ஷேன் பிளாக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஷேன் பிளாக்
Shane Black by Gage Skidmore.jpg
பிறப்புதிசம்பர் 16, 1961 (1961-12-16) (அகவை 59)
பிட்ஸ்பர்க், பென்சில்வேனியா, பென்சில்வேனியா, ஐக்கிய அமெரிக்கா
தேசியம்அமெரிக்கன்
படித்த கல்வி நிறுவனங்கள்கலிபோர்னியா பல்கலைக்கழகம் (இளங்கலை)
பணி
செயற்பாட்டுக்
காலம்
1986–இன்று வரை
குறிப்பிடத்தக்க படைப்புகள்
பெற்றோர்பால் பிளாக்
பாட்ரிசியா ஆன் பிளாக்
உறவினர்கள்டெர்ரி பிளாக் (சகோதரர்)

ஷேன் பிளாக் (ஆங்கில மொழி: Shane Black) (பிறப்பு: திசம்பர் 16, 1961) என்பவர் அமெரிக்க நாட்டு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் நடிகர் ஆவார். இவர் லெத்தல் வெப்பன் (1987), தி மான்ஸ்டர் ஸ்குவாட் (1987), தி லாஸ்ட் பாய் ஸ்கவுட் (1991), லாஸ்ட் ஆக்சன் ஹீரோ (1993) போன்ற பல திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார்.[1] நடிகராக இவர 1987 ஆம் ஆண்டு வெளியான பிரிடேட்டர் என்ற திரைப்படத்தில் 'ரிக் ஹவ்க்கின்ஸ்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர் 2005 ஆம் ஆண்டு 'கிஸ் கிஸ் பேங் பேங்' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதை தொடர்ந்து அயன் மேன் 3 (2013), தி நைஸ் கைஸ் (2016),[2] த பிரிடேட்டர் (2018)[3][4] போன்ற படங்களை எழுதி மற்றும் இயக்கியுள்ளார். 2020 ஆம் ஆண்டு நிலவரப்படி இவர் இயக்கிய அயன் மேன் 3 என்ற திரைப்படம் உலகளவில் அதிக வசூல் செய்த இருபதாவது படமாக உள்ளது.[5]

திரைப்படம்[தொகு]

ஆண்டு தலைப்பு இயக்குநர் எழுத்தாளர் தயாரிப்பாளர் குறிப்புகள்
1987 லீத்தல் வெப்பன் இல்லை ஆம் இல்லை
மான்ஸ்டர் ஸ்குவாட் இல்லை ஆம் இல்லை
1989 லீத்தல் வெப்பன் 2 இல்லை கதை இல்லை
1991 தி லாஸ்ட் பாய் ஸ்கோவுட் இல்லை ஆம் நிர்வாகி
1993 லாஸ்ட் ஆக்சன் ஹீரோ இல்லை ஆம் இல்லை
1996 லாங் கிஸ் குட்நைட் இல்லை ஆம் ஆம்
2005 கிஸ் கிஸ் பேங் பேங் ஆம் ஆம் இல்லை இயக்குனராக அறிமுகம்
2006 எ.வ்.ஓ.ல். இல்லை ஆம் நிர்வாகி குறும்படம்
2013 அயன் மேன் 3 ஆம் ஆம் இல்லை
2016 தி நைஸ் கைஸ் ஆம் ஆம் இல்லை
2018 த பிரிடேட்டர் ஆம் ஆம் இல்லை

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷேன்_பிளாக்&oldid=3302279" இருந்து மீள்விக்கப்பட்டது