ஹரிகிருஷ்ணா திவேதி
ஹரிகிருஷ்ணா திவேதி | |
---|---|
மேற்கு வங்காள அரசின் தலைமைச் செயலாளர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 1 ஜூன் 2021 | |
ஆளுநர் | ஜகதீப் தன்கர் |
முதலமைச்சர் | மம்தா பானர்ஜி |
முன்னையவர் | அலபன் பந்தோபாத்யாய் |
மேற்கு வங்காள அரசின் உள்துறைச் செயலாளர் | |
பதவியில் 1 அக்டோபர் 2020 – 31 மே 2021 | |
முன்னையவர் | அலபன் பந்தோபாத்யாய் |
பின்னவர் | பி பி கோபாலிகா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 20 சூன் 1963 கார்தோய், உத்தரப் பிரதேசம், இந்தியா |
தேசியம் | இந்தியா |
வாழிடம் | கொல்கத்தா |
ஹரி கிருஷ்ணா திவேதி (Hari Krishna Dwivedi) ஓர் இந்திய நிர்வாகி ஆவார். இவர் தற்போது 1 ஜூன் 2021 முதல் மேற்கு வங்காள அரசின் தலைமைச் செயலாளராக பணியாற்றி வருகிறார். இவர், அலபன் பந்தோயோபாத்யாவிற்குப் பிறகு இப்பதவிக்கு வந்தார்.[1]
ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்[தொகு]
திவேதி, 20 ஜூன் 1963 இல் உத்தரப் பிரதேசத்தில் பிறந்தார். வேதியியலில் முதுகலை அறிவியல் பட்டம் பெற்றார். ஜூலை 2021 இல், மேற்கு வங்காளத்தின் தலைமைச் செயலாளரான இவருக்கு, கொல்கத்தா பல்கலைக்கழகம் வளர்ச்சிப் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் வழங்கியது.[2] இலண்டன் பொருளியல் பள்ளியில் வளர்ச்சி பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். மேலும், புகழ்பெற்ற பத்திரிகைகளில் கட்டுரைகளை வெளியிட்டார்.
தொழில்[தொகு]
திவேதி, முதலில் சில காலம் இந்திய வெளியுறவுப் பணியில் பணிபுரிந்து வந்தார். பின்னர், இந்திய ஆட்சிப் பணிக்கு மாற்றப்பட்டார். இவர், முன்பு மேற்கு வங்க அரசாங்கத்தில் உள்துறை, மலை விவகாரங்களில் கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்தார்.[3][4] கூடுதலாக, மேற்கு வங்க அரசாங்கத்தில் நாடாளுமன்ற விவகாரங்கள், திட்டமிடல் மற்றும் புள்ளியியல் மற்றும் திட்ட கண்காணிப்பு துறைகளின் செயலாளராகவும் இருந்தார்.[5] இவர் முன்பு நிதி அமைச்சகத்தில் மாநிலத்தின் கூடுதல் தலைமைச் செயலாளராகவும் இருந்தார்.[1]
திவேதி, நீண்ட காலமாக வணிக வரி ஆணையராகவும், கலால் துறையின் பொறுப்பாளராகவும் இருந்தார். 2012 முதல் மேற்கு வங்க மின் மேம்பாட்டு கழகத்தின் உறுப்பினராக உள்ளார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
- ↑ "Calcutta University confers PhD in Development Economics to West Bengal Chief Secretary H K Dwivedi". edexlive.com. July 29, 2021. https://www.edexlive.com/news/2021/jul/29/calcutta-university-confers-phd-in-development-economics-to-west-bengal-chief-secretary-h-k-dwivedi-22883.html.
- ↑ Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
- ↑ Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
- ↑ www.ETGovernment.com. "New Bengal chief secretary H K Dwivedi assumes charge, top IAS officer B S Gopalika named new home secretary - ET Government". ETGovernment.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-01.