காலத்தில் வெளியானவை[தொகு]

 • Life of Jesus
 • Differenz des Fichteschen und Schellingschen Systems der Philosophie, 1801
The Difference Between Fichte's and Schelling's Systems of Philosophy, tr. H. S. Harris and Walter Cerf, 1977
 • The German Constitution, 1802
 • Phänomenologie des Geistes, 1807
Phenomenology of Mind, tr. J. B. Baillie, 1910; 2nd ed. 1931
Hegel's Phenomenology of Spirit, tr. A. V. Miller, 1977
Phenomenology of Spirit, translated by Terry Pinkard, 2012
 • Wissenschaft der Logik, 1812, 1813, 1816
Science of Logic, tr. W. H. Johnston and L. G. Struthers, 2 vols., 1929; tr. A. V. Miller, 1969; tr. George di Giovanni, 2010
 • Enzyklopädie der philosophischen Wissenschaften, 1817; 2nd ed. 1827; 3rd ed. 1830 (Encyclopedia of the Philosophical Sciences)
(Pt. I:) The Logic of Hegel, tr. William Wallace (Scottish philosopher), 1874, 2nd ed. 1892; tr. T. F. Geraets, W. A. Suchting and H. S. Harris, 1991; tr. Klaus Brinkmann and Daniel O. Dahlstrom 2010
(Pt. II:) Hegel's Philosophy of Nature, tr. A. V. Miller, 1970
(Pt. III:) Hegel's Philosophy of Mind, tr. William Wallace, 1894; rev. by A. V. Miller, 1971
 • Grundlinien der Philosophie des Rechts, 1821
Elements of the Philosophy of Right, tr. T. M. Knox, 1942; tr. H. B. Nisbet, ed. Allen W. Wood, 1991

எகல் இறந்த பின்னர் வெளியானவை[தொகு]

 • Lectures on Aesthetics
 • Lectures on the Philosophy of History (also translated as Lectures on the Philosophy of World History) 1837
 • Lectures on the Philosophy of Religion
 • Lectures on the History of Philosophy

வெளி இணைப்புகள்[தொகு]

திண்ணையில் எகல் பற்றிய கட்டுரை

"https://ta.wikipedia.org/w/index.php?title=எகல்&oldid=2391645" இருந்து மீள்விக்கப்பட்டது