உள்ளடக்கத்துக்குச் செல்

இசுடுட்கார்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்டுட்கார்ட் நகரில் உள்ள காட்சி. இடப்புறம் புதிய கலை அருங்காட்சியகம். வலப்புறம் கோனிஸ்பௌ.
டாய்ட்ச் நாட்டில் ஸ்டுட்கார்ட் நகரம் அமைந்துள்ள இடம்
ஸ்டுட்கார்ட் நகரத்தின் படைச்சின்னம்

இசுடுட்கார்ட் அல்லது ஸ்சுட்கார்ட் (IPA[ˈʃtʊtgaʁt]) என்னும் நகரம் டாய்ட்ச் நாட்டின் (ஜெர்மன் நாட்டின்) தென் புறத்தில் உள்ள பாடன் - வியூர்ட்டம்பெர்க் என்னும் மாநிலத்தின் தலைநகராகும். இது டாய்ட்ச் நாட்டின் 6 ஆவது மிகப்பெரிய நகரம். இந் நகரத்தின் மக்கள் தொகை 595,452, ஆனால் புறநகரப் பகுதிகளையும் சேர்த்துக்கொண்டால் மக்கள் தொகை 2.67 மில்லியன் ஆகும் (2007க்கான கணக்கெடுக்குப்படி [1]).

வரலாறு

[தொகு]

ஸ்டுட்கார்ட் நகரம் ஏறத்தாழ கி.பி. 950 ஆண்டளவில் ஸ்வாபியா தற்கால தென் டாய்ட்ச் நாட்டுப்பகுதி) என்னும் பகுதியின் சிற்றரசராகிய லியூடோல்ஃவ் என்பவரால் நிறுவப்பட்டது. லியூடோல்ஃவ் ரோமானியப் பேரரசர் பெருமைமிகு ஆட்டோவின் மகன்களில் ஒருவர்.

கி.பி. 1300களில் ஸ்டுட்கார்ட் வியூர்ட்டம்பெர்க்கின் செல்வந்தப் பெருபுள்ளிகளின் வாழ்விடமாக இருந்தது. 1496 இல் இச் செல்வந்தர்கள் புனித ரோமானியப் பேரரசரால் சிற்றரசர்களாக மாற்றப்பட்டார்கள். இச் சிற்றரசர்கள், 1805 இல் அரசரானார்கள். இவ்வளர்ச்சியால் ஸ்டுட்கார்ட் அரசர் வாழ்விடமாக மாறியது.

தொழிற்சாலைகள்

[தொகு]

ஈருந்து (மோட்டர் பைக்) மற்றும் நான்கு ஆழி (சக்கர)த் தானுந்தும் இங்குக் கண்டுபிடித்து தோற்றம் பெற்றதாகப் பெருமை கொள்ளும் நகரம். ஸ்டுட்கார்ட்டில் வாழ்ந்த காட்லீப் டைம்லர் மற்றும் கார்ல் பென்ஸ் ஆகிய இருவரும் தானுந்து வரலாற்றின் முன்னோடிகள். 1887 இல் காட்லீப் டைம்லரும் வில்ஹெல்ம் மேபாஃகும் தொடங்கிய டைம்லர் மோட்டொரன் கெசல்ஷாஃவ்ட் இப்பகுதியை தொழில்மயப்படுத்தியது. எனவே உலக அளவிலும் தானுந்தின் தொட்டில் என்று இப்பகுதி சிலரால் புகழப்படுகின்றது. மெர்சிடிஸ்-பென்ஸ், போர்ஷ், மேபாஃக் ஆகிய தானுந்து வகைகள் ஸ்டுட்கார்ட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஃவோல்க்ஸ்வாகன் பீட்டில் (வண்டு வடிவத்) தானுந்தின் முதல் வடிவமும் இங்குதான் உருவாக்கப்பட்டு உற்பத்தி செய்யப்பட்டது.

ஸ்டுட்கார்ட் தற்பொழுது டாய்ட்ச் நாட்டின் மிக அதிக அடர்த்தியுள்ள அறிவியல், கல்வி, ஆய்வுக் கழகங்களும் நிறுவனங்களும் கொண்ட பகுதியாகும். டாய்ட்ச் நாட்டின் மொத்த ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கான செலவுகளில் 11% இப்பகுதியில் செலவிடப்படுகின்றது. இது ஏறத்தாழ 4.3 பில்லியன் யூரோ மதிப்புடையதாகும்.

பிரபலங்கள்

[தொகு]

மேலும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுடுட்கார்ட்&oldid=3461733" இலிருந்து மீள்விக்கப்பட்டது