பிரிடேட்டர் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிரிடேட்டர்
Predator
இயக்கம்ஜான் மெக்டீர்னர்
தயாரிப்பு
  • லாரன்ஸ் கோர்டன்
  • ஜோயல் சில்வர்
  • ஜான் டேவிஸ்
கதை
  • ஜிம் தாமஸ்
  • ஜான் தோமஸ்
இசைஆலன் சில்வேஸ்ட்ரி
நடிப்பு
ஒளிப்பதிவுடொனால்ட் மாக் ஆல்பின்
படத்தொகுப்பு
  • ஜான் எஃப். லிங்க்
  • மார்க் ஹெல்ப்ரிச்
விநியோகம்20ஆம் சென்சுரி ஃபாக்ஸ்
வெளியீடுசூன் 12, 1987 (1987-06-12)
ஓட்டம்107 நிமிடங்கள்[1]
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$15–18 மில்லியன்[2][3]
மொத்த வருவாய்$98.3 மில்லியன்[2][3]

பிரிடேட்டர் (Predator) என்பது 1987 ஆண்டைய அமெரிக்க  அறிபுனை அதிரடித் திரைப்படமாகும், இப்படமானது சகோதரர்களான ஜிம் மற்றும் ஜான் தோமஸ் ஆகியோரால் எழுதப்பட்டு, ஜான் மெக்டெர்னானால் இயக்கப்பட்டது.[4] இப்படத்தில் நடு அமெரிக்காவில் குறிப்பிடப்படாத ஒரு நாட்டில் கெரில்லா கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தில் பணயக் கைதிகளை மீட்கும் பணியில் ஈடுபடும் உயர்நிலை இராணுவ மீட்பு குழு தலைவராக ஆர்னோல்டு சுவார்செனேகர் நடித்துள்ளார்.[notes 1] இவரது குழுவை தொழில்நுட்பரீதியாக மேம்பட்ட வேற்றுலக உயிரி வேட்டையாடுகிறது. இந்த பிரிடேட்டர் கதையானது  1984 ஆம் ஆண்டு, ஹண்டர் என்ற பெரில் எழுதப்பட்டது. படப்பிடிப்பானது 1986 மார்ச்-சூன் காலகட்டத்தில் துவங்கியது, சிறப்பு உயிரினமானது ஸ்டான் வின்ஸ்டனால் வடிவமைக்கப்பட்டது.

படத்தின் தயாரிப்புச் செலவு சுமார் $ 15 மில்லியன் ஆகும். படத்தை 20ஆம் சென்சுரி ஃபாக்ஸ் நிறுவனம் அமெரிக்காவில் 1987 சூன் 12 அன்று வெளியிட்டது, அதில் $ 59,735,548 வசூலித்தது.  துவக்கத்தில் இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தொடர்ந்து வந்த ஆண்டுகளில், இந்தத் திரைப்படத்தின் மீதான விமர்சகர்களின் மனப்பான்மை நேர்மறை ஆனது, மேலும் இது பல "சிறந்த" பட்டியல்களில் இடம்பிடித்ததோடு, தற்போது எல்லா காலத்திற்குமான  சிறந்த அதிரடிப் படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.[5] இதன் மூன்று தொடர்ச்சிகளாக, பிரிடேட்டர் 2 (1990), பிரிடேட்டர்ஸ் (2010) மற்றும் The Predator (2018) ஆகிய படங்கள் வெளியாயின.

கதைச்சுருக்கம்[தொகு]

நடு அமெரிக்காவில் கெரில்லா போராளிகளிடம் உள்ள பணயக் கைதிகளை மீட்கப்போகும் அதிரடிப் படை வீரர்கள், அங்கே காட்டில் தொழில் நுட்டப்தில் மேம்பட்ட அயல்கிரக வாசியின் வேட்டைக்கு ஆளாகின்றனர். அதை அழிக்க கதாநாயகன் மேற்கொள்ளும் அதிரடி சாகசமே இதன் கதை.

குறிப்புகள்[தொகு]

  1. The film and its sequel Predator 2 only confine the setting to Central America while the novelization of the first film is set in the fictional country of Val Verde. The later film Predators states the events of the first film occurred in the Central American country of Guatemala.

மேற்கோள்கள்[தொகு]